குழந்தை நீதி கதைகள்: வட போச்சே - அறிவாளி நரியும் ஏமாளி சிங்கமும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எல்லோரும் சூப்பரா இருப்பீங்கனு நம்பறேன். இந்த வாரம் உங்கள ஒரு அழகான காட்டுக்கு கூட்டிட்டு போகப்போறேன். அங்க ஒரு குள்ள நரியும் காட்டுராஜா சிங்கமும் நமக்காக காத்திருக்காங்க போய் பாக்கலாம் வாங்க.

ஒரு அடர்ந்த காடு இருந்தது. அங்க மிருகங்களுக்கு ராஜாவான சிங்கம் வாழ்ந்து வந்தது. அங்க இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்திற்கு பயந்து வாழ்ந்து வந்தன். சிங்கம் வெளியில் நடமாடும் பொழுது நரிகள் வெளியில் வருவதை தவிர்த்தன. சிங்கம் இல்லாத சமையங்களில் தங்களுக்கான இரையை தேடி வைத்து கொண்டன. அதனால் சிங்கத்திற்கு இரை எளிதில் கிடைக்கவில்லை. இரையை தேடி சுத்தித் திரிந்தது. நீண்ட நேரமாக தனக்கான இரையை தேடிகிட்டு இருந்தது. இரை கிடைக்கவேயில்லை. களைப்பாக நடந்து கொண்டிருக்கும்போது ஒரு குகையை கண்டது.

Short story for kids in Tamil : Speaking cave - The Lion and Fox

உள்ளே சென்று பார்க்கும் பொது யாரும் இல்லை." நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள். அவர்கள் வரும்வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு" என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, குகையின் ராஜா போல அமர்ந்து இருந்தது. மாலை நேரமானதும் அந்த குகையில் வசித்து வந்த குள்ளநரி திரும்ப வந்து பார்க்கும் போது வெளியே சிங்கத்தின் கால்தடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அது சந்தேகத்தின் பேரிலே யோசித்தது. "உண்மையில் சிங்கம் வந்து சென்றுவிட்டதா? இல்லை உள்ளே காத்துக்கொண்டு இருக்கிறதா?. இப்போது நான் உள்ளே சென்றால் தனக்குத்தானே அபாயத்தை ஏற்படுத்தியதாக இருக்கும்" என்று எண்ணியது குள்ளநரி.

ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க புத்திசாலிதனமாக ஒரு திட்டம் போட்டது. "ஓ.. குகையே" என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது. இதை கேட்டு உள்ளே இருக்கும் சிங்கத்திற்கு ஒரே சந்தோசம். அப்படியே சத்தமிடாமல் பதுங்கி இருந்தது.

மீண்டும் குள்ளநரி," ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்?" என்று கேட்டது. சிங்கம் குழப்பம் அடைந்தது. நரி குகையிடம் பேசுவது சிங்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. "ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று.எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய். இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய். என்மேல் எதாவது கோபமா?. நான் திரும்ப செல்கிறேன்" என்று சொன்னது.

"அடக்கடவுளே! கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ? இப்பொது நான் எதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் நம்முடைய இரை சென்றுவிடும். ஒருவேளை நான் இருப்பதால்தான் குகை பயந்து பேசாமல் இருக்கிறதா?" என்று எண்ணியவாறு தன்னுடைய கர்ஜிக்கும் குரலால் "வணக்கம் நண்பா" என்று கூறியது. நிம்மதி பெருமூச்சு விட்ட குள்ளநரி, நல்லவேளை பிழைத்தோம் என்று நினைத்து கொண்டு அங்கு இருந்து ஓட்டம் பிடித்தது.

குட்டிஸ், குள்ளநரி எப்படி தன்னுடைய அறிவினால உயிரை காப்பாத்திக்கிச்சுனு பாத்தீங்களா. நீங்களும் உங்களோட ஆபத்தை கண்டு பயப்படாதீங்க. சரியா சிந்திச்சு செயல்பட்டா நம்மளோட ஆபத்தை வெல்லலாம். சிந்திப்போம் செயல்படுவோம் ! அறிவே ஆற்றல்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+