குழந்தை நீதி கதைகள்: கானுட் மன்னனும் கடல் அலையும்!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு அரசரின் உண்மை கதையை தான் இப்போ நீங்க படிக்க போறீங்க. அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு அவர் மொத்த வாழ்க்கையையும் எப்படி மாற்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம்..
இங்கிலாந்தில் வாழ்ந்த மன்னன் கானுட். இவர் பல நாடுகளை வென்று ஒரு பெரிய ராஜாங்கத்தையே தனக்கு கீழ் நிறுவினார். அதனால் இவருக்கு பெரிய அரியாசனம் கொடுத்து இவரை பெருமையாக பேச ஆரம்பித்தார்கள்.

இவர் அரியாசனம் செல்லும் இடங்கள் எல்லாம் மன்னரை எதிர்க்க ஆள் இல்லாமல் போக ஆரம்பித்தது. அரசரை எதிர்க்க ஆளில்லை என்று பெயர் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்தது. இந்த பெயரால் அரசரின் உடன் இருந்தவர்கள் அவரின் புகழை பாட பாட கானுட் மன்னனுக்கு தலைக்கனம் ஏற ஆரம்பித்தது.
தன்னை எதிர்க்க யாராலும் முடியாது என்ற எண்ணம் அதிகமான கானுட் மன்னன் ஒருநாள் திரண்டு வரும் கடல் அலை கூட என் அரியாசனத்தை பார்த்தால் நின்று விடும் என சொல்ல சிலர் அவரை உங்களால் முடியும் என்று உசுப்பேத்த அவரும் அரியாசனத்தை தூக்கி கொண்டு கடலுக்கு சென்றார்.
கடல் அலை முன்னால் தனது அரியணையை எடுத்து வைத்தார். கடலுக்கும் அவர் அரியணைக்கும் இடைவெளி இருக்க, அவர் கடல் அலையை பார்த்து நில் என சத்தமாக கத்தினார். கடல் அலை மெதுவாக அடிக்கவும், அரசரும் அவர் அருகில் இருந்தவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது.
உடனே குஷியான கானுட் மன்னன் இன்னும் சத்தமாக கடல் அலையே நில் என்று சொல்ல கடலும் அதே போல அமைதியாக வீச இப்போது நின்று விடும் என நம்பினார் அரசர். கடல் அலை சொன்னது போல நிக்குமா, என யோசித்து கொண்டே கானுட் மன்னனை பார்த்தார்கள். அவர் அகோரக்ஷமாக இன்னும் கடலை பார்த்து கத்த கடல் அலை அடிக்கவில்லை.
அவ்வளவுதான் எல்லோரும் சந்தோஷத்தில் குதிக்க, மன்னரின் புகழை பாட ஆரம்பித்தார்கள். மன்னனுக்கும் தன்னால் தான் கடல் அலை வீசவில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கடல் அலை சுழட்டி பெரிய அலையாக அடிக்க அரசரின் அரியனையோடு தூக்கி வீசியது. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.
அரசரின் தலையில் இருந்த தங்க க்ரீடம் அலையில் அடித்து கீழே விழ, அவரால் அதை மற்றவர்கள் முன்னாள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் போனது. இப்போது தான் கானுட் மன்னனுக்கு புரிந்தது. நம்மால் எதையுமே நிறுத்த முடியாது, முக்கியமாக இயற்கையை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். அதன் பிறகு அவரால் அரியணையில் ஏறி அமர மனம் வரவில்லை.
மக்களுக்கும் மற்ற ராஜ்ஜியத்திற்கும் அவர் செய்த செயல்கள் அவரை அரியணையில் மீண்டும் அமர விடாமல் தடுத்தது. இவர் செய்த செயல் நாடெங்கும் பரவியது. கானுட் மன்னனின் தலைக்கனம் நீங்கியது. மீண்டும் அரியணை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் மனம் மாறினான். இருந்தாலும் இவன் கடல் அலையை நிறுத்த போவதாக கூறியது சரித்திரத்தில் இடம் பிடித்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications