Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: சூனியக்காரியின் சூழ்ச்சியில் சிக்கியது யார்? கடைசியில் ஷெல்லி தப்பித்தாளா..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டிஸ், அட வெள்ளிக்கிழமை வந்தாச்சு! நாம இப்போ மாயாஜால கதைகள் படிக்கிற நாள். உங்களில் எத்தனை பேருக்கு மாயாஜாலங்கள், விசித்திரங்கள் எல்லாம் பிடிக்கும். நம்ம கதைல எப்பவுமே எதாவது ஒரு மாயாஜாலம் இருக்கும் இல்லையா?, அது மாதிரி தான் இன்னைக்கும். வாங்க ஓவர் பில்டப் கொடுக்காம கதைக்குள்ள போய்டலாம்.

நம்ம ஊருல ஒரு காலத்துல நடந்த கதைதான் இது. கண்டிப்பா கற்பனை கதைதான் படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

Kids story in tamil : The pretty girl

ஷெல்லி என்ற பேருல ஒரு பொண்ணு இருந்தாள். அவள் மிகவும் அமைதியான பொண்ணு, மற்றவர்களுக்கு உதவுற குணம் அவளுக்கு எப்போவுமே அதிகம். அவ வாழ்ந்த கிராமம் ரொம்ப அழகானது. அதே நேரத்துல மாயாஜாலங்கள் செய்ய கூடியவங்களும் அங்க வாழ்ந்து வந்தாங்க.

இவளோட நல்ல பண்புகளை பார்த்து ஒரு பெண்மணி தன்னோட மகனுக்காக ஷெல்லியை திருமணம் செய்து வைக்க முடிவு பண்ணி வந்தாங்க. ஷெல்லி ரொம்ப வசதி இல்லனாலும் ஓரளவுக்கு வசதி உள்ள குடும்பம். இவங்களும் பெருசா அவங்கள பத்தி தெரிஞ்சிக்காம ஷெல்லியை திருமணம் செய்து வச்சிட்டாங்க.

ஷெல்லி அங்க போனபிறகுதான் தெரிஞ்சது அந்த பெண்மணி மாயாஜாலம் செய்ய கூடியவர். ஷெல்லி என்ன பண்றதுனு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டாள். அந்த பெண்மணி ஓட பையன் அவ்ளோ நல்லவனும் இல்ல. ஷெல்லி இத அவங்க வீட்டுக்கு தெரிய படுத்தினாள். ஆனால் அவங்களும் இவளுக்கு பெரிதா எதுவும் உதவ வில்லை.

அந்த பெண்மணி ஷெல்லியை எதாவது ஒரு குறை கூறிகிட்டே உன்ன என்னோட மந்திரத்தை வச்சி ஒரு ஆடு போல மாத்த போறேன். அப்போதான் நீ அமைதியா இருப்ப என பயம் காண்பித்து கொண்டே இருந்தாள். ஷெல்லிக்கும் வேறு வழி இல்லாமல் பொறுத்து கொண்டே இருந்தாள். ஆனால் அவள் கடவுளை நோக்கி வேண்டுதல் வைப்பதை விடவில்லை

ஒருநாள் அந்த பெண்மணி ஏதோ மந்திரங்களை முணு முணுத்து கொண்டிருப்பதை பார்த்த ஷெல்லி அவள் என்ன செய்கிறாள் என அமைதியாக ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்தாள். அவள் மந்திரம் சொல்ல சொல்ல அந்த ஊரில் இருந்த இளம் பெண்கள் அந்த பெண்மணி இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஷெல்லி இதை பார்த்து மிகவும் பயந்து போய் விட்டாள்.

ஷெல்லி அங்க போனபிறகுதான் தெரிஞ்சது அந்த பெண்மணி மாயாஜாலம் செய்ய கூடியவர். ஷெல்லி என்ன பண்றதுனு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டாள். அந்த பெண்மணியோட பையன் அவ்ளோ நல்லவனும் இல்ல. ஷெல்லி இத அவங்க வீட்டுக்கு தெரிய படுத்தினாள். ஆனால் அவங்களும் இவளுக்கு பெரிதா எதுவும் உதவ வில்லை.

ஷெல்லி அவளது அத்தையான அந்த பெண்மணியை பின் தொடர்ந்தாள். அவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்து அந்த பெண்மணி ஒரு பெரிய குகைக்குள் நுழைந்தாள். ஷெல்லி பின்தொடர்ந்தாள். உள்ளே சென்றது அந்த பெண்மணி ஒரு பெரிய மந்திரத்தை போட்டாள். உடனடியாக ஒரு பெரிய சூனியக்காரி தோன்றினாள்.

அதிர்ச்சியில் உறைந்த ஷெல்லிக்கு என்ன செய்வததென்று தெரியவில்லை. அமைதியாக கவனித்தாள். அந்த பெண்மணி சூனியக்காரியிடம் நீ கேட்ட மாதிரி இளம் பெண்களை வரவைத்து விட்டேன். நான் கேட்ட அந்த வற்றாத களஞ்சியத்தை கொடு என்றாள். சூனியக்காரி இரவு பூஜை செய்யும்போது உனக்கு அது கிடைக்கும் நீ அந்த இளம்பெண்களை குகைக்கு அழைத்து வா, பூஜையில் எந்த குழப்பம் ஏற்பட்டாலும் அது நம் இருவரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என சொல்லி அனுப்பியது.

அமைதியாக கேட்டு கொண்டிருந்த ஷெல்லிக்கு ஒரு பாதை கிடைத்தது போல் உணர்ந்தாள். இந்த பெண்களை கைப்பற்ற வேண்டும் அதே சமயம் பேராசை பிடித்த அவளது அத்தைக்கு சரியான தண்டனை கிடைக்கவும் நினைத்தாள். இருள் சூழ்ந்தது, குகைக்கு அந்த இளம்பெண்களை அழைத்து வந்து ஒரு அறையில் அடைத்தாள் அந்த பெண்மணி. அவளது மகா பூஜைகளை ஆராம்பித்தாள். ஷெல்லி இதை தடுக்க வேண்டும் என்பதால் அவளது மாமியார் செய்வதை அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள். தகுந்த சமயத்திற்காக காத்துக்கொண்டிருந்தால் ஷெல்லி.

பூஜைக்கான வேலைகள் நடந்தன, எல்லாத்தையும் செய்து வைத்து விட்டு அந்த பெண்களை அழைத்து வர அந்த அறைக்கு சென்றாள் ஷெல்லியின் அத்தை. இதுதான் சமயம் என எண்ணிய ஷெல்லி அங்கிருந்த பூஜை பொருட்களை மாற்றி அமைத்தால். ஷெல்லியின் அதை அந்த இளம்பெண்களை அழைத்து வந்தாள். அவர்கள் அனைவரும் மாயக்கட்டுக்குள் இருந்தார்கள்.

ஷெல்லி ஒளிந்து கொண்டாள். பூஜையை ஆர்மபித்த பெண்மணி சில மந்திரங்களை முணுமுணுத்தாள். சூனியக்காரி அந்த சமயம் தோன்றினாள். இளம்பெண்களை பலியிடும் நேரம் நெருங்கியது. சூனியக்காரி மனதில் மொத்தமாக இவர்களை அழித்துவிட்டு இந்த கிராமத்தை தன் வசியத்திற்குள் கொண்டு வரும் சக்தி கிடைத்துவிடும் அதை வைத்து இந்த உலகை தன் காலடியில் கொண்டு வந்துவிடலாம் என அவள் தனி கணக்கு போட்டிருந்தாள்.

இவர்கள் ஷெல்லி பூஜையில் செய்த மாற்றத்தை பற்றி கவனிக்காமல் பூஜையில் மூழ்கினார்கள். ஒரு மின்னல் போன்ற ஒளி கிளம்பி ஷெல்லியின் அத்தை மற்றும் அந்த சூனியக்காரியை தாக்கியது. ஒரு வினாடியில் அத்தனையும் பஸ்பமானது. அந்த இளம்பெண்கள் மாயக்காட்டில் இருந்து வெளியில் வந்தார்கள். ஷெல்லி அவர்களை அழைத்து கொண்டு கிராமத்திற்கு நடந்தாள். ஷெல்லியின் கணவரும் அவனது அம்மாவின் வசியத்தில் இருந்து மீண்டனர். ஷெல்லி தன கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+