குழந்தை நீதி கதைகள்: உனைக் காணவில்லையே நேற்றோடு…எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…!
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், வெள்ளிக்கிழமை தோறும் ஏதாச்சும் மாயாஜால கதை படிச்சுட்டு வரீங்க இல்லையா. இன்னைக்கு கூட அதே மாதிரி ஒரு கதை தான் படிக்க போறோம். ஒரு பயங்கரமான சூனியக்காரி மற்றும் அவளோட தந்திரங்கள் பத்தி தெரிஞ்சிக்கலாமா..
ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டில் அழகிய பூக்கள், வளர்ந்து உயர்ந்த மரங்கள் என காடே செழிப்பாக இருந்தது. அந்த காட்டின் நடுவில் ஒரு பாழடைஞ்ச அரண்மனை இருந்துச்சு. அதோட கேட் ரொம்ப பெருசா பாக்குறதுக்கே ரொம்ப பயங்கரமான சந்திரமுகி படத்துல வர கதவு மாதிரியே இருந்தது. அங்கதான் அந்த பயங்கரமான சூனியக்காரி வாழ்ந்து வந்தாள். அவள் விருப்பப்பட்ட உருவத்திற்கு மாறும் அளவுக்கு சக்தி படைத்தவள்.
சட்டென பூனையாக மாறுவாள். ஆந்தையாக மாறுவாள். ஆனால் சூரியன் மறைந்த அடுத்த கணமே வயதான சூனியக்கார பெண்ணாக மாறிடுவாள். அதுதான் அவளது உண்மையான தோற்றம். பார்ப்பதற்கே பயங்கரமான விரல்கள் உடன் வயதான சூனியக்காரி என்று பெயர்க்கு பொருத்தமாய் இருப்பாள். வெகு நாட்களாக நடந்து பக்கத்துக்கு கிராமத்திற்கு செல்ல இளைஞன் ஒருவன் அந்த காட்டு வழியாக பயணித்தான். சூனியக்காரி அரண்மனை அருகில் வரும்பொழுது சாய்ந்து சூரியன் மறைந்து விட்டார். அவன் நடப்பதை பார்த்த சூனியக்காரி அவனை அப்படியே கல்லாக மாற்றி விட்டாள். அவன் பயந்து நடுங்கி போனான்.

சூனியக்காரி அவன் முன் தோன்றி இனிமேல் இந்த பக்கம் வராதே வந்தால், உன்னை இதுபோல் திருப்பி அனுப்ப மாட்டேன் என சொல்லி சிலையாக இருந்தவனை பழைய நிலைக்கு மாற்றினாள். அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினான். மறுநாள் அந்த பக்கமாய் ஒரு இளம் வயது பெண் சென்றாள். நேரம் போக அவளும் அந்த சூனியக்காரியிடம் மாட்டி கொண்டாள். இந்த முறை சூனியக்காரி அவளை ஒரு நைட்டிங்கேல் ஆக மாற்றி கூண்டில் அடைத்தாள். சர்ரென அந்த கூண்டை தூக்கி கொண்டு அரண்மனைக்கு பறந்தாள்.
அந்த கூண்டை கொண்டு ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே வைத்தாள். சுற்றி பார்த்தால் ஆயிரக்கணக்கான நைட்டிங்கேல் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தது. அவை பாடுவதை கேட்டு வயதான சூனியக்காரி நடனம் ஆடி கொண்டிருந்தாள்.
அந்த காட்டிற்கு அருகில் ஒரு அழகிய கிராமம் இருந்தது. அங்கு ஜோரிண்டா என்ற பணிப்பெண் இருந்தாள். அதே கிராமத்தில் ஜோரிங்கெல் என்ற இளைஞன் வசித்து வந்தான். இருவரும் ஒரே ஜமின்தார்க்கு கீழ் வேலை செய்து வந்தார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள். அவர்கள் ஒருவர் ஒருவர் மேல் அளவு கடந்த அன்பை வைத்துள்ளார்கள்.
ஒருநாள் இருவரும் பேசி காட்டுக்குள் சுற்றி வந்தனர். சிரித்து பேசி கொண்டே அந்த காட்டின் அழகில் மூழ்கி நடு காட்டிற்குள் வந்து விட்டனர். ஜோரிண்டா ,' அன்பே நாம் அந்த சூனியக்காரி இருக்கும் அரண்மனை பக்கம் சென்று விட கூடாது, அவள் நம்மை சிறை பிடித்து விடுவாள் ' என்றாள். 'ஆமாம் ஜோரிண்டா , தப்பி தவறி கூட சென்று விட கூடாது , சற்று இங்கு ஓய்வெடுத்துவிட்டு செல்வோமா " என்றான் ஜோரிங்கெல். அவர்கள் மறந்து பேசி சூரியன் மறைந்து போனதை கவனிக்க மறந்துவிட்டார்கள். அவர்கள் கிளம்பலாம் என நினைக்கும்போது வழி மறந்து போனார்கள்.
அவர்கள் நிற்கும் இடம் அந்த அரண்மனை அருகிலே இருந்தது. " ஜோரிண்டா வா உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும் " என்றான் ஜோரிங்கெல். ஆனால் அவளிடமிருந்து பதில் வரவில்லை. அவள் ஏதோ பாடுவது போல உணர்ந்தான். அவள் கையை பிடித்து இழுத்தான், முடியவில்லை. அவனுக்கு இன்னொரு குரல் கேட்டது. ஆமாம் அது சூனியக்காரி குரல் தான். அவள் மாட்டிக்கொண்டாய் என பாட ஆரம்பித்தாள் " என்னிடம் இருந்து தப்ப முடியாது உன்னை சிலையாக்குவேன் " என பாடி கொண்டே அவனை சிலையாக்கினாள்.
ஜோரிங்கெல் " வயதான சூனியக்காரியே அவளை விட்டு விடு, நாங்கள் இனிமேல் இந்த பக்கம் கூட வர மாட்டோம்" என கதறினான். அவள் அதை காதில் வாங்கிக்கொள்ளமால் ஜோரிண்டாவை நைட்டிங்கேல் ஆக மாற்றி கூண்டில் அடைத்தாள். " ஜோரிண்டா,.. ஜோரிண்டா,.. என் அன்பே,.. உன்னை கண்டிப்பாக காப்பாற்ற வருவேன் " என அழுது துடித்தான். சூனியக்காரி அவனை எச்சரிக்கை செய்தாள். " ஒழுங்கா ஊர் பக்கம் ஓடி விடு , இதற்குமேல் இங்கு இருந்தால் உன்னை விடுவிக்க மாட்டேன்" என சொல்லிக்கொண்டே அங்கிருந்து அரண்மனைக்கு பறந்தாள்.
அவள் இல்லமால் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவளையே உலகமாக எண்ணி வாழ்ந்து விட்டான். அவளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே இலக்கில் முழு மூச்சாக இறங்க முடிவு செய்தான். அவள் இல்லாத ஊருக்கு அவனால் செல்ல முடியவில்லை. காடு மேடு என சுற்றி திரிந்தான். கிடைத்த வேலைகளை பார்த்து கொண்டு இருந்தான். இரவு நேரங்களில் சூனியக்காரி கண்ணில் படாமல் அரண்மனையே சுற்றி வந்தான். உள்ளே செல்லும் வழி அறியாமல் , எந்த வகையில் அவளை காப்பற்றுவது என சிந்தனையிலே பல நாட்கள் ஓடின.
ஒருநாள் காட்டின் ஒரு பகுதியில் சுற்றும் போது அயர்ந்து தூங்கினான். மனதளவில் தளர்ந்தும் போய்விட்டான். அப்போது அவனது கனவில் ஒரு பூ ஒன்று தோன்றியது. அந்த பூ அவன் நினைத்தவாறு அவனது காதலி ஜோரிண்டாவை காப்பாற்ற உதவியது. முழித்து பார்த்தான் ஏதோ புது தெம்பு வந்ததை உணர்ந்தான். கிளம்பினான், காட்டை சுற்றி அலைந்தான். நாட்கள் சென்றன. அதை சுற்றி உள்ள மலைகளையும் விடவில்லை. அவன் கனவில் வந்த பூவின் நிறம் அவன் மனதில் ஆழ பதிந்திருந்தது. நல்ல அழகிய ஊதா நிற பூவில் நடுவில் அழகான முத்து ஒன்று இருந்தது. அந்த நொடிதான் முடிவு செய்தான் இந்த பூவை வைத்துதான் தன் அன்பு காதலியை சூனியக்காரியிடம் இருந்து மீட்க முடியும் என்று.
முயற்சியை தளரவிடாமல் மலையை பத்து நாட்களாக சுற்றி வந்தான். இதோ கண்டுபிடித்து விட்டான். அந்த பூவின் நடுவில் இருந்த முத்து அவன் கண்ணில் மின்னியது. பறித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். " ஜோரிண்டா.. இதோ.. வந்து கொண்டிருக்கிறேன் " என கத்தி கொண்டே அரண்மனை நோக்கி ஓடினான். அந்த அரண்மனை அருகில் சென்றான். அவன் சிலையாகவில்லை. கேட் அருகில் சென்றான். அவனுக்கு ஏதும் ஆகவில்லை, பூவை கேட் பக்கம் நீட்டினான். உடனடியாக கேட் திறந்தது. ஜோரிண்டாவை தேடி ஒவ்வொரு அறையாக அலைந்தான்.
ஒரு அறையின் அருகில் இருந்து பாடல் பாடும் சத்தம் கேட்டது. ஜோரிண்டா இங்குதான் இருப்பாள் என்று கதவை திறந்தான். அந்த சூனியக்காரி அங்கு தான் இருந்தாள். அவன் தலைக்குமேல் ஆயிரக்கணக்கான நைட்டிங்கேல் கூண்டில் அடை பட்டிருப்பதை பார்த்தான். அவன் கண்கள் ஜோரிண்டாவை தேடியது. அவள் அந்த கூண்டுகளில் இல்லை.
அவன் நன்றாக தேடினான். " ஹா ஹா ஹா .." பயங்கரமான சிரிப்பு சத்தம். சூனியக்காரி சிரித்து கொண்டே அவன் அருகில் சென்றாள். அவளால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை. அவனை தொட நெருங்கினாள். அவன் கையில் இருந்த பூவை பார்த்ததும் பயந்து நடுங்கினாள். மெதுவாக கதவு அருகில் சென்று தப்பிக்க முயற்சி செய்தாள்.
அவள் கையில் இருக்கும் கூண்டில் ஜோரிண்டா இருப்பதை பார்த்து விட்டான். சட்டென அவளை பிடிக்க முயற்சி செய்தான். அந்த பூ கூண்டின் மேல் பட்டது . நைடிங்கேளாக இருந்த ஜோரிண்டா பழைய நிலைமைக்கு திரும்பினாள். சூனியக்காரி ஜோரிங்கெல்லை தாக்க முயற்சித்தாள். பூவை அவள் முன் காட்டினான் ஜோரிங்கெல். அவள் பூ பட்ட நொடியே எரிந்து சாம்பலாகினாள், மேலே இருந்த கூண்டின் மேல் பூவை நீட்டினான் ஜோரிங்கெல். கூண்டில் இருந்த அத்தனை பறவைகளும் பெண்களாக மாறினார்.
ஜோரிங்கெல்க்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார். ஜோரிண்டா தனது காதலனை கண்டதும் அரவணைத்து கொண்டாள். அவனும் அவளை நினைத்து வருந்தியதை தெரிவித்தான். இருவரும் காதலை பரிமாறி கொண்டனர். திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications