குழந்தை நீதி கதைகள்: ஒரே பழத்தால் மாறிய நான்சியின் வாழ்க்கை.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. ஸ்கூல் விடுமுறை முடிந்து பள்ளிக்கு போக யாரெல்லாம் தயாரா இருக்கீங்க? யாருக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் விடுமுறை இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது.. சரி இன்னைக்கு என்ன கதையை படிக்க போறீங்க தெரியுமா? வாங்க படிக்கலாம்..
அந்த கிராமத்தில் இருந்த ஏழை விவசாயிக்கு நான்சி என்று ஒரு மகள் இருந்தாள். அப்பாவுக்கு விவசாயத்தில் உதவிகளை செய்து கொண்டு கிடைத்ததை வைத்து மகிழ்வாக இருந்தாள். அவர்களது வாழ்க்கை அன்றாடம் ஓடி கொண்டிருந்தது. ஒருநாள் அவளது தோட்டத்தில் இருந்த ஒரு பேரிக்காய் மரத்தை பார்க்க, அதில் ஒரு பழம் மட்டும் அவள் கண்ணில் வித்தியாசமாக பட்டது.

மரத்தில் ஏறி பறிக்க முயற்சி செய்தாள். முதல் நாள் அவளால் முடியவில்லை. சரி என மறுநாள், மரத்தின் அருகில் நின்று அந்த பழத்தையே வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்தாள். பறித்தே தீரவேண்டும் என்பது போல் அவளுக்கு மனம் துடித்தது. மரத்தில் ஏற, சறுக்க என விடாமல் முயற்சி செய்தாள். ஒருவழியாக அதன் கிளைகளை பிடித்து மேலே ஏற, திடீரென பலத்த காற்று வீச, ஏதோ கிளை அவளை தூக்கி மேலே விட்டது போல உணர்ந்தாள். ஒரு வழியாக பழத்தின் அருகில் ஏறினாள்.
மற்ற பழங்களை விட இந்த பேரிக்காய் மட்டும் இன்னும் பொன் நிறத்தில் மின்ன, அதை சுவைத்தவளுக்கு ஆச்சர்யம், இதுவரை இப்படி ருசியான பழத்தை அவள் வாழ்நாளில் சாப்பிட்டது இல்லை என தோன்றியது. மரத்தின் அடியில் அப்படியே அமர்ந்து ஓய்வெடுக்க, சட்டென மழை பெய்து, அவர்களது மொத்த விவசாயமும் சேதமாவது அவள் கண்முன்னே நடந்தது. ஆனால் அது ஒரு கனவு. இருந்தாலும் அவள் அதை யோசிக்காமல் அவளது நிலங்களில் சில பாத்திகள் அமைத்து மழை வந்தால் நீர் வெளியேற வழி வகுத்து சென்றாள்.
மறுநாள் தோட்டத்திற்கு அப்பாவும் மகளும் வந்து பார்க்க, அருகில் இருந்தவர்களின் நிலங்கள் அனைத்தும் திடீர் மழையால் சேதம் அடைந்து இருந்தது. நான்சியை பார்த்து தந்தை, நீ எப்படி மழையை கணித்தாய் என்று கேட்க அவள் பேரிக்காய் பழத்தை பற்றி சொன்னாள். அந்த பழம்தான் எனக்கு முன் எச்சரிக்கையாக இந்த கனவை கொடுத்தது என்றாள். நான்சி சொன்னதை நம்பியும், நம்பாமலும் தனது நிலம் எப்படியோ காப்பாற்றபட்டது என மகிழ்ச்சியில் அங்கிருந்து சென்றார். நான்சி மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள். இந்த முறை அவள் சற்றும் எதிர்பார்க்காத கனவு தோன்றியது.
அந்த கனவில் அவள் அந்த நாட்டின் ராணியாக முடி சூடுவது போல வர, அவளுக்கு அதை நினைத்து சிரிப்பு வந்தது. அப்படியே தனது தந்தையிடம் அதை சொல்லி சிரிக்க, ஒரு ஏழை விவசாயியின் மகள் ராணியாகவா என எண்ணி விழுந்து விழுந்து சிரித்தாள். இந்த பேரிக்காய் பழம் நமக்கு இப்படி ஒரு கனவை கொடுத்திருக்கிறது என்று ஏளனமாய் எண்ணினாள்.

அப்படியே அவள் தோட்டத்திற்கு சென்று அந்த மரத்திடம் சொல்லி சிரித்து கொண்டிருக்க, யாரோ ஒருவர் கீழே விழுந்தது போல சத்தம் கேட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்க்க, அங்கு ஒரு இளைஞன் குதிரையில் இருந்து கீழே விழுந்து கிடந்தான். அவனை பார்த்து காலில் பட்டிருந்த காயத்திற்கு, அருகில் இருந்த மூலிகைகள் வைத்து மருந்து தயாரித்து காயத்தில் போட்டாள். அவளின் அந்த செயல் அந்த இளைஞனை கவர, சட்டென என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்டான்.
அவள் தனது தந்தையிடம் கேட்க சொல்ல, அவரும் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து வைத்தார். அந்த இளைஞனுடன், குதிரை ஏறி பயணித்த நான்சி, அந்நாட்டின் அரண்மனைக்குள் பயணிப்பதை உணர்ந்தாள். நீங்கள் காவலாளியா என்று கேட்க, அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் வரவேற்பு இருந்தது. அப்போது தான் அவளுக்கு புரிந்தது, அவன் அந்நாட்டின் இளவரசன் என்று. நான்சியை ராணியாக அறிவித்து முடி சூட்டினார்கள். பேரிக்காயால் அவளது வாழ்க்கையே வேற லெவலில் மாறியது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications