குழந்தை நீதி கதைகள்: வெயிலை விட மோசமா இந்த குளிர்.. சிட்டு குருவிக்கு என்ன ஆச்சு!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. பரிட்சை நல்லபடியாக எழுதுறீங்களா? சரி உங்களுக்கு குருவிகள் வளர்ப்பதற்கு பிடிக்குமா? அப்படி இல்லையென்றாலும் இந்த வெயில் காலத்தில் சிட்டு குருவிகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வையுங்கள். இந்த கதையில் கூட ஒரு சின்ன பொண்ணு எப்படி உதவினா என்பதை பார்க்கலாம்.
அழகான பாரிஸ் நகரத்தில் மேரி என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் பள்ளி முடித்தவுடன் அவளது வீட்டின் பின்புறம் இருக்கும் சிறிய கார்டனில் நேரத்தை செலவழிப்பாள். அந்த கார்டனில் பல வகையான குருவிகள், அணில்கள் என வாழ்ந்து வந்தன.

பெரும்பாலும் இந்த குருவிகளை பார்க்கும் குழந்தைகள் அதை பிடிக்க ஓடுவார்கள், அல்லது கல் எடுத்து அடிப்பார்கள். ஆனால் மேரி அவர்களை விட முற்றிலும் மாறுபட்டவள். தினமும் கார்டனில் இருக்கும் சிறிய செயற்கை நீர் வீழ்ச்சி அருகில் அவைகளுக்கு தானியங்களை உணவாக வைப்பாள். அங்கு என்னென்ன குருவிகள் வாழ்கின்றன அதன் பெயர்கள் வரை மேரிக்கு அத்துப்பிடி.
என்னதான் மேரி உணவு வைத்தாலும் குருவிகள் தனியாக உணவு தேடுவதையும் வழக்கமாக வைத்திருந்தன. மேரியை பார்த்தவுடனே குருவிகள் குஷியாகி பாட்டு பாட தொடங்கி விடும். அது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. குருவிகள் பாடுவதை சிலர் எரிச்சலாக எண்ணினாலும் மேரிக்கு அது இசை மீட்டுவது போலவே தோன்றும். குருவிகள் அந்த செயற்கை நீர் வீழ்ச்சியில் குளித்து இறக்கையை உதறும்போது மேரி முகத்தில் தெறிக்கும் அந்த நீர் அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை தரும். அதற்காகவே குருவிகள் அதை செய்யும். வெயில் காலம் இப்படியாக கடந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக பனிக்காலம் வர தொடங்கின. குருவிகளால் வெளியில் உள்ள அந்த நீர்வீழ்ச்சியில் காலை வைக்க முடியாத அளவுக்கு குளிர். அவைகள் அந்த கார்டனில் நடக்க முடியாத அளவுக்கு வெள்ளை திடலாக பனி கொட்டி கிடக்கிறது. வெளியில் தானியம் தேடவும் முடியாமல் போனது. தினமும் வரும் மேரி வராமல் அவைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
சரி, இப்படியே இருந்தால் என்ன செய்ய முடியும் கொஞ்சம் நீரையாவது குடித்து வாழலாம் என்று ஒரு குருவி சொல்ல, மற்றொரு குருவியும் மரத்தில் இருந்து வெளியே வந்து நீர் வீழ்ச்சி அருகில் சென்றது. இருவரும் நீரில் காலை வைத்த உடனே உறையும் பனியை உணர்ந்தார்கள். உடனடியாக கூட்டுக்கு திரும்பினார்கள்.
இப்படியே இருந்தால் நாம் இறந்து விடுவோம், கூட்டத்தை கூட்டுங்கள், ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்கள். அந்த கார்டனில் இருந்த அணில்கள், குருவிகள் அனைத்தும் இரு இடத்தில குவிந்தன. ஒரு குருவி சொல்லியது, இவ்வளவு நாள் மேரி நமக்கு உணவளித்தாள், இப்பொது அவளும் வரவில்லை. ஆகையால் நாம் அவளை தேடி சென்று உதவி கேப்போம் என்றது. ஒரு குருவி கூறியது, அவள்தான் வரவில்லையே. கேட்டால் மட்டும் உதவுவளா? என்றது. மற்றொரு குருவி இதை விட்டால் வேறு வழி இல்லை என்றது.
மொத்த குருவி கூட்டமும் மேரியின் அறை கண்ணாடியை கொத்தின. மேரி காய்ச்சலில் ஒரு வாரத்துக்கு மேலாக கஷ்டப்படுகிறாள் என்பதை கண்ட குருவிகளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. இவை கண்ணாடியை கொத்தியதை பார்த்த மேரி ஜன்னலை திறந்தாள். ஒரு 10, 15 குருவிகள், அணில்கள் என உள்ளே நுழைந்தன.

அது மேரி கண்களுக்கு ஆச்சர்யமாகவும் அழகாகவும் தெரிந்தது. நீ வெளியே வரவில்லை, எங்களுக்கு உணவும் இல்லை என்றது ஒரு குருவி. மேரி ஒரு நிமிடம் என அவளுக்காக வைத்து இருந்த வெதுவெதுப்பான நீரை ஒரு பௌலில் ஊற்றினாள். நீரே குடிக்க முடியாமல் குளிரில் நடுங்கிய குருவிகள் வேகமாக அதை பருகின.
மேலும் மேரி அவற்றிற்கு மற்றொரு பௌலில் தானியங்களை இட்டாள். அவைகளிடம் மன்னிப்பும் கேட்டாள். உடல்நிலை சரி இல்லாததால் உங்களை மறந்தது என் தவறுதான் என்றாள். வெதுவெதுப்பான பெட்களை தயார் செய்தாள் மேரி. இதை பார்த்த குருவிகளில் ஒன்று அவள் என்ன செய்கிறாள் என்று கேட்க. பனிக்காலம் முடியும் வரை நீங்கள் இங்கயே தங்கலாம் என்றாள் மேரி.
மேரியின் இந்த கனிவான உள்ளதை கண்டு குருவிகள் அவளுக்காக அழகான பாடலை பாடி நன்றி கூறின.












Click it and Unblock the Notifications