சிறுகதை: கண்டுபிடி, கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி..!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், யாருக்கெல்லாம் பெர்ரி டைல்ஸ் பிடிக்கும். சரி உங்களுக்காக இப்ப ஒரு குள்ள மனிதன் கதை படிக்கலாமா!
முன்னொரு காலத்தில் ஒரு காடு இருந்தது. அதன் அருகிலேயே ஒரு சிறிய ராஜாங்கமும் இருந்தது. அங்கு உள்ள காட்டில் சில பூதங்கள் வாழ்ந்து வந்தன. ராஜா சிறப்பாகவே சில வழிமுறைகள் வகுத்து, மக்களுக்கு தீங்கு வராமல் ஆட்சி செய்தார்.
அந்த நகரத்தில் ஒரு ஏழை தொழிலாளி வசித்து வந்தார், அவர்க்கு ஒரு மகள் இருந்தாள். அவள் மிகவும் அழகானவள். அந்த தொழிலாளி தற்பெருமை பேசுவது மட்டும் இல்லாமல் இல்லாத ஒன்றை மிகைபடுத்தி பேசி மற்றவர்களை ஏமாற்றுவார்.

ஒருநாள் ராஜாவிடம் ஒருவர் இவரின் நடத்தையை கூறி தண்டனை வழங்க கோரினர், மன்னரும் தொழிலாளிக்கு பாடம் புகுத்த வேண்டும் என அவரை வரவழைத்தார். தொழிலாளியோ ராஜாவிடம், ' ராஜா அவர்களே , என்னைப்பற்றி தெளிவுபடுத்துகிறேன். எனக்கு உலகிலேயே மிக அழகான மகள் ஒருவள் இருக்கிறாள், அவள் வைக்கபுல்லிலிருந்து தங்க நூலை நெய்யக்கூடிய திறமை வாய்ந்தவள்' என்றார். ராஜாவும் ஆச்சர்யப்பட்டு , ' ஓ அப்படியா, அது ஒரு பெரிய கலை ஆச்சே, உனது மகளை உடனே இங்கு அழைத்து வா' என உத்தரவிட்டார்.
தொழிலாளியும் மகளிடம் நடந்ததை கூறினார். அந்த பெண்ணோ , 'அப்பா என் இப்படி பொய் சொல்லி மாட்டிவிட்டிர்ககள் ராஜாவிடம் என்ன கூறுவது ' என சண்டையிட்டார். பிறகு அரணமனைக்கு பயந்து கொணடே சென்றனர் .
இருவரும் ராஜாவை பார்த்ததும் , ராஜாவோ ' நீ சொன்னது போலவே உன் மகள் அழகா இருக்கிறாள். அதோடு அவள் திறமையை சோதித்து பார்த்துவிடலாம் ' என்றார்.
ராஜா அந்த பெண்ணை ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைக்கோல் புல், நூல் இழைக்கும் இயந்திரம், ஒரு சக்கரம் இருந்தது. ராஜா , பெண்ணிடம் நாளை காலை நான் வரும்போது இது அனைத்தும் தங்க நூலாக இழைக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் இருவரையும் கொன்றுவிடுவேன் என்றார். காப்பாளர்களிடம் இவர்கள் தப்பிக்க நேரிடலாம் கவனமாக கண்காணியுங்கள் என உத்தரவிட்டார்.
அந்த பெண்ணோ செய்யவது அறியாது ஓ .. என அழுக ஆரம்பித்தாள். அவளின் சத்தத்தை கேட்டு அந்த அறையில் தீடிரென ஒரு வெளிச்சம் தோன்றியது. அவள் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் அப்போது அதில் ஒரு குள்ள மனிதன் தோன்றினான். அவனுக்கு பெரிய காதுகள் இருந்தது.
அவன், உனக்கு என்ன ஆச்சு, என் இப்படி அழுது, கூச்சலிடுகிறாய்' என்றான். அவள், ' என் அப்பா ராஜாவிடம் வைக்கோல் புல்லை தங்க நூலாக இழைப்பேன் என கூறிவிட்டார், எனக்கு இது என்ன என்று கூட அறியவில்லை என்றார். அவன், சரி நீ அழாதே இதை நான் செய்து தருகிறேன் ஆனால், அதற்க்கு பதிலாக என்ன தருவாய் ' என்றான். அந்த பெண் அவள் கழுத்தில் இருந்த நெக்ளசை கழட்டி அவனிடம் கொடுத்தாள்.
குள்ள மனிதன், சக்கரத்தின் முன் அமர்ந்து வைக்கோல் புல்லை அந்த இயந்திரத்தில் வைத்து இழைக்க ஆரம்பித்தான். அது தங்க நூலாக மாரி நூல்கண்டு நிறைந்தது . அந்த பெண்ணிற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அப்படியே மீதி இருந்த வைக்கோல்புல்லை திரிக்க ஆரம்பித்தான். மொத்தமும் முடிக்க விடிந்தும் விட்டது. அந்த பெண்ணிற்கோ உயிர் பிழைத்த சந்தோஷத்தில் குள்ள மனிதனுக்கு நன்றி கூறினாள். அவனிடம் உன் பெயர் என்ன என்றாள், அவன் சிரித்துகொண்டே அங்கு இருந்து மறைந்தான்.

ராஜாவுக்கோ அதை பார்த்ததும் இன்னும் ஆசை அதிகமானது. மாலை வேளையில் அந்த பெண்ணை இன்னொரு அறைக்கு அழைத்து சென்றான். அங்கு முன்பைவிட வைகோல்புல் அதிகமாக இருந்து. ராஜா அவளிடம், நாளை காலை வரும்போது இதை முடித்திருக்க வேண்டும் என உத்தரவிட்ட்டார். உயிர் பிழைத்தோம் என நினைத்த பெண்ணிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீது அவள் அழுகை ஆரம்பித்தாள்.
குள்ள மனிதன் அவள் முன் தோன்றி இந்த முறை அவளிடம் இருந்த மோதிரத்தை பெற்றுக்கொண்டு வேலையை செய்து முடித்தான்.
ராஜாவுக்கு இதை பார்த்ததும் இன்னும் ஆசை அதிகமாக ஒரு அறை முழுவதும் வைக்கோல் புல்லால் நிரப்பி இதை விடியும்போது முடித்திருக்க வேண்டும். இதை முடித்துவிட்டால் உன்னை எனது மனைவி ஆக்கி கொள்கிறேன் என்றார்.
அந்த பெண்ணோ என்ன செய்வது என அறியாமல் அழுகிறாள். மீண்டும் தோன்றிய குள்ள மனிதன் என்ன பதிலுக்கு தருகிறாய் என்றான். என்னிடம் எதுவும் இல்லை என மீண்டும் அழுகிறாள். குள்ள மனிதன் அவளிடம், நீ ராணி அனைத்தும் உனக்கு பிறக்கும் முதல் குழந்தையை எனக்கு கொடுத்துவிட வேண்டும் என சத்தியம் வாங்கி கொள்கிறான். அவளுக்கும் வேறு வலி இல்லாததால் சம்மதிக்கிறாள். அவனும் மொத வைக்கோல் புல்லையும் தங்க நூலாக மாற்றி கொடுக்கிறான். அந்த பெண்ணோ மறுபடியும் அவனிடம் நீங்கள் யார், உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறாள். சின்ன மனிதனோ மாயமாக மறைந்துவிட்டான்.
ராஜா இதை பார்த்து அவளை உன் திறமையை கண்டு வியந்தேன் , உன்னை மணந்து கொள்கிறேன் என்றார். அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குள்ள மனிதனுக்கு கொடுத்த வாக்கையும் அவள் மறந்து மகிழ்ச்சியாக இருந்தாள்.
சட்டென அவள் முன் தோன்றிய குள்ள மனிதனோ குழந்தையை கேட்கிறான். அவள் உனக்கு வேறு எது வேணும் என்றாலும் கேளு தருகிறேன் நான் இப்பொது ராணி ஆகிவிட்டேன் என்றாள். அவனோ, எனக்கு பொக்கிஷங்கள் வேண்டாம் அதெல்லாம் என்னிடமே இருக்கிறது என்றான்.
அவளோ அழ ஆரம்பித்தாள் என் மகள் மீது அதிக பாசம் வைத்து விட்டேன் அதற்க்கு பதிலா என்ன வேண்டும் என் கெஞ்சினாள். குள்ள மனிதனோ உனக்கு மூன்று நாள் தருகிறேன் அதற்குள் என் பெயரை சொன்னால் நான் பொய் விடுகிறேன் என்றான். ராணியோ சரி சரி நான் கண்டுபிடித்து விடுவேன் என்கிறாள். அவனும் மறைந்து விட்டான்.
ராணி ஒற்றர்களை அனுப்பி யாருக்கும் இல்லாத பெயர் கண்டுபிடித்து வர அனுப்பினாள். ஒருவர் கொடுத்த பட்டியலில் உள்ள பெயர்களை வரிசையாக குள்ள மனிதனிடம் கூறினாள் அவன் சிரித்துகொண்டே இல்லை என்று மறைந்தான். மற்ற நாடுகளில் யாருக்கும் இல்லாத பெயரை கண்டுபிடிக்க அனுப்பினாள். இரண்டாவது நாள் குள்ள மனிதன் தோன்றினான். ராணியோ எல்லா பெயர்களையும் கூறினாள் குள்ள மனிதனோ சிரித்துகொண்டே நாளை ஒருநாள் தான் உள்ளது, உன் குழந்தையை காப்பாற்றிக்கொள்ள என்று மறைந்தான்.
ராணிக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது ஒற்றன் ஒருவன் காட்டுக்குள் ஒரு குள்ள மனிதனை பார்த்தேன் அவன் நெருப்பு மூட்டி அதை சுற்றி வந்து ஆடிக்கொண்டே ஒரு பாடல் பாடினான். அதில்,
இன்று நான் சுடுவேன், நாளை நான் தயாரிப்பேன், ராணியின் குழந்தையை கொண்டு வருவேன், சந்தோசமாக இருக்கிறேன். என் பெயர் ரும்பெல்ஸ்டில்ஸ்கின். என்றான்.
ராணி மகிழிச்சியில் துள்ளி குதித்தாள். ஒற்றனுக்கு சன்மானம் அளித்தாள்.
சிறிய மனிதன் அவள் முன் தோன்றினான், என் பெயர் என்ன என்று கேட்டான் ராணி , அது ஜாக் ஆ இல்லை ராபின் ஹூட் ஆ என்று சொல்லலை சிரித்தாள். இல்லை இல்லை என்றான் சிறிய மனிதன். உங்கள் பெயர் ரும்பெல்ஸ்டில்ஸ்கின் என்றாள். சொன்னதும் குள்ள மனிதன் மறைந்தான். ராணி குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தாள்.












Click it and Unblock the Notifications