குழந்தை நீதி கதைகள்: இப்படியும் மக்களா? எதார்த்தத்தை புரிந்து கொண்ட இளவரசன்..
சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டீஸ், எப்படி இருக்கீங்க. தன் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என நினைத்து கொண்டிருந்த இளவரசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது போல ஒரு சம்பவம் நடந்தது. அது என்ன என்பதை இந்த கதையை படிச்சி தெரிஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி ஒன் இந்தியாவில் உங்க புகைப்படம் வரணுமா மறக்காம கீழே இருக்கும் தகவலை படித்து தெரிந்து கொண்டு அனுப்பலாம்.
அது ஒரு அழகான ராஜ்ஜியம். சுற்றிலும் கடல், மலைகள் சூழ்ந்து பார்ப்பதற்கே பலருக்கும் பிடிக்கும். அந்த ராஜ்ஜியத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளவரசன் இருந்தான். அவனுக்கு தெரிந்தது எல்லாம், மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். தந்தையான அரசர் அவர்களை நன்றாக பார்த்து கொள்கிறார். அவன் வெளியில் சென்றால் மக்கள் ஆரவாரமாய் இளவரசனை வரவேற்பதும், அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் இளவரசனுக்கு மேலும் சந்தோஷங்களை அள்ளி கொடுத்தது.

எப்போதுமே சிப்பாய்களுடன் வெளியில் செல்லும் இளவரசன் அன்று தனியாக செல்ல முடிவு செய்து கிளம்பினான். வீட்டில் யாருடனும் சொல்லாமல் தனது குதிரையில் அரண்மனையில் இருந்து புறப்பட்டான். போகும் வழியெல்லாம் மக்கள் இளவரசனுக்கு பூக்கள் தூவி வரவேற்றார்கள். அவனுக்கு அவன் நாட்டின் மீதும், மக்கள் மீதும் கர்வம் ஏற்பட்டது. தனது நாடு இருக்கும் செழிப்பை கண்டு வியந்து சென்று கொண்டே இருந்த அவன் பாதை மாறி ஒரு காட்டுக்குள் சிக்கி கொண்டான்.
ஒரு அடர்ந்த காட்டுக்குள் எந்தவித சத்தமும் இல்லாமல், திசை தெரியாமல் திகைப்போடு நின்றான். யாரோ ஹம் பண்ணுவது போல அவன் காதுகளில் கேட்க, குரல் வந்த திசையில் சென்றான். தூரத்தில் ஒரு பழைய அரண்மனை இருந்ததை பார்த்தான். மெதுவாக அங்கு செல்ல, அந்த மெல்லிய குரல் ஓசை இன்னும் சத்தமாக கேட்டது. அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒரு பெண் இருந்தாள்.
அவள், அந்நாட்டின் இளவரசி என்று சொல்ல, மக்கள் இல்லை, ஒரு சிப்பாய் இல்லை, அரண்மனையில் யாருமே இல்லாமல் தனியாக இருக்கிறாய் என்று இளவரசன் கேட்டான். இளவரசி, அது என் மக்கள் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என நான் மெத்தனமாக இருந்தேன், ஆனால் கொஞ்ச நாட்களில் மக்கள் பஞ்சம் வந்து, கஷ்டத்தில் நாட்டை விட்டு குடிபெயரும் போதுதான் உண்மையை புரிந்து கொண்டேன் என்று சொல்ல, அவளையும் அழைத்து கொண்டு தனது நாட்டுக்கு திரும்பினான் இளவரசன்.
போகும் வழியெல்லாம் முற்செடிகளாய் இருக்க, அவனது உடை கிழிந்து பாழாய் போனது. நாட்டிற்கு திரும்பும்போது ராஜ்ஜியத்தின் இன்னொரு பகுதி வழியாக செல்ல நேர்ந்தது. அவன் பார்த்த ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை விட இவர்கள் ஏழ்மையாக தெரிந்தார்கள். அந்த மக்கள் வாழும் இடம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இளவரசனை யாருக்கும் அடையாளமும் தெரியவில்லை. முக்கியமாக அவன் ராஜ உடைகள் கிழிந்து போனதால் அவன் உருவத்தை வைத்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இளவரசன் வெகு தொலைவில் பயணித்து வந்ததால் சோர்வாகவும் இருந்தான். அவனை பார்த்த மக்கள், பரிதாபப்பட்டு உணவளித்து அவனுடன் நேரத்தை செலவு செய்தார்கள். அப்போதுதான் இப்படியும் மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ராஜ்ஜியத்தில் சில பிரச்சனைகள் இருப்பதையும் தெரிந்து கொண்டான். 2 நாட்கள் அந்த மக்களுடன் இருந்தான். மறுபடியும் ராஜ்ஜியத்திற்கு கிளம்பினான். அவன் உடைகள் கிழிந்தாலும் மக்களுக்கு அவன் யாரென்று தெரிந்ததால் அவனை உற்சாகமாக வரவேற்றார்கள்.

அப்போதுதான் அவனுக்கு புரிந்தது, மக்களை நாம் சரியாக சென்றைடையவில்லை என்று. அவன் அழைத்து வந்த இளவரசியுடன் இளவரசனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். இளவரசி தான் செய்த தவறை இளவரசனுக்கு எடுத்து சொன்னாள். அவனுக்கு உதவிய அந்த மக்களுடன் தனது திருமணம் நடக்க முடிவு செய்தான்.
அவர்கள் முன்னிலையில் கோலாகலமாய் திருமணத்தை செய்தான். திருமணம் முடிந்த கையோடு மக்களுக்கு அறிவிப்பையும் கொடுத்தான். இனிமேல் ராஜ்ஜியத்தில் இருக்கும் ஒவ்வொரு பகுதி மக்களையும் நேரில் வந்து பார்த்து 2 நாட்கள் தங்கி அவர்களின் தேவையை பூர்த்தி செய்வேன் என்றான். சொன்னதை தவறாமல் செய்தான். முன்பை விட ராஜ்ஜியம் இன்னும் அழகாக மாறியது. இளவரசியுடன் சந்தோஷமாக வாழ்ந்தான் இளவரசன் அலெக்ஸாண்டர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications