இட்லியே பிடிக்கலையா.. குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு தாங்க.. டிபன் பாக்ஸ் காலியாகிடும்!
சென்னை: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அதே நேரத்தில் புரதச் சத்து அதிகம் உள்ள பன்னீர் ஸ்டஃப்டு இட்லி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
வளரும் குழந்தைகளுக்கு அனைத்து விதமான விட்டமின்கள், மினரல்கள், புரதம், கொழுப்பு உள்ளிட்டவை சரிவிகிதாச்சாரத்தில் இருத்தல் வேண்டும். அவர்களுக்கு புரதச் சத்துகளும் நார் சத்துகளும் அவசியம் தேவை.
புரதச் சத்துகள் பால், தயிர், பாலாடை கட்டி, சிக்கன், மீன், இறால், லாப்ஸ்டர் இறால், முட்டை, பருப்பு, சுண்டல் பயிறுகள் உள்ளிட்டவைகளில் இருக்கும். அது போல் பன்னீரிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தைகளுக்கு தேவையான புரதங்களை அன்றாடம் உணவில் விதவிதமாக சேர்த்துக் கொள்ளலாம். பன்னீர் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதை கொண்டு வகைவகையான ரெசிபிகளை செய்துக் கொடுக்கலாம்.
பன்னீர் இட்லி செய்ய தேவையான பொருட்களை பார்க்கலாம்
இட்லி மாவு- தேவைக்கேற்ப
பன்னீர் - 50 கிராம்
சோம்பு- கால் ஸ்பூன்
வெங்காயம்- 2
தக்காளி- 2
இஞ்சி, பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள்- தேவைக்கேற்ப
கரம் மசாலா - சிறிது
உப்பு- தேவைக்கேற்ப
மேத்தி இலைகள்- சிறிது அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:பன்னீரை துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கால் ஸ்பூன் சோம்பு சேர்த்துவிட்டு அது பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவேண்டும். அது வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

பின்பு துருவிய பன்னீரை சேர்த்து வதக்கிவிடவும். சுருண்டு கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மேத்தி இலைகளை கைகளால் சிறிது கசக்கி அதில் போட்டு விடவும்.
பின்னர் இட்லி பானையில் தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டுகளில் சிறிது அளவு மாவை ஊற்றி அதன் மேல் பன்னீர் கிரேவியை சிறிதளவு போட்டு அதன் மேல் மீண்டும் மாவு போடவும் . இப்படியே எத்தனை தட்டுகள் வேண்டுமோ அத்தனையிலும் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் இட்லி கரண்டியால் எடுத்து டிபன் பாக்ஸில் போட்டு கொடுக்க வேண்டும்.
இந்த பன்னீர் ஸ்டஃப்டு இட்லிக்கு தொட்டுக் கொள்ள எதுவுமே தேவைப்படாது. இதே போல் தோசையாகவும் ஊற்றி அதன் மேல் பன்னீர் கிரேவியை போட்டு பரப்பி மறுபக்கம் திருப்பாமல் எடுத்துவிடவும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications