குழந்தை நீதி கதைகள்: ஸ்ட்ராபெர்ரி கண்ணே... விண்வெளி பெண்ணே... திருடித்தான் மாட்டிக்கொண்டேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், என்ன பண்றீங்க எல்லோரும்.. கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறீர்களா?.. சரி அதை விடுங்க இந்த வெயில்ல இருந்து தப்பிச்சு ஸ்ட்ராபெரிஸ் நிறைந்த மந்திர கிராமத்திற்கு போலாமா.. இந்த கதையில் உங்கள இமேஜின் பண்ணிக்கோங்க.. நம்ம இப்போ அந்த அழகான பெரிஸ் நிறைந்த கிராமத்துக்குள்ள என்டர் ஆகுறோம்.

அப்பப்பா.. அப்படியே பச்சை இலைகளுக்கு நடுவில் சிகப்பு நிற ஸ்ட்ராபெரிஸ் ஒரு பக்கம். அப்படியே இந்த பக்கம் வந்தா நல்ல நீல நிறங்களுக்கு இடையே பச்சை இலைகள் மட்டுமே ப்ளூ பெரிஸ் , எங்க பாத்தாலும் பெரிஸ் , பெரிஸ் . ஆமா நம்ம பெரிஸ் லாண்ட்க்கு வந்துருக்கோம். எப்படி இருக்கு பிரண்ட்ஸ். இது எல்லாம் நார்மல் பெரிஸ் இல்லை. இந்த பெரிஸ்க்கு நிறைய மந்திர குணங்கள் இருக்கு.

Fairy tale for kids in tamil : The strawberry thief

அங்கு வாழற மக்களை பெரிஸ் னு கூப்பிடுவாங்க. இவங்களுக்கு ஒரு தலைவன் இருக்கிறார். அவரை ஷெரிஃப் னு மக்கள் கூப்பிடுவாங்க. இப்போ அவரது வீட்டுக்கு போறோம் நாம். அந்த ஷெரிஃப் திடீரென பணக்காரன் ஆனவர். இவரது தோட்டத்தை பார்த்துக்கொள்ள ஒருவனை நியமித்து இருந்தார் ஷெரிஃப். அவன் பெயர் கிளின்டன். இவன் சிறு வயதில் இருந்தே அந்த தோட்டத்தை பராமரித்து வருகிறான். அவனுக்கு தோட்டத்தை பராமரிப்பது மிகவும் பிடிக்கும்.

அந்த கிராமத்தில் ஒருநாள் ஒருவரின் வீட்டில் இருந்த ஸ்ட்ராபெரிஸ் திருடு போயிருந்ததை பார்த்து அதிர்ந்தார். அவர் மனைவியிடம், 'இதை திருடி என்ன செய்ய போகிறார்கள். நாம் இதை பக்கத்துக்கு கிராமத்திற்கெல்லாம் இலவசமாக தானே அளிக்குறோம்' என்றார். அவரது மனைவி ,' ஆமாம் இதில் இருக்கும் மருத்துவ குணங்களுக்காக நாம் இதை அனைவருக்கும் இலவசமாக அளிக்கிறோம், இதை திருடுவதனால் என்ன லாபம் இருக்க போகிறது. அதுவும் இரவோடு இரவாக" என்றார். சரி நாம் ஷெரிஃப் இடம் சென்று புகார் கொடுக்கலாம் என்று கிளம்பினார்கள். அவரும் அதை யார் திருடுவார்கள் பார்க்கலாம் , அமைதியாக இருங்கள் என்றார். இரண்டு நாட்களில் மீண்டும் ஸ்ட்ராபெரிஸ் திருடு போவது நின்ற பாடில்லை. மக்கள் ஷெரிஃப் கிட்ட பொய் சொன்னார்கள். ஆனால் அவர் பேசுவது மழுப்பல் பதிலாக க்ளிண்ட் கு தெரிந்தது. ஒருவேளை இவரே திருடி இருப்பாரோ என்றெல்லாம் அவனுக்கு சந்தேகம் எழுந்தது. க்ளிண்ட், ஷெரிஃப் பின்னாடியே மறைந்து பின் தொடர ஆரம்பித்தான்.

அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதை அவனது தோழியிடம் சொல்வதற்காக விரைந்தான். அவளை பார்த்ததும் , 'ஸ்ட்ராபெரிஸ் திருடு போவது பற்றி தெரியும் அல்லவே உனக்கு " என்றான். அவளும் " ஆமாம் ஏன் என்னாயிற்று' என்றாள். சொல்கிறேன் கேள் நான் நேற்றிரவு ஷெரிஃப் முகத்தை மூடி கொண்டு எங்கோ செல்வதை பார்த்தேன். அவர் மக்கள் தோட்டத்தில் இருந்து பெரிஸ்களை திருடி கொண்டிருந்தார். நாம் இதை மக்களிடம் சொல்ல வேண்டும். நாளை மக்களவை கூடும்போது நாம் அவரின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்ட வேண்டும்' என்றான். அவளும் சரி என்பது போல தலையாட்டினாள்.

அவன் நடந்து சென்று கொண்டிருந்தான். ஒரு புதருக்குள் இருந்து யாரோ ஒருவர் அவனை தாக்குவதுபோல் உணர்ந்தான். அவனை யாரோ கடத்தி சென்று விட்டார்கள். 'தயவுசெஞ்சு இந்த மூட்டையில் இருந்து அவுத்து விடுங்கள். நானே உங்களுடன் வருகிறேன், துணியின் நாற்றம் குடலை பிரட்டுகிறது' என்றான் க்ளிண்ட். அவனை இறக்கி விட்ட இடம் மிகவும் விசித்திரமாக இருந்தது. தக்காளிக்குள் வீடு கட்டி சித்திரகுள்ளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவனுக்கு என்னை ஏன்டா தூக்கிட்டு வந்தீங்க என்பது போல் இருந்தது. அந்த தக்காளி வீட்டிற்குள் இருந்து இன்னொரு சித்திரக்குள்ளன் வந்தான். 'பயப்படாதே க்ளிண்ட். உன்னிடம் பேசுவதற்கு எங்களுக்கு வேறு வழியில்லை' என்றான் சித்திரக்குள்ளன். க்ளிண்ட்டிற்கு எதுவும் புரியவில்லை முழித்தான்.

சித்திரக்குள்ளன் தொடர்ந்தான். உங்கள் ஷெரிஃப் , மக்களிடம் எங்களிடம் குற்றவாளிகளாக காட்ட பார்க்கிறார். நீ அதை பற்றி உன் தோழியிடம் பேசி கொண்டிருந்தாய் அதனால்தான் உன்னிடம் எங்களுக்கு உதவி என்று எண்ணி உன்னை கடத்தினோம் என்றான். ' நான் என்ன செய்ய வேண்டும்' என்றான் க்ளிண்ட். ' உங்க கிராமத்தில் இருக்குற பெரிஸ் கு இவ்ளோ சக்தி எங்கள் முன்னோர்களால் தான் வந்தது, அவர்கள் ஒரு மோதிரத்தை உங்கள் ஊர் ஷெரிப் இடம் கொடுத்தார்கள். எங்கள் இனம் இருக்கும் இடங்களில் சக்தி குறைய ஆரம்பித்தது. எனவே நாங்கள் அந்த மோதிரத்தை ஷெரிஃப் இடம் கேட்டோம். அவர் முடியாது என மறுத்துவிட்டார். மேலும் பெரிஸை நாங்கள் திருடுவது போல மக்களிடம் காட்டுகிறார்' என்றான் சித்திரகுள்ளன்.

சரி நாளை மக்களவை வாருங்கள் நான் உதவுகிறேன் என்றான் க்ளிண்ட். மறுநாள் மக்களவை கூடியது. க்ளிண்ட் , ஷெரிஃப் இடம் பெரிஸ் திருடர்களை கண்டுபிடித்து விட்டேன் என்றான். அவர் பதற்றத்துடன், " அப்படியா எங்கே ' என்றார். அதற்கு முன் சில சாட்சிகள் வர வேண்டும் என்றான். க்ளிண்ட் சித்திர குள்ளர்களை அழைத்தான். அங்காங்கே வானத்தை கிழித்து கொண்டு வந்தார்கள். மக்கள் அவர்களை விசித்திரமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்தார்கள். அவர்களை பார்த்ததும் ஷெரிஃப் தப்பித்து ஓட பார்த்தார். க்ளிண்ட் பாய்ந்து அவரை பிடித்தான். கிளின்டன் தோழி அவர் கையில் இருந்த மோதிரத்தை கழட்டினாள். மோதிரம் பறந்து போய் சித்திரகுள்ளனின் தலைவனிடம் சென்றது. பெரிஸ் மேல் இருந்த சக்திகள் நீங்கியது.

மக்கள் சித்திர குள்ளர்களிடம் இதனால் பல மக்கள் பயனடைகிறார்கள் . அதை பறித்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டனர். ஷெரிப் சிறையில் அடைக்க பட்டார். சித்திரகுள்ளர்கள் க்ளிண்ட் ஐ புதிய ஷெரிஃப் ஆக்கினார்கள். மக்களுக்கு அவர்களது சக்தியில் இருந்து பெரிஸ் கு தேவையான சக்திகளை வழங்கினார்கள். அவர்களும் பழைய பெரிஸ் லேண்ட் கிடைத்த மகிழ்ச்சியில் நிம்மதியாக வாழ்ந்தனர். க்ளிண்ட் கிராமத்தையும் பாத்துக்கொண்டு, அவனது தோட்டத்தையும் நன்றாக பராமரித்து வந்தான். அதை சுற்றியுள்ள கிராமங்களும் ஹாப்பியாக இருந்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+