புரத சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி.. இட்லி செய்தால் சூப்பராக இருக்கும்! குட்டீஸுக்கு பிடிக்கும்!
சென்னை: கருப்பு கவுனியை கொண்டு விதவிதமாக ரெசிபிகளை செய்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சத்தான உணவை கொடுத்தோம் என்ற திருப்தி ஏற்பட வேண்டும் என்றால் சில மெனக்கெடல்களை செய்ய வேண்டும்.
வெள்ளை அரிசிதான் உடலுக்கு கெடுதல் என்கிறார்கள். ஆனால் கருப்பு கவுனி அரிசியில் புரதம் அதிகம் இருப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் மெட்டபாலிசம் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த அரிசியை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். பாரம்பரியமான அரிசி ரகங்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம். முதலில் கருப்பு கவுனி அரிசி குறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த கருப்பு கவுனி அரிசியானது பெயருக்கேற்ப கருப்பு நிறத்தில் இருக்கும். அதை ஊற வைத்தால் ஊதா நிறத்தில் இருக்கும். இந்த அரிசி மூலம் பொங்கல், உப்புமா, சாதம் உள்ளிட்ட நிறைய வகை வகையான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். நிறம் கருப்பாக இருக்கிறதே என பார்த்தால் உடலுக்கு சத்து கிடைக்காமல் போய்விடும்.
கருப்பு கவுனி இட்லியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
4 கப் கருப்பு கவுனி அரிசி
1 ஒரு கப் முழு உளுந்து
தேவையான அளவு உப்பு
செய்முறை
கருப்பு கவுனி அரிசியை இரண்டு, மூன்று முறை கழுவிவிட்டு அதை 4 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அது போல் உளுந்தை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது. நீங்கள் எப்போது அரைக்க போகிறீர்களோ அந்த கணக்கை வைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்தை போட்டு வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அது போல் அரிசியை சற்று ரவை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உப்பு சேர்த்து நன்றாக கைகளால கலந்து விட வேண்டும். மறுநாள் இட்லி வார்க்க, தேவையான அளவு மாவை புளிக்க வைக்க எடுத்து வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட மாவை வெளியே வைத்துவிட்டு மீதமுள்ள மாவை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் காலையில் இட்லி தட்டுகளில் எண்ணெய் அல்லது நெய் தடவி அதில் மாவை ஊற்றி வேகவைத்தால் கருப்பு கவுனி இட்லி ரெடி.
இதற்கு தக்காளி சட்னி, அல்லது வெங்காய சட்னி, மிளகாய் பொடி வைத்து கொடுத்தனுப்பலாம். இல்லாவிட்டால் கேரட், பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி பட்டாணி, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை இட்லி மாவை தட்டி ஊற்றியவுடன் அதன் மேல் இந்த கலவையை வைத்து வேக வைத்தால் வெஜிடபிள் இட்லி ரெடி!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications