குழந்தை நீதி கதைகள்: அன்பு ஜெயிக்கும்னு நம்புறீங்களா.. அன்பு கண்டிப்பா ஜெயிக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ் , இன்னைக்கு என்ன கதை படிக்கலாம் னு யாருக்காவது ஐடியா இருக்குதா! சரி விடுங்க நானே சொல்றேன். அன்பு காட்டினால் அகிலத்தையே வெல்லலாம். சரி சரி கதைக்குள்ள போகலாம் வாங்க!

ஒரு காலத்துல ஒரு பணக்கார வியாபாரி ஒருவர் இருந்தார். அவருக்கு ஸ்வீட்டி , மிஸ்ட்டி, பியூட்டி என்ற மூன்று மகள்கள் இருந்தனர். மூவருமே மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டனர். வியாபாரி வருமானத்தில் மகள்கள் ஆசை படும் அனைத்தும் வாங்கி கொடுத்து வந்தார். மிஸ்ட்டியூம் , சுவீட்டியூம் நகை மற்றும் ஆடைகளில் அதிக ஆசை உள்ளவர்கள். பெயருக்கு ஏற்றவாறே பியூட்டி மிகவும் அழகானவள், அன்பானவள். பியூட்டி அவர்கள் போல் இல்லாமல் வீட்டில் தோட்டம் , சின்ன சின்ன வேலைகள் என அதில் ஆர்வமாக இருந்தாள்.

Kids story in tamil : Beauty and the Beast

வியாபாரி அடிக்கடி வியாபாரம் செய்ய கடல் வழி பயணம் மேற்கொள்வார். ஒருநாள் அப்படி செல்லும் பொது கடுமையான புயல் தாக்க ஆரம்பித்தது. அவரது கப்பல் மற்றும் வியாபார பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. ஊருக்கு திரும்பும்போது அவரது உயிர் மட்டுமே எஞ்சியது. வீட்டுக்கு வந்து மகள்களிடம் புயலால் தாங்கள் ஏழையாகிவிட்டோம் என்பதை கூறினார். மேலும் முதலீடு செய்தவர்கள் வீட்டில் மீதம் இருந்த பொருட்களை எடுத்து சென்றனர். சுவீட்டியும், மிஷ்டியூம் சோகத்தில் ஆழ்ந்தனர். பியூட்டி தந்தைக்கு ஆறுதல் கூறினாள்.

திடீரென ஒருநாள் ஒருவர் வந்து உங்கள் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது என்றார். வியாபாரியும் இனி கவலை எல்லாம் மாறி விடும் என மகள்களிடம் நான் போய் உங்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருகிறேன் என்றார். சுவீட்டி, மிஷ்ட்டி இருவரும் ஆடைகள் மற்றும் நகைகள் வேண்டும் என்றனர். வியாபாரி கடைசி மகளிடம் உனக்கு எதுவும் வேண்டாமா , கேள் நிச்சயம் வாங்கி வருகிறேன் என்றார். பியூட்டி அப்பா நீங்கள் நலமுடன் திரும்பி வந்தால் போதும் என்றாள். வியாபாரி மகளிடம் உனக்கு பிடித்ததை சொல் வாங்கி வருகிறேன் என கேட்டார். அழகான ரோஜா பூ ஒன்று வாங்கி வாருங்கள் என்றாள் பியூட்டி.

வியாபாரியும் கிளம்பி சென்றார். ஆனால் அவர் செல்வதற்குள் அவரது பொருட்கள் சூறையாடபட்டன . கப்பல் மட்டுமே நின்றிருந்தது. அவர் சோகமாக நிலைமை சரி ஆகவில்லை என்று சிந்தனையில் நடக்க ஆரம்பித்தார். அவர் கவலையால் செல்லும் வழியை மறந்து நடந்து சென்றார். அங்கு ஒரு பெரிய வாயில் கதவை கண்டார். அது தங்கத்தாலேயே செய்து இருந்தது. அவர் அருகில் சென்றதும் அது தானாகவே திறந்தது. அவர் உள்ளே சென்றார். வழியில் ஆரஞ்சு மரங்களாக அழகிய தோட்டம் இருந்தது. அவர் அப்படியே உள்ளே நடக்க ஆரம்பித்தார்.

அங்கு அழகான ரோஜா பூ தோட்டத்தை பார்த்தார். சட்டென அவருக்கு பியூட்டியின் நியாபகம் வந்தது. அவர் உடனே அந்த பூவை பறித்தார். அங்கு ஒரு மிருகத்தின் சத்தம் கேட்டது. வியாபாரிக்கு பயம் வந்தது. சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தார். அது ஒரு மனித உருவம் கலந்த மிருகம். அதற்க்கு தலையில் இரண்டு கொம்புகள் இருந்தன. அதன் பற்கள் மிக கூர்மையாக இருந்தன. அதன் கை விரல்களில் நகங்கள் பெரியதாக இருந்தன. அது ஒரு பீஸ்ட் போல இருந்தது. வியாபாரி நடுங்க ஆரம்பித்தார்.

அது வியாபாரியை பார்த்து நீ உள்ளே வந்ததே தவறு. உனக்கு என்ன தைரியம் இருந்தால் என் பூக்களை பறிப்பாய் என்றது. அதன் சத்தத்தை கேட்ட வியாபாரி பயத்தின் உச்சத்திற்கே சென்றார். அவரோ நடுங்கி கொண்டே என் மகளுக்கு இந்த பூக்கள் மிகவும் பிடிக்கும் அவள் ஆசைப்பட்டால் என்பதால் பறித்தேன் மன்னித்து விடுங்கள் என்றார். பீஸ்ட் அதன் பெரிய கண்களை விரித்து மகளா என்றது. ஆமாம் எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர் என்றார் வியாபாரி. பீஸ்ட் உன்னை கொல்லும் அளவிற்கு எனக்கு கோபம் உள்ளது. ஆனால் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் முடிந்தால் பிழைத்து கொள் என்றது.

வியாபாரி அமைதியாக பீஸ்ட்டை பார்த்தார். அது சொன்னது உன் மகள்களில் ஒருவரை என்னிடம் அழைத்து வா. ஆனால் அவர்களிடம் உண்மையை சொல்லி அல்லது வர வேண்டும். அவர்களின் விருப்பத்தோடு இங்கு வர வேண்டும். அப்படியெனில் உன்னை உயிருடன் விடுகிறேன் என்றது. வியாபாரிக்கு சிந்தனையில் எந்த பெண் தனக்காக விரும்பி உயிரை தருவாள் என எண்ணிக்கொண்டு இருந்தார். பீஸ்ட் நான் உனக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன் அதற்குள் உன் ஒரு மகளுடன் நீ வரவேண்டும். அப்படி நீ வரவில்லை என்றால், உன்னை தேடி வந்து கொன்று விடுவேன் என்றது. அவரும் ஒப்பு கொண்டு கிளம்பினார். பீஸ்ட் அவருக்கு வேகமாக ஓடும் குதிரை ஒன்றை அளித்தது.

அவரும் அதில் பயணித்தார். கண் மூடி திறக்கும் நேரத்தில் வீட்டிற்கே சென்று விட்டார் வியாபாரி. அப்பாவை பார்த்ததும் மகள்கள் குஷியாக ஓடி வந்தனர். அவரது வாடிய முகத்தை பியூட்டி மட்டுமே கவனித்தாள். நடந்ததை எல்லாம் மகள்களிடம் சொல்லி பியூட்டி இடம் அந்த ரோஜா பூவை கொடுத்தார். மற்ற இருவருமே இவளால் தான் நடந்தது , உனக்காக பூ பறிக்கவில்லை என்றால் அப்பாவிற்கு இது நேர்ந்திருக்காது என கோவமாய் பேசினார்கள். பியூட்டியோ சிறிதும் தாமதிக்காமல் அப்பா நாம் செல்லலாம் உங்களுக்காக நான் அங்கு செல்கிறேன் என்றாள்.

இருவரும் குதிரையில் ஏறி அமர்ந்ததும் அது இறக்கைகளை விரித்து பறக்க ஆரம்பித்தது. இருவரும் அந்நகரத்தின் அழகை ரசித்து கொண்டே அந்த பெரிய மாளிகையை அடைந்தனர். இருவரும் டேபிளில் இருந்த உணவை உண்டனர். அப்போது பீஸ்ட் வரும் சத்தம் கேட்டது. பியூட்டிக்கு பயமாக இருந்தது இருந்தாலும் தைரியமாக இருந்தாள். பீஸ்ட் , பியூட்டியிடம் நீ விருப்ப பட்டுத்தானே இங்கு வந்தாய் என்றது. பியூட்டி பொறுமையாக ஆமாம் மேஜெஸ்ட்டி என்றாள். பீஸ்ட் வியாபாரியிடம் இனி நீ கிளம்பலாம் வெளியே குதிரையில் உனக்கு தேவையான தங்க நகைகள் மற்றும் பொருட்கள் இருக்கிறது என்றது. அவரும் மகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

பீஸ்ட் சொன்னது மேல உனக்கு அறை இருக்கிறது நீ அங்கு தங்கிகொள் , எதுவும் தேவையெனில் கூப்பிடு செய்கிறேன் என்றது. அவளும் அந்த அறைக்கு சென்றால் அது மிகவும் அழகாக ஒரு இளவரசிக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் இருந்தது. தினமும் இரவு பீஸ்ட் பியூட்டியிடம் குட் நைட் சொல்லி தூங்க செல்லும். காலை எழுந்து தோட்டத்தை சுத்தி வருவாள். சாப்பிட்டுவிட்டு தூங்க செல்லும் முன் பீஸ்ட் குட் நைட் சொன்னதும் அவளது அறைக்கு சென்று தூங்குவாள். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் பீஸ்ட் உனக்கு இங்கு இருப்பது விருப்பம் தானே என்றது. பியூட்டி ஆமாம் என்றாள். சரி என்னை திருமணம் செய்து கொள்வாயா என்றது பீஸ்ட் . பியூட்டி பயந்தாள் . பீஸ்ட் பதில் சொன்னால் போதும் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் என்றது. பியூட்டி முடியாது என்றாள்.

சில காலம் சென்றது . பீஸ்ட் மீண்டும் அதே கேள்வியை கேட்டது. பியூட்டி முடியாது என்று கூறிவிட்டாள். பீஸ்ட் குட் நைட் சொல்லிவிட்டு சோகமாக பியானோ வாசிக்க தொடங்கியது. ஆனால் பீஸ்ட் இன்னும் மெருதுவானதாக மாறியது. அவளிடம் அன்பாய் நடந்தது. அவர்கள் அதிகமாக பேசி கொண்டார்கள். பீஸ்ட் மறுபடியும் என்னை திருமணம் செய்து கொள்வாயா என்றது. பியூட்டியும் முடியாது என்றாள். நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் பியூட்டி சோகமாக இருந்ததை பீஸ்ட் கவனித்தது. அவளிடம் நீ நன்றாக இருக்கிறாயா, உன் முகத்தில் என்றும் இல்லாத கவலை தென்படுகிறது என்றது. பியூட்டி ஆமாம் எனக்கு என் தந்தை , சகோதரிகள் நியாபகமாக இருக்கிறார்கள் என அழ ஆரம்பித்தாள். பீஸ்ட் அவள் அழுவதை தாங்க முடியாமல் ஒரு மோதிரத்தை அவளிடம் கொடுத்தது. இதை போட்டுகொண்டு தூங்கு விடியும்பொழுது நீ உன் வீட்டில் இருப்பாய் என்றது. நீ இங்கு வர வேண்டும் எனில் மோதிரத்தை கழட்டினாள் இங்கு அடுத்த நொடி இருப்பாய் என்றது. மேலும் ஏழு நாட்களில் நீ திரும்பவிட்டால் நான் இறந்து விடுவேன் , உன்னை நினைத்து கொண்டே இருப்பேன், குட் நைட் பியூட்டி என்றது. அவளும் நானும் உன் நினைப்பில் இருப்பேன் போய் பார்த்துவிட்டு விரைவில் வந்துவிடுவேன் என்றாள். மோதிரத்தை அணிந்து கொண்டு தூங்க சென்றாள்.

விடிந்து பார்த்தால் அவளது அறையில் இருந்தாள் பியூட்டி. தந்தையை பார்த்ததும் கட்டி தழுவினாள். அவரோ உன்னை இழந்துவிட்டேன் என எண்ணினேன் என்றார். அவளது சகோதரிகளும் அவளை கட்டி கொண்டனர். நடந்தை பியூட்டி தந்தையிடம் கூறினாள். அவரும் அதற்கு மோசமான குணம் இல்லை , இல்லையென்றால் உன்னை கொன்றிருக்கும் பீஸ்ட் நல்லது என்பதை போல் கூறினார். ஏழு நாட்களும் முடிந்தது. பியூட்டி தன்னிலை மறந்து அவள் குடும்பத்துடன் சந்தோசமாக இருந்தாள். ஒருநாள் இரவு தூங்கும்போது கனவில் பீஸ்ட் இறந்துகிடப்பதை போல் கண்டாள். உடனே கையில் இருந்த மோதிரத்தை கழட்டினாள். அடுத்த நொடியே அங்கு இருந்தாள்.

அவள் கனவில் கண்ட இடத்திற்கு ஓடினாள் அங்கு பீய்ஸ்ட் இறந்து கிடந்தது. அவளுக்கு அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் நெஞ்சில் கை வைத்து அழ தொடங்கினாள். சிறிய அசைவுகள், மூச்சு விடுவது போல் உணர்ந்தாள். தண்ணியை அதன் முகத்தில் தெளித்தால், பீய்ஸ்ட் முழித்து பார்த்தது. அவளுக்கு இப்போதுதான் உயிரே வந்தது. என்னை மன்னித்துவிடு என்னால் தான் இது நடந்தது என அழுதாள். பீய்ஸ்ட் என்னை திருமணம் செய்து கொள்வாயா என கேட்டது. பியூட்டி ஆம் என பதில் அளித்தாள். பீய்ஸ்ட் உருவம் மறைந்து ஒரு அழகிய இளவரசன் தோன்றினான். பியூட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இளவரசன் சொன்னான் ஒரு போரில் தவறான ஒருவரை தாக்கி விட்டேன் அவர் எனக்கு இந்த சாபத்தை அளித்து விட்டார். என்னை யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு உண்மையான அன்பு கிடைத்தால் மட்டுமே என்னால் பழைய மனிதனாக மாற முடியும் என்றான். உனது தூய அன்பினால் மட்டுமே இப்பிறவி கிடைத்தது. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றான். அவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆகையால் குழந்தைகளே நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களிடம் அன்பாக பழகுங்கள். அவர்கள் சில நேரங்களில் கடுமையான சூழ்நிலைகளில் இருக்கலாம். உங்களது அன்பு அவர்களுக்கு ஆறுதலை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+