குழந்தை நீதி கதைகள்: சித்திர குள்ளர்கள் கொடுத்த பரிசு.. உங்களுக்கு கிடைச்சா என்ன பண்ணுவீங்க?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், வீகென்ட் வரப்போகுதுன்னு ரெடியா இருக்கீங்களா. சரி நாம இன்னைக்கு படிக்க போற கதை கொஞ்சம் வித்தியசமா இருக்கும். கண்டிப்பா ஒரு குட்டி மாயாஜாலத்தோட, நம்ம விசித்திர கதைகளை படிக்க தயாராகுங்க.
ஷமி தன்னோட அப்பாவுடன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனுடைய அம்மா ஷமி சின்ன வயதில் இருக்கும்போதே இறந்ததால , அவனுடைய அப்பா மேத்யூஸ் இன்னொரு பொண்ணை திருமணம் செய்து கொண்டார். மேத்யூஸ் அப்புறம் ரவீனா சந்தோசமாக வாழ்ந்து வந்தாலும், ரவீனாவிற்கு ஷமியை சுத்தமா பிடிக்கலை. அவனை பார்த்தாலே எரிந்து விழுந்து கொண்டே இருந்தார். அவனை வீட்டிலேயே தங்க விட மாட்டார். எதாவது ஒரு வேலை சொல்லி கொண்டே இருப்பாள்.

ஷமி ஒரு வெகுளி. அவன் அப்பா மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தான். இருந்தாலும் சில நேரங்களில் எங்காவது சென்று விடலாம் என்றெல்லாம் யோசித்து இருக்கிறான். ரவீனா இல்லாத சமயங்களில் மேத்யூஸ் ஷமியை நன்றாக கவனித்து கொள்வார். அதனாலேயே அவன் போகாமல் இருந்து விடுவான். ஒருநாள் ரவீனா வீட்டில் விறகுகள் இல்லை போய் எடுத்து வா என அனுப்பி விட்டார்.
அவனும் மறுப்பு ஏதும் சொல்லாமல் கோடரியை எடுத்து கொண்டு காட்டுக்கு புறப்பட்டான். விறகுகளை வெட்டி எடுக்க ஆரம்பித்தான். காடும் இருள் சூழ ஆரம்பித்தது. அவன் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டான். அவன் கொண்டு வந்த விறகை பார்த்து பாராட்டாமல் அவனது சித்தி கோடாரியை எங்கே என கேட்டாள். அவன் காட்டில் எங்கோ அதை மறந்து வைத்து விட்டான். அவள் சத்தம் போடவே காட்டுக்கு விரைந்து சென்றான். இருட்டியது என்றும் பாராமல் அவனை அனுப்பி விட்டாள். ஷமி பயந்து பொய் கோடாரியை தேடி கடு முழுக்க அலைந்தான். காட்டின் மிக ஆழ்ந்த பகுதியை நெருங்கியதை அவன் அறியவில்லை.
திடீரென அவன் மேலே மழைத்துளிகள் விழ அவன் என்ன செய்வதென ஒதுங்கி கொள்ள இடத்தை தேடினான். தூரத்தில் சில வெளிச்சம் அவன் கண்ணை பறித்தது. தீப்பந்தங்கள் போன்று அவனுக்கு தெரிய ஆரம்பித்தது. அருகில் செல்ல செல்ல ஒரு குகையை பார்த்தான். அந்த குகைக்குள் தீ மூட்டி சிலர் அதை சுற்றி நடனம் ஆடி கொண்டிருந்தார்கள். அதை ஒரு ஓரமாக இருந்து ரசித்து கொண்டிருந்தான். அவர்கள் குள்ளமாக இருந்தார்கள். இதுபோல இதுவரை அவன் யாரையும் பார்த்தது இல்லை.
சித்திர குள்ளர்களில் ஒருவன் ஷமியை அழைத்தான். தங்களுடன் நடனம் ஆட வைத்தான். பிறகு ஷமி அவர்கள் மூட்டிய நெருப்பு அருகில் பரவுவதை கண்டு அதை முழு மூச்சாக அணைத்தான். அவனால் அந்த இரவு அவர்களும், காடும் தப்பியது என சொல்லி ஷமிக்கு நன்றி கூறினார்கள். ஷமியிடம் உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார்கள். ஷமி எதுவுமே கேட்கவில்லை.
சித்திர குள்ளர்களில் ஒருவன் அவனிடம் ஒரு கை விசிறியை கொடுத்து இதை விரித்து உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள் உனக்கு அது கிடைக்கும். உனக்கு அது போதும் என்று தோன்றினால் உடனடியாக சாந்தி, சாந்தி, சாந்தி என மூன்று முறை கூறினால் நின்றுவிடும் என்று சொன்னார். அதன்பிறகு அந்த குகையில் இருந்து அவர்கள் மாயமாக மறைந்தார்கள். ஷமி அதிர்ச்சி அடைந்தாலும் அன்றிரவு அந்த குகையில் கழித்தான். விடிந்ததும் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தான்.
விடிந்தது, அவனுக்கு பசி எடுத்ததால் அந்த விசிறையை உபயோகித்தான். தனக்கு அருமையான சூடான உணவு வேண்டும் என்றான். அவன் கனவிலும் அப்படியான உணவு வகைகளை பார்த்திருக்க மாட்டான். அவன் சாந்தி, சாந்தி, சாந்தி என்று சொன்ன பிறகுதான் வானிலிருந்து வந்து கொண்டிருந்த உணவு நின்றது. அவன் இந்த மாதிரி சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி இருந்தது. சாப்பிடடு முடிந்ததும் அவனை அறியாமல் உறக்கம் தள்ளியது. சரி அப்படியே தூங்கலாம் என்றவனுக்கு ஒரு யோசனை வந்தது. விசிறியை உபயோகித்து தூங்குவதற்கு அருமையான இடம் வேண்டும் என்றான். அவனுக்கு பல விதங்களில் இடங்கள் அமைந்தன. விசிறியை நிறுத்தினான்.
பிறகு வீடு செல்லலாமா என யோசித்தான். அவனது சித்தியை நினைத்தான். விசிறியிடம் நான் இங்கிருந்து தூரமாக உள்ள கடல் பகுதியின் அருகில் நல்ல ஒரு வீட்டில் வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய் என்றான். அதே போல அவனுக்கு பிரம்மாண்டமாக ஒரு வீடு கடற்கரை அருகில் கிடைத்தது. அதில் அவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அவனது தேவைகளுக்கு அந்த விசிறியை உபயோகித்து கொண்டான்.
இந்த செய்தி அவன் சித்தியின் காதுகளில் வந்து சேர்ந்தது. அதன்பிறகு என்ன நடந்திருக்கும் என கமெண்டில் சொல்லுங்கள். அடுத்தவாரம் தொடரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications