குழந்தை நீதி கதைகள்: இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே.. குட்டி ஸ்டோரி!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. பரீட்சைக்கான அட்டவணைகள் பலருக்கும் கிடைத்திருக்கும். நல்லபடியாக உங்கள் தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆகுங்கள். சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் இந்த குட்டி கதையை படிச்சிட்டு பிரெஷ் ஆகுங்க..
நகரத்தில் ஒரு காலனியில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அந்த காலனியில் பல குழந்தைகள், பெரியவர்கள் என மாலை வேளைகளில் ஒன்றாக இணைந்து கூடி மகிழ்வார்கள். அப்போது அதே காலனியில் ஒருவர் அவரது, வீட்டிற்கு புதிதாக ஒரு ரோபோட் ஒன்றை வாங்கினார்.

அது எல்லா வீட்டு வேலைகளை செய்து கொண்டு அவருக்கு துணையாக அது அவருடன் இருந்தது. எப்போதும் போல மாலையில் அந்த காலனியில் இருப்பவர்கள் ஒன்று கூடி இருக்கும்போது, அவர் அந்த ரோபோட்டை அழைத்து கொண்டு அங்கு வந்தார். அதை பார்த்ததும் அங்கிருந்த மக்கள் ஏதோ, வேண்டாத ஒன்றை பார்த்தது போல ஒதுங்கி சென்றார்கள்.
அவர் அந்த ரோபோட்டிற்கு ஜிப் என பெயர் வைத்தார். ஜிப் அங்கிருக்கும் யாருடன் பேச முயற்சித்தாலும் அவர்கள் அதை உதாசீனப்படுத்தினார்கள். அப்போது அந்த காலனியில் லில்லி என்று ஒரு சிறுமி இருந்தாள். அந்த சிறுமிக்கு ஜிப் உடன் பேச மிகவும் ஆசை. ஆனால் அவளது வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனாலும் லில்லி தெரியாமல் ஜிப்பை பார்த்து சிரிப்பது, அது கொடுக்கும் பூவை வாங்கி கொள்வது என அதனுடன் ஒரு நட்பை வளர்த்து கொண்டாள். ஜிப்பிற்கு லில்லி என்றாலே தனி பாசம். படி படியாக ஜிப் மாலை நேரங்களில் வெளியில் சிறுவர்களுடன் விளையாட ஆரம்பித்தது.

ஜிப் மற்றவர்களுடன் நெருங்க மிகவும் ஆசைப்பட்டான். அப்போதுதான் அந்த சம்பவமே நடந்தது. ஒரு பெரிய புயல் சூறாவளி போல நகரத்தை தாக்க ஆரம்பித்தது. மக்கள் பயந்து தெறித்து அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தார்கள். மக்களுக்கு காயம் ஏற்பட ஆரம்பித்தது. புயலை தடுக்க முடியாமல் மக்கள் ஒதுங்கவும் முடியாமல் திணறினார்கள்.
இதை பார்த்து கொண்டிருந்த ஜிப், அதனுடைய முழு பலத்தையும் கொண்டு புயலின் திசையை மாற்றியது. அப்போது லில்லி தனியாக புயலுக்குள் மாட்டி கொண்டாள். புயலின் திசையை மாற்றி கொண்டே, ஜிப் லில்லியை காப்பாற்ற முயன்றது.
ஜிப் தனது பலத்தால் ஒருவழியாக போராடி லில்லியை காப்பற்றியது. ஆனால் அந்த நேரத்தில் அவளது பெற்றோரை காணாமல் தவித்தாள். லில்லியை ஒரு இடத்தில பாதுகாப்பாக வைத்து விட்டு, புயல் என்றும் பாராமல் ஜிப் அவளது பெற்றோரை தேட சென்றது.
அடித்த பெரும் சூறாவளி காற்றில் லில்லியின் பெற்றோர் மாட்டி தவித்து கொண்டிருப்பதை பார்த்த ஜிப் அவர்களை துணிந்து காப்பாற்றியது, ஒருவழியாக லில்லியை அவளது பெற்றோருடன் சேர்த்தும் வைத்தது. புயல் காற்றும் அடங்கியது. இப்போது அந்த காலனிக்கு ஜிப் பெரிய சூப்பர் ஹீரோ போல தெரிந்தான். அவனை இப்போது எல்லோரும் ஏற்று கொண்டார்கள். ஒரு மெஷினாக அவனை பார்க்காமல் அவன் செய்த உதவியை பெரிதாக நினைத்தார்கள். ஜிப் இப்பொது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications