Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: எதையும் பிளான் பண்ணி பண்ணனும் , பிளான் பண்ணாம பண்ண இப்படித்தான்.. வர்ட்டா..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் கண்மணிகளே, இன்னைக்கு என்ன தெரிஞ்சுக்க போறோமோன்னு ஆவலா இருக்கீங்களா, ஒரு செயலை சரியான திட்டம் தீட்டி செயல்படுறதனால வர நன்மை என்னனு தெரிஞ்சிப்போமா. இந்த மூன்று பன்னிகுட்டிகள் தான் நம்ம கதையின் நாயகர்கள். யாரெல்லாம் படிக்க ஆர்வமா இருக்கீங்க.. சரி போலாமா கதைக்குள்ள...

ஒரு காட்டுக்குள்ள மூன்று பன்றிக்குட்டிகள் அதோட அம்மா அப்பா கூட ஹாப்பியா இருந்தது. முதல் பன்றி குட்டியின் பெயர் இன்க்கு , இரண்டாவது பன்றி குட்டியின் பெயர் பின்க்கு. கடைசி குட்டியின் பெயர் பாங்க்கி. மூன்று பன்றிகளும் வளர்ந்ததை உணர்ந்த அம்மா அப்பாவிடம் சென்று , மூன்று பேரையும் தனியாக வாழ தயார் படுத்தவேண்டும் என்றது. அப்பா பன்றி சரி என தலையாட்டியது. அம்மா மூன்று பேருக்கும் பணம் கொடுத்து நீங்கள் இதற்குமேல் தனியாக வாழ பழக வேண்டும். மூவரும் சரி என்று கிளம்பினர்.

இன்க்கு, சொன்னது நாம் தனியாக சென்று வாழ்வதற்கான விஷயங்களை செய்யலாம் என்றது. பின்க்கு, ' ஆமாம் அண்ணா, அம்மா கூறியது போல நாம் தனித்து நின்று சாதிக்க வேண்டும் என்றது. பாங்கிக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. இப்படியே சென்றால் சகோதரர்கள் பிரிந்துவிடுவோம் என்று எண்ணியது. பாங்கி எப்பொழுதும் சாமர்த்தியமாக செயல்பட கூடியது. அது தனது அண்ணன்களிடம் சொன்னது, அண்ணா நாம் பிரிந்து சென்று வேலை செய்யலாம் ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அருகில்இருந்தால் ஒற்றுமையாக இருக்கலாம் என்றது. இருவரும் புரியாதவாறு முழித்தனர்.

Kids story in tamil : the tale of three little pigs

பாங்கி தொடர்ந்தது, அண்ணா நாம் அருகருகே வீடு கட்டிக்கொள்ளலாம். அப்படி இருந்தால் நான் தனியாக வேலை செய்தாலும், ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம் என்றது. இருவரும் சரியான யோசனை தான் என்றனர். சகோதர்கள் ஒத்துக்கொண்டதால் பாங்கி சந்தோசம் ஆனது. மூவரும் தங்களுக்க்கான வீடு கட்டுவதற்கு தயராகினர்.
இன்க்கு முதலில் சீக்கிரம் வீடு கட்ட வேண்டும் , மேலும் குறைந்த செலவில் முடிக்க வேண்டும் என யோசித்தது. அதற்கு கூரை போன்ற வீட்டை ரெடி பண்ணலாம் என தோன்றியது. அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயி ஒருவரை சந்தித்து. அவரிடம் கூரை கட்டுவதற்கு தேவையான வைக்கோலை வாங்கியது.

பின்க்கு உறுதியான வீட்டை கட்ட வேண்டும் அதனால் மர வீடு கட்டலாம் என யோசித்தது. கிராமத்தில் மர வியாபாரி ஒருவரிடம் தேவையான மரக்கட்டைகளை வாங்கியது. இருவரும் வேக வேகமா வீடுகளை கட்ட தொடங்கினர். பாங்கியோ எந்த சேதம் வந்தாலும் தாங்கும் அளவுக்கு கல் வீடு கட்ட வேண்டும் என எண்ணியது. தேவையான செங்கல் , சீமென்ட், ஜல்லி என அனைத்தையும் வாங்கியது.

Kids story in tamil : the tale of three little pigs

இன்க்கு தனது கூரை வீட்டை ஒரு நாள் முழுவதும் வேலை செய்து கட்டி முடித்தது. பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது. அது பின்க்குவின் வீட்டை பார்க்க சென்றது. அது இப்போதுதான் கட்டைகளை அடுக்கி பாதி வீட்டை ரெடி செய்திருந்தது. இன்க்கு அதை பார்த்து சிரித்துகொண்டே , பார்த்தாயா நான் ஒரே நாளில் வீடை கட்டி விட்டேன் என்றது. அதன் வீட்டிற்குள் சென்று தூங்கியது. பின்க்கு வேக வேகமாக வீட்டை கட்டியது. இரண்டு நாட்களில் அதன் மர வீடும் தயாரானது. இன்க்கு சொன்னது, பரவாயில்லை நன்றாகத்தான் கட்டிருக்கிறாய் என்றது. இருவரும் பாங்கியின் நிலையை பார்க்க சென்றனர்.
பாங்கி இப்போதுதான் அஸ்திவாரமே தோண்டி கொண்டிருந்தது. இருவரும் அதை பார்த்து சிரித்தார்கள். பைத்தியக்காரன் ஒரு வீடு கட்ட இவ்வளவு நாள் எடுத்து கொள்கிறான் என்று சிரித்துக்கொண்டே அவர்களது வீட்டில் தூங்க சென்றார்கள். பாங்கியோ எதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை. இன்க்கு , பின்க்கு இருவருக்கும் தினமும் பாங்கியை கேலி செய்வதே வாடிக்கையாக இருந்தது. ஒருவழியாக பாங்கி தனது கல் வீட்டை கட்டி முடித்தது.

மூவரும் அருகருகே சந்தோசமாக வாழ தொடங்கினர். ஒருநாள் அந்த வழியாக ஓநாய் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் கண்ணில் இந்த மூன்று வீடுகளும் பட்டது. உள்ளே யார் வாழ்கிறார்கள் என்ற ஆர்வம் அதனால் தாங்கிக்கொள்ளாமல் மரத்தின் பின்னே ஒளிந்து வேடிக்கை பார்த்தது. அது சிறிது நேரம் கழித்து மூன்று பன்றிக்குட்டிகளும் வேலைக்கு சென்று திரும்பியதை பார்த்தது. ஆஹா இது சரியான வேட்டை ஆச்சே என்று திட்டம் தீட்டியது.
மறுநாள் இன்க்கு வீட்டின் கதவை தட்டியது அந்த மோசக்கார ஓநாய். இன்க்கு ஜன்னல் வழியாக பார்த்தது. அது ஒரு ஓநாய் , தயக்கத்துடன் யார் வேண்டும் என்றது. நீதான் வேண்டும் வெளியே வா என்றது. முடியாது என்றது இன்க்கு . ' நான் இழுத்து பெருமூச்சு விட்டால் உன் வீடு பறந்து காணாமல் போய்விடும் ' என்றது ஓநாய். இன்க்கு சொன்னது , போடா என் வீடு மிகவும் உறுதியானது உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஓநாய் சொன்னது ,'நா ஊதுற ஊதுல உன் கூரை எப்படி பிச்சிக்கிதுன்னு பாரு , சொல்லிகொண்டே வேகமாக மூச்சை இழுத்து பெருமூச்சு விட்டது. அது சொன்னது போலவே மொத்த குடிசையும் பிச்சுக்கொண்டு பறந்தது.

எடுத்தேன் பாரு ஓட்டம்னு, இன்க்கு ஓடி பின்க்குவின் வீட்டிற்குள் நுழைந்தது. சீக்கிரம் கதவை மூடு ஒரு ஓநாய் துரத்துகிறது என்று பின்க்குவிடம் சொன்னது. அதுவும் கதவை மூடியது. ஓநாய் பின்க்குவின் வீடு கதவை தட்டியது, பின்க்கு , கதவையெல்லாம் திறக்க முடியாது முடிஞ்சா மூச்சு தான விடுவ , பாத்துக்கலாம் என்று மெத்தனமாக கூறியது. ஓநாயோ இழுத்து மூச்சு விட்டது மரவீட்டின் கூரை பிச்சுக்கொண்டு ஓடியது. இருவரும் அதையறியாமல் கதவின் பின்னே நின்று கொண்டிருந்தனர்.
என்னடா , நல்ல காற்று வீசுதேனு பார்த்தா கூரையே இல்லையா என்று இருவரும் பாங்கி வீட்டிற்கு ஓடினர்.
பாங்கியிடம் நடந்ததை கூறினார். பாங்கி அவர்களுக்கு தைரியம் சொல்லி , இருவரும் மேலே பரணில் ஒளிந்து கொள்ளுங்கள், ஒருவேளை அது வீட்டை உடைத்தால் என்னை முதலில் கொள்ளட்டும் என்று சொன்னது. இருவரும் பரணில் ஏறினார்கள். ஓநாய் கதவை தட்டியது. பாங்கி என்ன வேண்டும் என்றது. கதவை திற, இல்லையென்றால் நன் விடும் மூச்சில் உன் வீடு காணாமல் பொய் விடும் என்றது. பாங்கி அப்படியா சரி , உன் மூச்சை வேகமாக விடு என்றது. ஓநாய் விட்ட மூச்சு காற்றால் , ஒன்றுமே அசரவில்லை.மயங்கித்தான் விழுந்தது.

இதை பார்த்த இன்க்கு, பின்க்கு இருவரும் கீழே இறங்கி வந்தனர். ஓநாய் முழித்து பார்த்தது. அது விடுவதாய் இல்லை. வேகமாக பின்னோக்கி ஓடி முன்னே ஓடி வந்து கதவில் இடித்தது. இதை பார்த்த சகோதர்கள் ஒற்றுமையாக கதவில் அணை கட்டி நின்றனர். ஓநாய் மறுபடி மறுபடி இடித்தது. ஒரு கட்டத்தில் அதனால் முடியவில்லை. பாங்கி சொன்னது , நாம் அருகில் இருந்ததால் தான் இப்பொழுது உயிருடன் இருக்கிறோம் என்றது. அண்ணன்மார்கள் ஆமாம் என்று தலையாட்டினார். கேலி செய்ததற்காக மனம் வருந்தினார்.

Kids story in tamil : the tale of three little pigs

திடீரென பாங்கி வீட்டின் ஓட்டின் மேல் சத்தம் கேட்டது. ஒகே ஓநாய் ஏதோ திட்டம் போடுகிறது என்று கவனமாக அது நடக்கும் சத்தத்தை கவனித்தது.

அது சிம்னி வழியாக உள்ளே வரலாம் என்று யோசித்ததை புரிந்துகொண்ட பாங்கி விறகை அதில் போட்டு தீயை கொளுத்தியது. ஓநாய் அதை அறியாமல் சிமினியின் வழியாக சர்ரென்று உள்ளே இறங்கியது. பொத்தென்று தீயில் விழுந்து கருகியது. மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சந்தோசமாக வாழ ஆரம்பித்தனர்.
ஆகையால் குட்டிஸ் என்ன பண்ணனும் , எந்த விஷயம் பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும். ஒரு செயலை செய்வதற்குமுன் பலமுறை சிந்தித்து , செயல்பட வேண்டும். வரும்காலத்தில் அது உங்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமையும் என்பதையும் ஆராய்ந்து முடிவெடுங்கள். முடிவில் உறுதியாக இருந்து சாதனை புரியுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+