Joke : அடடா.. செம புகழ்ச்சியா இருக்கே.. குடிகாரன் ஜோக்!
சென்னை: ரோடு ஓரங்களில் குடிகாரர்கள் உருண்டு கிடப்பதை பலரும் பார்த்திருப்போம். அவர்கள் தனியாக இருந்தாலும் ஏதோ பேசி சிரிப்பதையும் பார்த்திருப்போம். அப்படி அவர்கள் சிரித்த சில ஜோக்குகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
பார் ஒன்றில் ஒருவன் தனியாக குடித்து கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு திடீரென ஒரு குரல் கேட்கிறது.

ஏய்.. அங்க பார்த்தியா.. அவன் போட்ருக்க ஷர்ட் எவ்ளோ அழகா இருக்கு..
ஷர்ட் மட்டுமா.. அவன் டை கூட அழகா இருக்கு..
இதை கேட்ட, அந்த குடிகாரன் சுற்றி சுற்றி பார்க்கிறான். யாரும் அவன் கண்களுக்கு தெரியவில்லை
மீண்டும்,
அவனோட ஹேர் ஸ்டைல் பார்த்தியா? அதே குரல்
ஷாக் ஆன குடிகாரன், பார் அட்டெண்டரை பார்த்து நடந்ததை சொல்ல,
அவன், சார்.. அது கடலை, காம்ப்ளிமெண்ட்ரிக்காக (Complementry) கொடுத்தது.
ஒரு குடிகாரன் பாரில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தான். கொஞ்ச தூரம் நடந்ததும் தெருவில் போகும் ஒருவனை பார்த்து,
ஹலோ.. பிரதர்..
என்ன..
நான் தான் இந்த உலகத்தில் மிகச் சிறந்த பாடகர் தெரியுமா?
அப்படி யார் சொன்னாங்க..
இப்போ நான் பாடும்போது அந்த தெருவுல இருந்த நாய் குரைத்து கொண்டே ஓடிச்சே..
ஆ..
நண்பர்களை கூப்பிட போயிருக்கு...!!!
பாரில் குடிகாரன் அதிக நேரமாக குடித்து கொண்டே இருந்தான். அவன் எழுந்து நிற்கும்போதே தரையில் தவறி விழுந்தான்.
பார் அட்டெண்டர் அவனை பார்த்து, சார் நீங்க ரொம்ப குடிச்சிருக்கீங்க.. வழுக்குது பாருங்க..
குடிகாரன் சொன்னான், ச்ச்.. நான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கேன், உங்கள் தரை தான் வழுக்கிவிடுது...
பார் அட்டெண்டர்: ???
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications