குழந்தை நீதி கதைகள்: அதிபுத்திசாலியான ராஜா.. எப்படி சிக்கியிருக்காரு பாருங்க!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. அடிக்கிற வெயிலுக்கு யாரோட ஊரில் எல்லாம் மழை பெய்கிறது. சரி, உங்க நண்பர்கள்ல யாராச்சும் தான்தான் பெரிய அறிவாளி அப்படின்னு சொல்லிருக்காங்களா, அப்போ இந்த கதையை அவங்களுக்கு சொல்லுங்க. இப்போ கதையை படிக்கலாமா.
அது ஒரு அழகான ராஜ்ஜியம். ராஜ்ஜியத்தின் அரசர் மிகவும் அறிவாளி. தன் மக்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணினார் அரசர். அவர்களும் அதுபோலவே இருப்பதாக நினைத்து பெருமிதம் கொண்டார். தங்கள் ராஜ்ஜியத்தை விட அறிவாளிகள் எங்கும் இல்லை என்று தலைக்கனத்தில் ஆடினார்.

இவருக்கு இளம்வயதில் பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர் இவரின் இந்த கர்வத்தை பற்றி கேள்விப்பட்டு, என்னதான் அரசனாக இருந்தாலும் தனது மாணவன். அவனை சீர் படுத்துவது தனது கடமை என எண்ணி, தனது மற்ற மாணவர்களில் புத்திசாலியான மூன்று பேரை வரவழைத்தார். வில்லியம், ஹென்றி மற்றும் ஜாக் மூவரும் ஆசிரியர் சொன்னதை கேட்டுக்கொண்டு அரசன் இருக்கும் நகரத்திற்கு சென்றார்கள்.
வில்லியம், அங்கிருந்த கடைகள் இருக்கும் வீதிக்கு சென்றான். ஒவ்வொரு கடையாக பார்த்து வந்தவன் ஒரு கடையில் பாதம் விற்பதை பார்த்து 50 ரூபாய்க்கு எவ்வளவு பாதம் என்று கேட்க 100 வரும் என்று சொன்னான். 50 ரூபாயை கொடுத்து இப்பொது 25 பாதம் கொடு, மிச்சத்தை என் வேலையாள் வருவான் அவனிடம் கொடு என சொல்ல அவனும் சரி என்று தலையாட்டினான்.
வில்லியம் மற்றொரு கடைக்கு சென்று ஒரு அழகான ஷூவை காண்பித்து அதன் விலையை கேட்டான். அது 300 ரூபாய் என்று சொல்ல, வில்லியம் 125 ரூபாயை கொடுத்து மிச்சம் அந்த பாதம் கடையில் இருக்கிறது உங்கள் வேலைக்காரனை அழைத்து வாங்கி வாருங்கள் என்று சொல்ல அவனும் ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்து அனுப்பினான்.
அதை பார்த்த பாதம் கடைக்காரன் வேலைக்காரனிடம், ஆமாம் கொடுக்கணும் நான் இன்னும் எண்ணி வைக்கவில்லை, கொஞ்ச நேரத்தில் எண்ணி தருகிறேன் என்று சொல்ல அவனும் சரி என அந்த ஷூவை வில்லியமிடம் கொடுத்து அனுப்பினான். சிறிது நேரம் கழித்து மிச்சம் 175 ரூபாயை வாங்கி வர வேலையாளை அனுப்பினான், அவன் பாதம் தான் மிச்சம் இருக்கிறது என்று சொல்ல, நம்மை விட அறிவாக ஏமாற்றிவிட்டானே என இதை அரசரிடம் எடுத்து சென்றார்கள்.
மறுநாள் ஹென்றி, நல்ல உயர்தர உடைகளை அணிந்து கொண்டு அந்த ராஜ்ஜியத்தின் தச்சன் யார் என்பதை தெரிந்து அங்கு சென்றான். அவனின் வெளிப்புற தோற்றத்தை வைத்து, பெரிய செல்வந்தன் என அவனுக்கு ஒவ்வொன்றாக சுற்றி காண்பித்து, கடைசியாக ஒரு பூட்டை காண்பித்தான். இது வெறும் மரத்தால் செஞ்சதுதான் ஆனால், ரொம்ப பாதுகாப்பானது என்று சொன்னான். இதை நான் எப்படி நம்ப என ஹென்றி கேட்க, தச்சன் அவனையே ஒரு கம்பியில் வைத்து பூட்டி காண்பித்தான். பார்த்தீங்களா எவ்ளோ வலுவானது, சரி அந்த சாவியை எடுத்து திறந்துவிடுங்கள் என்று சொல்ல, ஹென்றி சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
தச்சனோ கத்தி, கூப்பிட்டும் ஹென்றி காதில் வாங்கிகொள்ளவில்லை. மீண்டும் இந்த செய்தி ராஜாவின் காதிற்கு செல்ல யாரடா அது, என் ராஜ்ஜியத்தின் மக்களை முட்டாள் ஆக்குவது நானே மாறு வேடத்தில் சென்று அவர்களை பிடிக்கிறேன் என்று கிளம்பினார். நகரத்துக்குள் சென்று கொண்டிருக்கும் போது, ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்து ஆப்பிள்களை விற்று கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு வினோதமாக இருக்கவே அரசனும் அவன் அருகில் சென்றார்.
யாரப்பா நீ மட்டும் தனியாக இங்கு இருக்கிறாய் என்று கேட்க, அதுவா நம்ம ஊரு மக்களை யாரோ ஏமாற்றுகிறார்கள் என சொன்னார்கள் அவனை பிடிக்கவே இங்கு அமர்ந்திருக்கேன் என்று சொன்னான். ஆமாம் நானும் அவர்களை தேடி தான் வந்துள்ளேன், உனக்கு அவர்களை தெரியுமா என்று அரசர் கேட்டார். ஆமாம் நன்றாக தெரியும், கண்டிப்பாக பிடித்துவிடலாம் அரசே என்று சொன்னான். நான் அரசர் என்று உனக்கு தெரியுதா என்று கேட்டதும் ஆமாம் என்றான் ஆப்பிள் வியாபாரி.
அப்படியென்றால் நான் மறைந்து கொள்கிறேன் என்று அரசர் சொல்ல, இங்கு மறைவதற்கு மரமோ அல்லது பாறைகளோ இல்லை என்று சொன்னான் ஆப்பிள் வியாபாரி. அப்போ என்ன செய்ய என அரசர் கேட்க நீங்கள் எதுவும் நினைக்கவில்லை என்றால் நான் ஆப்பிள் கொண்டு வந்த பையில் மறைந்து கொள்ளுங்கள் என்றான். அவர்கள் வந்ததும் நான் பிடித்து உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று சொல்ல, அவரும் பையில் ஒளிந்து கொண்டார்.
அந்த பையை நன்றாக கட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் ஆப்பிள் வியாபாரி. உண்மையில் அவன் ஆப்பிள் வியாபாரி இல்லை. அது ஜாக், அரசரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து போனான். அரசர் கத்தி சத்தம் போட, அரசரை தேடி அலைந்த சிப்பாய்கள் கண்டுபிடித்தனர்.
தன்னையும், தனது மக்களையும் ஏமாற்றியது யார் என யோசிக்க, அங்கு ஆசிரியர் வந்தார். அறிவான என் மாணவனாகிய நீ மமதையில் அலைந்ததால் உன்னை நல்ல வழி படுத்தவே, என் மாணவர்களை வரவைத்தேன். இந்த மூவரும் என் மாணவர்கள் என்று சொல்ல, நம்மை விட புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான் அரசன். தவறை உணர்ந்து ஆசிரியரிடம் மன்னிப்பும் கேட்டான்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications