குழந்தை நீதி கதைகள்: இதுக்கெல்லாம் தேவதை இருக்காங்களா.. உங்க கூட்டத்தில் யாரு லிண்டா..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், இன்னைக்கு நான் சொல்லக்கூடிய இந்த கதை நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். ஒருவேளை தெரியலைனா கூட படிச்சி தெரிஞ்சிக்கோங்க. முக்கியமா உங்க பல் அதை பத்திதான் படிக்க போறோம். ஆமா இன்னைக்கு விசித்திர கதைதானே அப்படினு நீங்க யோசிக்கிறது எனக்கும் தெரியும். உங்களுக்கு ஒரு ட்விஸ்ட் இருக்கு.
சரி குழந்தைகளா உங்கள்ல எத்தனை பேருக்கு பல்லு விழுந்துருக்கு, யாருக்கெல்லாம் புதுசா பல்லு முளைச்சிருக்கு , சரி சரி வாங்க கதையை படிக்கலாம்.

ஐரோப்பிய நாடுகளின் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்த சிறுவர்கள் அன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்கள். அதில் லிண்டா மட்டும் கொஞ்சம் கோபக்காரி. மற்ற சிறுவர்களுடன் கலந்துகொண்டு விளையாடினாலும் அவளுக்கு அடிக்கடி கோபம் வரும் காரணம் அவள் ஒரு முறை ஒரு விஷயம் கிடைத்துவிட்டாள் அதில் பேராசை கொண்டவள். உதாரணமாக விளையாட்டில் அவள் ஒருமுறை வெற்றி பெற்றால் திரும்பவும் வெற்றி பெற வேண்டும் என்பாள். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால் அவர்களுடன் சண்டை போட்டு விடுவாள். பின்னர் அவளது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பாள். லிண்டாவிற்கு இதுதான் வாடிக்கை.
ஒருநாள் நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும்போது அவர்கள் டூத் பெர்ரி பற்றி பேசி கொண்டிருந்தார்கள். ஒருவன் கேட்டான், அவங்க என்ன பண்ணுவாங்கடா.. இன்னொருவன் ' உனக்கு அவங்கள பத்தி தெரியாதடா' அவங்கதான் நம்ம பல்லு விழும்போது அதுக்கு பதிலா காசு குடுக்கக்கூடியவங்க.. அதெப்படி , லிண்டா இடை மறித்தாள். அந்த பையன் எடுத்து கூறினான், அதாவது இப்போ உனக்கு பல்லு விழுதுன்னு வச்சிப்போம், நீ அதை எடுத்து உன்னோட தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் தேவதை வருவாங்க. அவங்க உன்னோட பல்ல எடுத்துக்கிட்டு உனக்கு காசு கொடுத்திட்டு போய்டுவாங்க. லிண்டா ஆர்வமானாள். அந்த காச வச்சி நமக்கு என்ன தேவையோ அந்த பொருட்களை வாங்கிக்கலாம் என்றான் அந்த பையன்.
அதன் பிறகு லிண்டா, அவளது பெற்றோர்களை விடவில்லை. அப்பா, அம்மா எனக்கு எப்போ பல்லு விழும் ப்ளீஸ் சொல்லுங்க என தினமும் நச்சரித்தாள். அதே சமயத்தில் அவள் வகுப்பு சிறுவர்கள் அந்த காசுகளை வைத்து பொருட்களை வாங்கி வந்தனர். ஒருவழியாக முதல் முறை லிண்டாவிற்கு பல் விழுந்தது. அவள் குஷியில் துள்ளி குதித்தாள். இரவானது தலையணை அடியில் பல்லை வைத்தாள். தேவதையும் வந்தாள் அவள் மவுனமாக தூங்கி கொண்டிருப்பது போல் பாவனை செய்து தேவதையை பார்த்தாள். தேவதை அவளுக்கு காசை வைத்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளானாள் லிண்டா.
என்ன இது ஒரே ஒரு காசை வைக்கிறீர்கள் என தூக்கி தேவதை மேலே விட்டெறிந்தாள். தேவதை அமைதியாக அங்கிருந்து சென்றது. லிண்டா நிறைய காசுகள் வரும் என எதிர்பார்த்தாள் ஆனால் கிடைக்கவில்லை. மறுநாள் அந்த பையனிடம் சென்று உனக்கு மட்டும் எப்படி இவ்ளோ காசுகள் வந்தது என கேட்டாள். அவன் சொன்னான், ஒரு பல்லுக்கு ஒரு காசுதான் கிடைக்கும் நான் சேர்த்து வைத்து வாங்கினேன் என்றான்.
லிண்டாவிற்கு பேராசை தாங்காமல் கிடைத்ததையும் தவறவிட்டாள். அவளுக்கு இருந்த கோபம் தீரவில்லை. தேவதை ஏன் எனக்கு நான் கேட்டதை தரவில்லை என அவளுக்குள் பல கேள்விகளை கேட்டுக்கொண்டாள். அது லிண்டாவின் இயல்பான சுபாவம் தான். ஒரு தவறை செய்துவிட்டு பின்பு அதற்காக மனம் வருந்துவாள். அவள் தேவதையிடம் நடந்து கொண்ட விதத்தை எண்ணி கலங்கினாள்.
தேவதைக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதில் தனது தவறை பற்றி எழுதி இருந்தாள். அவள் அதை தலையணைக்கு அடியில் வைத்தாள். ஆனால் தேவதை அவளை தேடி வரவில்லை. தினமும் அதே போல் கடிதம் எழுதினாள். அந்த சிறுவர்களிடமும் உதவி கேட்டாள்.
நாளாக, நாளாக அவளுக்கு பற்களும் விழத் தொடங்கின. அவளும் அந்த பல்லுடன் தினம் ஒரு கடிதத்தை வைத்தாள். ஒருவழியாக தேவதை வந்தாள். தேவதையை பார்த்ததும் மகிழ்ச்சியானாள் லிண்டா. தேவதையிடம் மன்னிப்பு கேட்டாள். தேவதையும் லிண்டாவை மன்னித்தாள். அவளுக்கு நிறைய காசுகளை கொடுத்தாள். இந்த முறை லிண்டா அதை வாங்கிகொள்ளவில்லை. பேராசை படுவது மிகவும் தவறானது எனக்கு வேண்டாம் என்றாள்.
தேவதை அவளுக்கு விரும்பியதை கேள் தருகிறேன் என்றதும் லிண்டா நான் மற்றவர்கள் மேல் கோபம் வராமல் இருந்தால் போதும் என்று கேட்டுக்கொண்டாள். தேவதையும் சம்மதித்தாள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications