Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: தேடிய பொருள் கிடைத்ததா? லிண்டாவின் கனவை நிறைவேற்றியது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க. இன்னைக்கு என்ன கதை படிக்க போறோம் தெரியுமா?. வழக்கமா நம்ம கதைகளை படிக்கிறவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் சொல்றேன் வெள்ளிக்கிழமை வந்தாலே சின்ராசை கைல பிடிக்க முடியாது, அது மாதிரி இன்னைக்கு நம்ம மாயாஜால உலகத்துக்கே கூட்டிட்டு போக போற கதையை படிக்க போறோம். எதை பத்தி இந்த கதைனு கண்டிப்பா ஹிண்ட் கொடுக்கமாட்டேன். கதையை படிச்சிட்டு எப்படி இருந்ததுன்னு நீங்களே சொல்லுங்க..

அது ரொம்ப வருடங்களுக்கு முன்பு இருந்த காலம். சில குட்டி கிராமங்கள், அங்க கொஞ்சம் மாயாஜாலங்கள் தெரிஞ்சவங்க, கூடவே கொஞ்சம் கெட்டவங்க என இருந்த அழகிய கிராமங்கள். இதுல ஒரு கிராமத்துலதான் நம்ம லிண்டா வாழ்ந்து வந்தாள். ஆமா, ஆமா இவதான் நம்ம கதையோட நாயகி. கொஞ்சம் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பொண்ணு, ஆனா தனக்காக யாரும் இல்லையேன்னு கொஞ்சம் ஏங்கவும் செய்யுற பொண்ணு தான் நம்ம லிண்டா.

Kids story in tamil : The sorcerer and the girl

அவளுக்கு அழகா ஒரு குட்டி வீடு இருந்துச்சு. அந்த கிராமமே இயற்கையாக அழகா இருக்கும். பக்கத்துலேயே நீர்வீழ்ச்சி, பூக்கள் நிறைந்த அழகிய தோட்டம். அந்த இயற்கை அழகை பார்த்தாலே நமக்கு கண்டிப்பா சந்தோசம் பிச்சிகிட்டு வரும்.என்னதான் இருந்தாலும் லிண்டா தன்னோட தனிமையில இந்த சந்தோசத்தை ஒரு நாளும் அனுபவிச்சது இல்ல.

ஊருக்குள்ள அவளுக்கு தேவையான வருமானத்தை ஈட்டி தனியாக வாழ்ந்து வந்தாள். யாராவது கஷ்டபடுறதை பார்த்தால் அவங்களுக்கு உதவாம வர மாட்டாள். இருந்தாலும் ஏதோ ஒரு விஷயத்திற்காக ஏங்கி தன்னோட தனிமையை சாபமாக பார்த்தாள் நம்ம லிண்டா.

ஒருநாள் லிண்டா ரொம்பவும் தனிமையாக உணர்ந்தாள். அருகில் இருந்த மலைக்கு தனியாக நடக்க ஆரம்பித்தாள். அவளது மனநிலை மாறிவிடும் என எண்ணி நடந்தாள். அவளை அறியாமலேயே நடு காட்டிற்குள் சென்று மாட்டி கொண்டாள். திரும்பி வருவதற்குள் சூரியனும் மறைந்து விட்டது. என்ன செய்றது என யோசித்து கொண்டே நடந்தாள். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிஞ்சது. இவளும் அதை நோக்கி நடந்தாள். அந்த இடம் இவளது கிராமத்தை விட மிகவும் பிரகாசமாக இருந்தது. செடிகள் , பழங்கள் மற்றும் பூக்கள் என அனைத்தும் அவள் ஈட்டி தொடும் அருகில் இருந்தது. அந்த இடம் பல வண்ணங்களால் நிறைந்து இருந்தது.

அட இத்தனை அழகான இடத்தை இவ்வளவு நாள் நாம் பார்க்காமல் போய்விட்டோமே என சலித்து கொண்டாள் லிண்டா. அப்படியே நடந்தாள், அந்த கிராமத்திற்குள் செல்ல செல்ல அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது, எந்த ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை. எப்படி இப்படி ஒரு அழகிய கிராமத்தை மக்கள் விட்டு வைத்தார்கள் என எண்ணி கொண்டே நடந்தாள். அங்கு ஒரு பெரிய மாளிகையை பார்த்தால் லிண்டா. ஓஹோ எதோ ராஜாவோட அரண்மனை போல அதனால் தன மக்கள் வர அனுமதி இல்லை என எண்ணி கொண்ட அந்த மாளிகைக்குள் நுழைந்தாள்.

என்ன இந்த மாளிகையில் மெய் காப்பார்கள் கூட இல்லையே என நடந்தவளுக்கு பெரிய அதிர்ச்சியை அந்த மாளிகை கொடுத்தது. யாருமே இல்லாமல் அந்த மாளிகையில் அனைத்தும் தன்னிச்சையாக இயங்கி கொண்டிருந்தன. உள்ளே வந்த அவளுக்கு ஒரு குவளையில் பழரசம் பறந்து வந்து அவள் முன் நின்றது. அவளும் சிரித்து கொண்டே என்ன அதிசயம் என அதை எடுத்து பருகினாள்.

மிக பிரமாண்ட மாளிகையில் எப்படி யாருமே இல்லாமல் இருக்கிறார்கள் என யோசித்து கொண்டே உள்ளே சென்றாள். அவள் அமருவதற்கு நாற்காலி அவள் முன்னே வந்து நின்றது. அந்த நாற்காலியில் அமர்ந்த அவளுக்கு ஏதோ ஒரு குரல் கேட்டது. ஒருவேளை இந்த மாளிகையின் உரிமையாளரா இருக்குமோ என அந்த குரலை உற்று கவனித்தாள். அது ஒரு பெண்ணின் குரல், இங்கிருந்து தப்பித்து ஓடி விடு என ஒரு குரல், லிண்டாவிற்கு அதிர்ச்சி. இத்தனை அழகான மாளிகையை விட்டு தப்பித்து ஓட சொல்கிறார்களே யாராக இருக்கும் என அவள் சுற்றி பார்க்கிறாள்.

எல்லா திசையும் நோட்டமிட அவளால் எந்த திசையில் குரல் கேட்டது என கண்டு பிடிக்க முடியவில்லை. லிண்டாவிற்கு சிறிதாக பயம் எட்டி பார்க்கிறது. மீண்டும் அந்த குரல் அவன் வருவதற்குள் ஓடி விடு என இன்னும் அருகில் கேட்டது. இப்போதுதான் புரிந்தது அது நாற்காலியில் இருந்து வருகிறது . அவள் விழுந்து அடித்து அதில் இருந்து எழுந்தாள். நாற்காலி மீண்டும் அதன் இடத்திற்கே சென்றது.

அப்போதுதான் புரிந்தது லிண்டாவிற்கு அங்கு இருக்கும் அனைத்துமே அசையும் பொருட்கள். அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட ஆரம்பித்தாள். அப்போதுதான் அந்த மந்திரவாதி வருவதை உணர முடிந்தது அவளால். எப்படி தப்பிப்பது என யோசித்தாள் லிண்டா. எந்த யோசனையும் கை கொடுக்கவில்லை . பயம் உச்சந்தலையில் அவளுக்கு ஏறியது. நானும் இதுபோல் ஆகி விட்டால் என்ன செய்வது என குழப்பம் வேறு, நிதானமாக இரு லிண்டா என தனக்கு தானே பலமுறை கூறினாள். மந்திரவாதி வீட்டிற்குள் புதிதாக யாரோ இருப்பதாய் உணர்ந்தான்.

கொஞ்சம் அமைதி ஆனா லிண்டாவிற்கு ஒரு யோசனை தோன்றியது, நமது கிராமத்தில் மந்திரவாதிகள் இருந்தார்கள். அப்படியெனில் கண்டிப்பாக தேவதை யாரேனும் இருக்க வாய்ப்பிருக்கு என எண்ணி அவள் மனதிற்குள் அழைக்க ஆரம்பித்தாள் தேவதையே எங்கிருந்தாலும் உடனடியாக எனக்கு உதவுங்கள். என்னைப்போல் இங்கு பலரும் மாட்டி கொண்டுள்ளார்கள் அவர்களையும் விடுவிக்க வேண்டும் என லிண்டாவின் உதவும் குணத்தையும் மறக்காமல் வேண்டினாள். திடீரென ஒரு குரல் லிண்டாவில் காதுகளில் ஒலித்தது. அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றால் நீ மந்திரவாதியை சந்திக்க வேண்டும்.

அட அவ்வளவுதான் லிண்டா கதற ஆரம்பித்துவிட்டாள், தப்பிக்க வழி கேட்டால் என்னை மாட்டிவிட வழி சொல்கிறாய், நீ தேவதை தானா எனக்கு உன்மேல் சந்தேகமாய் இருக்கிறது என்றாள் லிண்டா. அதுதான் வழி , அவனை சந்தித்து ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். அந்த கேள்வி உனக்கு தப்பிக்க ஒரு வழி கொடுக்கும் என கூறியது அந்த குரல். அடடா, இது என்ன வம்பா போச்சு, அவன்கிட்ட போய் நான் என்ன கேள்வி கேட்க முடியும், என்னை கொல்ல போறியானு கேட்கவா முடியும், அச்சோ வசமா மாட்டி கிட்டேன் என புலம்பி கொண்டே இருந்தால் லிண்டா. சட்டெனெ ஒரு கேள்வி தோன்றியது, சரி கேட்டுவிடலாம் வாழ்வோ , சாவோ பார்த்துவிடலாம் என தன்னம்பிக்கையை வரவழைத்து கொண்டே அவன் இருக்கும் திசையை நோக்கி நடந்தாள்.

லிண்டா அவன் முன்னே தோன்றினாள். அவன் என்ன தைரியம் உனக்கு என் முன்னே இவ்வளவு அசால்ட்டாக நிற்கிறாய் என்றான். லிண்டா மனதிற்குள் ஒரு கேள்விதான் கேட்க வேண்டும் என்ன கேள்வி, என்ன கேள்வி , என சிந்தித்து கொண்டே இருந்தாள். மந்திரவாதி நான் உன்னை தான் கேட்கிறேன் என சத்தமாக கத்தினான். லிண்டா அவனிடம் , உன்னை தனிமை படுத்தியது யார்? என கேட்டாள். அவ்வளவுதான் மந்திரவாதி உடைந்து போனவனாய் அமைதியாக அமர்ந்தான்.

அவன் சோகமாக, யாரும் எனக்காக இல்லை என்ற எண்ணமே என்னை தனிமைப்படுத்தியது, அதற்காவே இந்த காட்டுக்குள் வந்து எனக்கான மாளிகையை அமைத்தேன் என்றான் மந்திரவாதி. அட இது என்ன நம்ம கதையா இருக்கு என யோசித்து கொண்டே இன்னும் தன்னம்பிக்கையுடன் நான் உனக்காக இருக்கிறேன் இவர்களை விட்டுவிடு என்றாள். விரக்தியின் உச்சத்தில் இருந்த லிண்டாவிற்கும் இப்போது துணை கிடைத்து விட்டது. மந்திரவாதியும் இப்போது அனைவரையும் விடுவித்தான். அந்த மாயாஜாலம் நிறைந்த இடம் பழைய மாதிரி காடாக மாறியது. அங்கு இருந்த அசையும் பொருட்கள் அனைத்தும் மனிதர்களாக மாறின.

மந்திரவாதியும் நார்மலாக மாறினான். தேடிய அன்பை கிடைத்த மகிழ்ச்சியில் லிண்டா அவனுடன் வீட்டுக்கு வந்தாள். லிண்டாவின் உதவும் குணத்தால் மற்றவர்களையும் காப்பாற்றினாள். அவளும் இப்போது அவனுடன் அவள் வீட்டின் அருகில் இருந்த அருவியில் மகிழ்ச்சியாக விளையாடினாள். பூக்கள் நிறைந்த அந்த தோட்டத்தை பார்த்து மகிழ்ந்தாள். முன்பை விட இன்னும் மகிழ்ச்சியாக இருந்தாள் லிண்டா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+