குழந்தை நீதி கதைகள்: எதிர்த்து நில் ! எதிரியே இல்லை! - முயல் கூட்டம்
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், இந்த வாரம் நம்ம எல்லாருக்கும் புடிச்ச முயல் குட்டிகளை வெச்சு ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன். எப்படி தைரியமா இருக்கணும்னு நமக்கு சொல்லி தர போறாங்க. வாங்க பாக்கலாம்.
காட்டின் ஒரு பகுதியில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என்று இருந்த அந்த இடத்தில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தன. அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்து கொண்டு இருந்தது.திடீரென கோடைக்காலம் வந்தது. கோடைக்கால வெப்பத்தினால் அங்கே பச்சை பசேலென இருந்த புற்கள் எல்லாம் கருக உணவு கிடைப்பது கஷ்டமானது. முயல்கள் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தன.பக்கத்து இடங்களுக்கு இரைதேடி போகமுடியாமல் அவதிப்பட்டன. ஏனெனில் வேட்டை நரிகள் முயல்களை வேட்டையாட சமயம்பார்த்துக்கொண்டு இருந்தன. முயல்களின் பொந்துக்கு அருகில் சுற்றி கொண்டிருந்தன. அந்த நரிகளுக்கு பயந்து பொந்துக்கு வெளியே போகாமல் முயல்கள் பதுங்கிக்கொண்டிருந்தன. எவ்வளவு நாள் தான் இப்படி வெளியே போகமுடியாமல் ஒளிந்து கொண்டிருப்பது. நாம் எதாவது செய்யவேண்டும் என கூடி பேசிக்கொண்டன.

அப்போது தலைவர் சொன்னார், "கடவுள் நம்மை பலவீனமாக படைத்துவிட்டார்.எல்லா விலங்குகளுக்கும் எதாவது பிரச்சனை வந்தால் தங்களை காத்து கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன.ஆனால், நாம் என்ன பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் பலவீனமாக இருக்கிறோம்.கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்துவிட்டார்".என்று குறைக்கூறி கொண்டிருந்தது. மற்ற முயல்கள் சோகமாக இருந்தன.
"என்னால் இதற்குமேல் பொறுமையாக இருக்கமுடியாது.பசியினாலும் இந்த வேட்டை நரிகளையும் பார்த்து பயந்து ஒளிந்து வாழ்வதைவிட சாவதே மேல்" என ஒரு இளம் முயல் தனது நண்பர்களிடம் புலம்பியது. அதற்கு, "நண்பா, நாம் என்ன செய்வது?. நாம் பலவீனமானவர்கள். பயந்துதான் ஆகவேண்டும்" என ஏக்கப்பட்டது நண்பன் முயல். எறும்புகள் நம்மைவிட சிரியவர்கள்தான். எதிரிகளை எதிர்த்து கடிப்பதில்லையா? பக்கத்து இடத்திற்கு நாளை இரைத்தேட போயாகவேண்டும்." என்றது இளம் முயல். மற்ற முயல்கள் தலையசைத்தன. "அதற்குமுன் இன்று இரவு நாம் ரகசியமாக சந்திக்கவேண்டுமென அந்த முயல்கள் திட்டம் போட்டன.
மறுநாள் காலை வழக்கம் போல் எல்லா முயல்களும் தங்கள் பசியை குறித்து புலம்பிக்கொண்டு இருந்தன. இளம் முயல் எல்லோர் முன்னிலையில் வந்து, "நாங்கள் ஐவரும் இரைத்தேட போகிறோம். நாங்கள் திரும்பவந்தால், உங்களுக்கும் இரைக்கொண்டு வருகிறோம். இல்லையென்றால் நரிகளுக்கு இறையாகிறோம். பயந்து வாழமுடியாது இனி" என சில பொருள்களை எடுத்துக்கொண்டு பொந்தைவிட்டு வெளியே வந்தன. நான்கு நரிகள் தூரத்தில் பார்த்து கொண்டு இருந்தன. முயல்கள் தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு ஆளுக்கு ஒருபக்கம் சென்றன. மற்ற முயல்கள் வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தன.
மறுநாள் காலை வழக்கம் போல் எல்லா முயல்களும் தங்கள் பசியை குறித்து புலம்பிக்கொண்டு இருந்தன. இளம் முயல் எல்லோர் முன்னிலையில் வந்து, "நாங்கள் ஐவரும் இரைத்தேட போகிறோம். நாங்கள் திரும்பவந்தால், உங்களுக்கும் இரைக்கொண்டு வருகிறோம். இல்லையென்றால் நரிகளுக்கு இறையாகிறோம். பயந்து வாழமுடியாது இனி" என சில பொருள்களை எடுத்துக்கொண்டு பொந்தைவிட்டு வெளியே வந்தன. நான்கு நரிகள் தூரத்தில் பார்த்து கொண்டு இருந்தன. முயல்கள் தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு ஆளுக்கு ஒருபக்கம் சென்றன. மற்ற முயல்கள் வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தன.
முயல்கள் தனியாக வருவதை பார்த்த நரிகள் தனித்தனியாக முயல்கை பிடிக்க வேகமாக ஓடி வந்தன. ஒரு முயல் அசையாமல் நின்று கொண்டு இருந்தது. நரி அந்த முயலை பிடிக்க பாய்ந்தது. அப்போது முயலின் முன் இருந்த ஒரு மூடுகுழியில் விழுந்தது. அதனால் வெளியே வரமுடியவில்லை. மற்றொரு முயல் நரி அருகில் வர பயப்படாமல் நின்று கொண்டிருந்தது. நரி அருகில் வந்ததும் சட்டென நகர்ந்தது. முயலின் பின்னால் முள்வேலி இருந்தது. அதில் சிக்கி துடிதுடித்தது. மீதி இருந்த முயல்கள் வேகமாக ஓடி நரிகளை களைப்படைய செய்தன. ஒரு முயல் மரத்தின் மேல் ஏறி வைக்கப்பட்டிருந்த கற்களை களைப்பாக இருந்த நரிகள் மேல் வீசி எரிந்தது.வலியால் நரிகள் கத்தின. இரவு தாங்கள் போட்ட திட்டத்தை அந்த ஐந்து முயல்கள் கச்சிதமாக நிறைவேற்றி கொண்டிருந்தன. இதை பொந்துக்குள் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மீதி முயல்கள் தைரியமாக வெளியே ஓடி வந்தன. முயல்கூட்டம் வருவதை பார்த்த அந்த காயமடைந்த நரிகள் பயந்து ஓடின. முயல் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. அந்த ஐந்து முயல்களின் தைரியத்தை பாராட்டிய மற்ற முயல்களுக்கு புதிய தைரியம் வந்தது. எல்லோரும் ஒன்றாக இரைதேட கிளம்பின.
கதையை பாத்தீங்களா குட்டீஸ், ஒரு குட்டி முயலுக்கு தைரியம் வந்து தன்னோட எதிரியை விரட்டிருச்சு. அதனால நீங்களும் எப்பவும் தைரியமா இருக்கனும். அனாவசியமா யாரை பார்த்தும் பயப்படக்கூடாது. உங்கள நீங்களே பலவீனமா நெனச்சுக்கக்கூடாது. நேர்மையான ஒரு செயல செய்ய துணிவா இறங்கணும் சரியா...
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications