புலி வேட்டை!
Subscribe to Oneindia Tamil
வீரமுத்து புலி வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அவரது மனைவி ஆரத்தி எடுத்து, வீரத் திலகம் எல்லாம் இட்டு பெரும் பில்ட் அப் செய்து அவரை அனுப்பி வைத்தார்.
போய், புலியோடு வருகிறேன் என்று கூறிவிட்டு துப்பாக்கியோடு வாசல் வரை போன வீரமுத்து அதே வேகத்தில் திரும்பி வந்தார்.
என்னங்க.. என்னாச்சு என்று மனைவி கேட்க, பதிலே சொல்லாமல் மீண்டும் வாசல் வரை போய்விட்டுத் திரும்பி வந்தார் வீரமுத்து.
இப்படியே அரை மணி நேரம் ஓடிவிட்டது.
கடுப்பான மனைவி, ஏங்க என்ன தான் ஆச்சு.. ஏன் இப்படி வாசல் வரை போயிட்டு போயிட்டு திரும்பி வர்றீங்க என்று கடுப்புடன் கேட்க
ஒன்னுமில்லை அம்மணி, வாசல்ல பக்கத்துல ஒரு நாய் படுத்துக்கிட்டு இருக்கு.. அதான் போக பயமா இருக்கு என்றார் வீரமுத்து.












Click it and Unblock the Notifications