பொய் சொல்லக் கூடாது பாப்பா!

Subscribe to Oneindia Tamil

ரமா உமா.. இருவரும் நல்ல தோழிகள்.. 5ம் வகுப்பு படிக்கிறார்கள். ரமாவுக்கு முன்கோபம் ஜாஸ்தி.உமா பொறுமைசாலி. ரமா தினமும் பள்ளி முடிந்து தன் வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வாள்.

அன்று ஒரு நாள் மரத்தின் மீது அவள் அமர்ந்துக் கொண்டு ஓநாய் வருகிறது என் ஆடுகளை யாராவதுக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டாள். அவளது குரலைக் கேட்டு அக்கிராமத்து மக்கள் அனைவரும் ஓடி வந்தனர். அவர்களில் ஒருவன் எங்கே ஓநாய் சொல் நாங்கள் அடித்து விரட்டி விடுகிறோம் என்றான். அதைக்கேட்டு அவள் சிரித்தாள். ஓநாயா அது எப்படி இருக்கும் என்றாள்.அவள் மீது ஆத்திரம் கொண்ட மக்கள் அவளைத் திட்டிவிட்டுச் சென்றனர்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா!

மறுநாள் இதைப் பள்ளியில் தன் தோழிகளிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள் ரமா. அதைக் காதில் வாங்கிக் கொண்டே அங்கு வந்த உமா நீ செய்தது பெரிய தவறு ரமா. இப்படிப் பொய் சொல்ல கூடாது எப்பொழுதும் உண்மையைப் பேச வேண்டும் இல்லையெனில் நீ பெரும் ஆபத்தைச் சந்திப்பாய் என எச்சரித்தாள். அவள் மீது கோபம் கொண்ட ரமா எனக்கே நி அட்வைஸ் பண்றியா என்று அவளை அடித்து விட்டாள்.

மறுநாளும் ஆடு மேய்ச்சலின் போது ஓநாய் வந்திருக்கிறது காப்பாற்றுங்கள் ப்ளீஸ் யாராவது இருக்கீங்களா காப்பாத்துங்க என்றுக் கத்தினாள். அவள் குரலைக் கேட்ட மக்கள் தங்கள் வேலைகளை விட்டு விட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவளின் குரலைக் கேட்டு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்து அவள் எதற்காக ஓடி வந்தீர்கள் என்று எகத்தாளமாகச் சிரித்தாள். இனி இவள் கூப்பிட்டால் வரவே கூடாது என்று மக்கள் நினைத்து அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.

இப்படியே பல நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் அவள் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது காட்டிலிருந்து ஒரு ஓநாய் வந்தது. அவள் அதைப் பார்த்துப் பயத்தில் யாராவது காப்பாற்றுங்கள் ஓநாய் வந்திருக்கிறது என்று அலறினாள். அவள் ஏற்கனவே இது போல் பலமுறைப் பொய் கூறியதால் அவள் பேச்சை யாருமே காதில் வாங்கவில்லை. அதனால் ஓநாய் அவளுடைய ஆட்டுக்குட்டிகள் அனைத்தையும் ஓநாய் சாப்பிட்டு விட்டுச் சென்றுவிட்டது. அவள் தான் பொய் கூறியதால் தான் ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டிகளை இழந்ததை எண்ணி வருந்தினாள்.

அதனால் குட்டீஸ்களா எப்பவும் பொய் சொல்லாதீங்க உண்மையை மட்டும் பேசனும் சரியா....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+