For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்டோ ஓட்டுநர் செந்திலும் ஏடிஎம்-மை தேடி அலையும் பயணி கவுண்டமணியும்

ஏடிஎம்மை தேடி அலையும் கவுண்டமணியுடன் மல்லுகட்டும் செந்தில்- ஒரு கற்பனை.

By Mathi
Google Oneindia Tamil News

கவுண்டர்: டேய் 500 ரூபாய் தலையா... ஆட்டோ வருமாடா

செந்தில்: ஹலோ மிஸ்டர்... நீங்க 1000 ரூவா கொடுத்தாலே வர முடியாது

கவுண்டர்: ஏனுங்க ஆட்டோ வருமான்னு கேட்டேனுங்க...

செந்தில்: கீப் திஸ் ரெஸ்பெக்ட்டு... ஓகே எங்க போகனும்?

கவுண்டர்: ஏடிஎம்-.க்கு சார்

Goundamani and Senthil discuss on Currency ban

செந்தில்: எந்த ஏடிம்-க்கு? திறந்ததா? பாதி மூடியதா? முழுசா அடைச்சதா? போர்டு தொங்கவிட்டதா? போர்டே தொங்கவிடாம அலையவிடுறதா? வெளக்கமாக சொல்லனும்

கவுண்டர்: அட கொடுமையே! இப்படியெல்லாம் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்கே... இதெல்லாம்..

செந்தில்: ஹலோ நீங்க பணம் எடுக்கப் போகனும் அவ்வளவுதானே? அதைவிட்டு தேவையில்லாம பேசக் கூடாது.

கவுண்டர்: அய்யோ சாமீ..... நானெல்லாம் போய் திட்டுவேனுங்களா... நானொரு தேசபக்த திலகமுங்க.. அம்புட்டு பக்தியோ பக்தி... ஆமாங்க தேசபக்திங்கோ...

செந்தில்: அப்படி ஒழுங்கா இருக்கனும்... இல்லைன்னா வதந்தி கிளப்புகிறார்னு போலீசில் பிடிச்சு கொடுத்துடுவேன்..

கவுண்டர்: என்னது வதந்தியா... ஓஹோ அப்ப அந்த வதந்தி.... இப்ப இந்த வதந்தி.... மாசம் ஒரு கட்சிக்காரனுங்க போலீசை வதந்தியை வெச்சே மிரட்டுனா மிஸ்டர் பொதுஜனம் என்னதான் ஆகுமுங்க?

செந்தில்: ஹலோ வண்டியில் ஏறுங்க...கண்டதையும் பேசாதீங்க

கவுண்டர்: சரிங்க ஆபீசர்.... காலக் கொடுமைடா! ஆட்டோக்காரனையெல்லாம் ஆபீசர் போட வெச்சுட்டாங்களே

செந்தில்: மிஸ்டர் ஒரு கண்டிஷன்...

கவுண்டர்: அய்யோ..... அதுவேறயா

செந்தில்: செல்லாத 500, 1,000 எங்கிட்ட கொடுக்கக் கூடாது... 50, 100 தான் வாங்குவோம்னு போர்டு வெச்சிருக்கேன்.. அப்புறம் 2,000 ரூபா புது நோட்டெல்லாம் தரப்படாது...

கவுண்டர்: ஹலோ சார் நீங்க பிஎம் சப்போர்ட்டராக இருந்துகிட்டே அப்படியெல்லாம் பேசப்படாதுங்க...

செந்தில்: அதுவேற இதுவேற... அது சித்தாந்தம்.... இது வயித்தாந்தம்...

கவுண்டர்: ஓ அப்படீங்களா? உங்க தேசபக்தி, வதந்தி வேஷம் எல்லாமே எங்களை மிரட்டத்தானுங்களா.... இன்னிக்கு இருக்குங்க கச்சேரி... சார் முதலில் திண்டுக்கல்லோட நட்டநடு செண்டரில் இருக்கிற வரதராஜா காம்பளக்ஸுக்கு வண்டியை வுடுங்க..

செந்தில்: ஓகே

கவுண்டர்: வரதராஜா காம்ப்ளக்ஸில் எல்லாமே ஏடிஎம்களுமே மூடியிருக்கே... ஓகே பெரிய இண்டியன் பேங்க் போங்க சார்...

செந்தில்: ஓகே சார்.. அங்க கூட்டம் இருக்கும்... இருந்தாலும் பணம் கிடைச்சிடும்...

கவுண்டர்: நீங்க போங்க சார்... நாம பார்க்காத கூட்டமா

செந்தில்: சார்.. இவ்ளோ கூட்டமா இருக்கே... கொஞ்சம் எட்டுக்கா போனா 2 ஏடிஎம் இருக்கு எட்டிப் பார்க்கலாமா?

கவுண்டர்: நீங்க சொல்லிட்டா அப்பீலே இல்லீங்கண்ணா... மவனே தேசப்பக்தி கிளைமாக்ஸ் இருக்குடி உனக்கு

செந்தில்: என்னசார் இங்கயும் ஏடிஎம் மூடியிருக்கு பெரிய இண்டியன் பேங்க் போயராலாமுங்களா?

கவுண்டர்: நோ சார்.... என்னால கியூவில் நிக்க முடியாது... நாளைக்கு பார்த்துக்கலாம்..

செந்தில்: நோ இஸ்யூஸ்.... மொத்தம் 180 ரூவா... ஒரு 20 ரூவா சேர்த்து...கொடுங்க சார்

கவுண்டர்: ஓஹோ... 180 ரூவாயும் சேர்த்து 20 ரூவாயும்... இந்த ஊர்ல மீட்டரே கிடையாது எப்படி சார் கரெக்டா 180 ரூவா சொல்றீங்க

செந்தில்; ஹி...ஹி....அது தோராயமான்னே... ரயில்வே கேட்டுக்கு அங்கிட்டு இருந்து டவுனுக்கு வந்தா 50 ரூபா.. டவுனில் இருந்து ஜிஎடின் காலேஜ் வரைன்னா ரூ130ன்னு நாங்களே பிக்ஸ் பண்ணிட்டோமுங்க..

கவுண்டர்: ஓஹோ... மீட்டர் போட்டா 25 ரூபா கூட வராத இடத்துக்கு 50, 100ன்னு வசூலா? இருடி மவனே... மொத்தமா சூடு வெக்கிறேன்...

செந்தில்: அதைவிடுங்க சார்... என் சவாரி காசுதாங்க...

கவுண்டர்: அதாகப்பட்டது மிஸ்டர் தேசபக்தி திலகம் சார்.... நம்ம பிரைம் மினிஸ்டர் சாரோட அதிரடி... நல்லா கவனிச்சுக்குங்க அதிரடி....... நடவடிக்கையின் எபெக்ட் எப்படின்னு நாம ரெண்டு பேரும்தான் ஊரெல்லாம் சுத்தி பார்த்தோம்தான?

செந்தில்: ஆமா சார்...அங்கிட்டு இங்கிட்டுன்னு அலைச்சல்தான் சார்

கவுண்டர்: உங்களுக்கு அலைச்சல்... எனக்கு பெரும் ஏமாற்றம் இல்லையா?

செந்தில்: யெஸ் சார்...

கவுண்டர்: தேசபக்தியாரே! நம்ம பிரதமர் இன்னொன்னும் சொல்லியிருக்கார்....அந்த சேதி தெரியுமோ நோக்கு?

செந்தில்: பீதியடைந்தவராக ..... என்னது?

கவுண்டர்: அதாவது மகாஜனங்களே... இந்த துன்பம் அதாவது இந்த துயரம்... எல்லாவற்றையும் 50 நாட்களுக்கு தாங்கனும்... அதுதான் தேசபக்தின்னும் சொல்லியிருக்கார்

செந்தில்: ஆமா சொல்லியிருக்கார்... அதுக்கு

கவுண்டர்: கரெக்டா பாயிண்ட் பிடிச்சுட்டடா 1,000 ரூவா தலையா... எங்கிட்ட பணம் இருக்கு... அக்கவுண்ட்ல... ஆனால் ஏடிஎம்ல பணம் இல்லை.. அதனால கையில நயா பைசா இல்லை... நீ கூட்டிட்டு வந்த சவாரிக்கு எப்படி பணம் தர முடியும்?

சோ.... நானும் நீயும் இந்த தேசத்தின் சோ கால்டு குடிமகன்கள்... பிஎம் சொன்ன மாதிரி துயரங்களை தாங்கிக் கொள்ளனும்னு சொல்றேன்...

செந்தில்: ஆக எனக்கு நிச்சயமா பணம் தரப்போறது இல்லை...

கவுண்டர்: ஆமாடா செல்லாத ரூபாய் நோட்டு தலையா.... தேசபக்தியெல்லாம் பேசினல... இந்த துன்பம் துயரம் எல்லாத்தையும் தாங்கிக்கோ... தாங்கிக்கோ... தாங்கிக்கோ..

அடுத்த 50 நாளில் என்கிட்ட சிக்கினா இதுதாண்டி உனக்கு கெதி..... ஓடிப் போய்டு இங்க நிக்காத...

என்கிட்டேயே டகால்டியாடா!

English summary
Here the Goundamani and Senthil comeday on Currency ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X