நான் பார்த்ததைச் சொன்னால்!
அந்த டீச்சர் மாணவர்களுக்கான அசைன்மென்ட்டை போர்டில் எழுதத் தொடங்கினார். அப்போது வகுப்பறையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.
உடனே திரும்பிய டீச்சர், ஏய் ஜான் ஏன் சிரிச்சே என்றார். அதற்கு ஜான், டீச்சர் நீங்கள் போர்டில் எழுதும்போது உங்களுடைய ரெண்டையும் பார்த்துட்டேன் என்றான்.
கோபமடைந்த டீச்சர், முதல்ல வெளியே போ. 3 நாட்களுக்கு நீ வகுப்புக்கு வரக் கூடாது என்றார்.
பிறகு மீண்டும் போர்டு பக்கம் திரும்பி எழுதத் தொடங்கினார். மறுபடியும் சிரிப்பொலி. இந்த முறை அது பால்.
ஏன் பால் சிரிச்சே என்றார் கோபத்துடன். அவனும் ஜான் சொன்னது போலவே சொன்னான். கோபமடைந்த டீச்சர் நீ மூன்று வாரத்திற்கு வகுப்பு வரக் கூடாது, கெட் அவுட் என்று கத்தினார்.
பின்னர் மீண்டும் எழுதுவதற்காக திரும்பியபோது கையில் இருந்த டஸ்ட்டரை கீழே போட்டு விட்டார். அதை எடுப்பதற்காக அவர் குணிந்தபோது மறுபடியும் சிரிப்பொலி.
டக்கென அவர் கோபத்துடன் திரும்பிப் பார்த்தார். அப்போது வகுப்பிலிருந்து ஜானி எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தான். அதைப் பார்த்த டீச்சர், எங்கே போறே ஜானி என்றார்.
அதற்கு அவன், டீச்சர், நான் பார்த்ததைச் சொன்னால், நீங்க ஸ்கூலை விட்டே நீக்கி விடுவீர்கள். அதனால்தான் நானே எழுந்து வெளியே செல்கிறேன் என்றான்.












Click it and Unblock the Notifications