குழந்தை நீதி கதைகள்: என் பிரெண்ட போல யாரு மச்சான்.. ரித்து.. நித்து.. நீங்க இவர்களில் யாரு ?..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ் ஸ்கூல் போக ஆரம்பிசிட்டீங்களா எல்லோரும். யாரெல்லாம் ஹாப்பியா இருக்கீங்க, யாரெல்லாம் சோகமா இருக்கீங்க. உங்கள்ள யாருக்கெல்லாம் புது பிரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க சொல்லுங்க.. நம்ம கதைல ஸ்கூலுக்கு புதுசா வந்த ரெண்டு பேர பத்தி தான் படிக்க போறோம். வாங்க படிக்கலாம்..
ஸ்கூல் ஓபன் பண்ணியாச்சு .. நம்ம கதையின் நாயகிகள் ரெண்டு பேரு ஒருத்தி ரித்து, இன்னொருத்தி நித்து. ரெண்டு பேருமே சமத்து குட்டீஸ். ரித்து அதே ஸ்கூல்ல படிச்சு ஆறாம் வகுப்பு போறா. ஆனால் நம்ம நித்து வேற ஸ்கூல்ல படிச்சிட்டு ஆறாம் வகுப்பிற்கு புது பள்ளிக்கு வந்துருக்கா. எல்லோரும் புதுசா வர பசங்கள வித்தியாசமா பாப்பாங்க இல்லையா அதுமாதிரிதான் ரித்து, நித்துவ வித்தியாசமா பார்த்தா. டீச்சர் நித்துவை , ரித்து பக்கத்துல உக்கார வச்சிட்டாங்க. மொதல்ல ரித்து அவளை ஏத்துக்கவில்லை.

நித்து, படிச்சது வேற பள்ளி என்பதால் இங்க சொல்லித்தர படங்கள் கொஞ்சம் அவளுக்கு கஷ்டமா இருந்துச்சு. அவ வேற யார்கிட்டயும் பெருசா பேசிக்கவும் இல்ல. ரித்து தான் அவ பக்கத்துல இருந்தா. நித்து ' இவை கிட்ட கேக்கலாமா, சொல்லித்தருவாளா ?' என குழப்பத்திலேயே இருந்தா . அவ அப்படி குழப்பத்தில் இருக்க காரணம் நம்ம ரித்துதான், பின்ன என்ன நம்ம ஸ்கூல் பத்தி தெரியாத பசங்களுக்கு நாம தான உதவி பண்ணனும். ஆனா ரித்து பக்கத்துல இருந்தும் நித்துக்கு உதவி பண்ணல, அவ தயக்கத்துல இருக்குறது தெரிஞ்சும் கண்டுக்காமல் விட்டுட்டா. அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் நித்து பேசி பேசி தனது குழப்பங்களை தீர்த்துக்கொண்டாள். நித்துவிடம் பேசிய பிறகு அவளிடம் நன்றாக நெருங்கி பழக ஆரம்பித்தாள் ரித்து. இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்த தயக்கம் இப்போது இல்லை. ரெண்டு பெரும் நல்ல தோழிகளாக மாறினார்கள்.
ஒருநாள் கிரௌண்டில் விளையாடி கொண்டிருக்கும் போது ரித்து காலில் அடிபட்டது. அதில் இருந்து ரித்து கொஞ்சம் காயம் ஆறும் வரை மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அடிபட்டதனால் தான் மெதுவாக நடக்கிறாள் என்பதை நித்து அடிக்கடி மறந்து விடுவாள். ஒருநாள் இருவரும் ஸ்டோரில் சென்று சில நோட்டுகளை வாங்கினார்கள். வகுப்புகள் தொடங்கும் நேரம் ஆகிவிட்டதால் நித்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள். ஆனால் ரித்துவால் அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ரித்து ' நித்து மெதுவாக போ.. என்னால நடக்க முடியவில்லை' என கூறினாள். நித்து காதில் வங்கோய் கொள்ளவில்லை, ' இவ வேற மெதுவா போ , மெதுவா போ ' னு சொலிட்டே இருப்பா என முனகி கொண்டே நடந்தாள்.
ரித்து கையில் நோட்டுகள் இருந்ததால் இன்னும் மெதுவாகவே நடந்தாள். இவளை திட்டி கொண்டே நடந்த நித்து வழியில் இருந்த கல்லை கவனிக்கவில்லை. அந்த கல்லில் இடித்துக்கொண்டாள் நித்து. அவளுக்கு அடிபட்டதை பார்த்த ரித்து உடனடியாக உதவி செய்தாள். நித்து அப்போதுதான் தன் தவறை உணர்ந்தாள். அவளிடம் மன்னிப்பும் கேட்டாள். ஆரம்பத்தில் ரித்து உதவி செய்யவில்லை என்றாலும் நித்துவின் குணம் பற்றி அவள் அறிந்து இருந்ததால் தோழியை விட்டு கொடுக்காமல் அவளுக்கு தக்க சமயத்தில் உதவி செய்தாள்.
ஆகையால் குழந்தைகளே உங்களுடன் புதிதாக பழகும் நண்பர்களை புரிந்து கொண்டு ஒருவொருக்கொருவர் உதவியாக இருங்கள். பள்ளி நாட்கள் நமக்கு திரும்ப கிடைக்காத பொக்கிஷம். நன்றாக படியுங்கள். நல்ல நண்பர்களை அருகில் வைத்து கொண்டு பெற்றோர், ஆசிரியருக்கு கீழ்ப்படிதலுடன் நடந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மாயாஜாலங்கள் நிறைந்த தந்திர கதைகளுடன் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications