குழந்தை நீதி கதைகள்: தோல்வியின் விளிம்பில் நின்ற இளவரசன்.. வென்றானா?
சென்னை: Kids story in Tamil: ஹலோசுட்டிஸ், எப்படிஇருக்கீங்க. இன்னைக்குஎன்னகதைபடிக்கபோறிங்கனுதெரிஞ்சிக்கிறதுக்குமுன்னாடி, எப்போவாவதுதோல்வியின்உச்சத்திற்குபோய்அங்கிருந்துமீண்டும்தொடங்கிஇருக்கீங்களா, தோல்வியில்துவண்டஇளவரசன்பத்திதான்படிக்கபோறோம்வாங்ககதைக்குள்ளபோகலாம்.
ஒரு பெரிய நாடு அதில் அரசர் அவருக்கு இரண்டு மகன்கள் என படை சூழ பெரிய நகரமாய், மக்கள் வாழ்ந்தனர். இளவரசர்கள் இருவரில் பொதுவாக மூத்தவருக்கு தான் மரியாதை கிடைக்கும், ஆனால் இங்கு அப்படியே வேறு, முதல் இளவரசன் நல்லவன், மக்கள் மேல் பரிதாபம் காட்டுபவன். அது எதிரி நாடு மக்களாக இருந்தாலும் அவர்கள் மேல் கரிசனை காட்டுபவன்.

இரண்டாவது இளவரசனோ ஆக்ரோசமானவன். நாட்டை பற்றிய சிந்தனையிலே இருப்பவன். இதனால் அரசவைக்குள் பல குழப்பங்கள் இருந்தன. மூத்த இளவரசனின் செய்கைகள் வேறு நாட்டை பிடிப்பதிலோ, போரிலோ கவனம் இல்லை என்பதை அரசர் புரிந்து கொண்டார். இந்த செயல் எந்தவிதத்திலும் நாட்டை ஆள்வதற்கு சரியானதாக இருக்காது என அமைச்சர்களும் அரசரை குழப்பினர்.
கொஞ்சம் கொஞ்சமாக, இளவரசனை அரசவையில் இருந்து ஒதுக்க ஆரம்பித்தார் அரசர். அதே சமயத்தில், இரண்டாவது இளவரசன் அரசவையின் எல்லா நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றான். மக்கள் முதல் இளவரசனை ஏமாளியாக பார்க்க ஆரம்பித்தார்கள். அவனை அனைவரும் கேலி செய்வதை பார்த்த இளவரசன், அரண்மனை விட்டு வெளியேற தயங்கி ஒரு அறையில் முடங்கினான்.
நாட்கள் நகர்ந்தன. இளவரசன் இருப்பதையே மக்கள் மறந்தனர். அவனும் ஒரு கோழை போல மற்றவர்களால் நடத்தப்பட்டான். அவனுக்காக துணை நிற்க வேண்டிய அப்பாவோ, சகோதரரோ அவனை கண்டு கொள்ளவில்லை. அன்பை கொடுத்த அவனுக்கு பதிலுக்கு கிடைத்தது கோமாளி பட்டம் தான். இனி இங்கு இருக்க வேண்டாம் என முடிவு செய்தான்.
அரண்மனையை விட்டு வெளியேறி, காடெங்கும் நடந்தான். மிகவும் சோர்ந்து போய் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான். அங்கு வீசிய அழகான காற்று அவனை தூங்க வைத்தது. அது ஒரு அழகிய செர்ரி மரம். பூக்கள் பூத்து குலுங்க, அது ஒரு பாட்டு பாடியது.
'தோல்வியால் வாடிடாதே! தேவதையவள்!
நீல மரங்கள் சூழ,
செக்கசிவந்தமணற்பரப்பில்,
உனக்காககடல்நோக்கி,
காத்திருக்கிறாள்'
இந்த பாடல் மீண்டும் மீண்டும் இளவரசன் காதுகளை தீண்டியது. எங்கும் தோல்வியால் துவண்டு சோர்வடைந்தவன் இனிமேல் என்ன இருக்கிறது வாழ என எண்ணும்போது அந்த பாடல் அவனுக்கு ஏதோ சொல்வது போல தோன்றியது.
பாடலில் சொன்னது போல, அவன் அந்த நீல மரங்களை தேடி நடந்தான். ஒருவழியாக கண்டுபிடித்தான். அதன் வழியில் நடந்து செல்ல சிகப்பு நிற மணல் பரப்பை அடைந்தான். அந்த பக்கம் கடலை பார்த்து ஒரு சின்ன பெண் அழுது கொண்டிருந்தாள். அவளை பார்த்த இளவரசன், இவளா அந்த தேவதை என அதிர்ச்சி அடைந்தான். இருந்தாலும் அவள் அழுவதை தாங்க முடியாமல், அருகில் சென்று அவளை சமாதானம் செய்தான்.
ஏன் அழுகிறாய் என்று கேட்க, ஒரு பெரிய நாட்டை சேர்ந்த அரசர் எங்கள் நாட்டில் இருந்த எல்லாவற்றையும் சூறையாடி சென்று விட்டார்கள். மேலும் எங்கள் அரசரையும் கொன்றுவிட்டார்கள் என்றாள். சரி கவலைப்படாதே எல்லாம் சரி ஆகிவிடும் என்று ஆறுதல் சொன்னான்.
அந்த சிறுமி அவனை அழைத்து கொண்டு, அருகில் சூரையாடப்பட்டிருந்த அவளது நகரத்தை காண்பித்தாள். அவன் அந்த நகர மக்களை பார்த்து ஆறுதல் சொன்னான். இதில் இருந்து மீள முடியும் என நம்பிக்கை வார்த்தைகளை கூறினான். அவன் யார் என்று கூட அந்த மக்களுக்கு தெரியாது, ஆனால் அவன் சொன்ன வார்த்தைகளை மந்திரமாக எண்ணி பழைய நிலைக்கு திரும்பினர்.
மக்கள் இளவரசனை பெரிதாக பார்த்தார்கள். அவனுக்கும் அது ஒரு புது வாழ்க்கையை கொடுத்தது போல உணர்ந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இளவரசி , உன்னால் எங்கள் நாட்டை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது என்றாள். இளவரசனுக்கு அதிர்ச்சி, என்ன சொல்ல போகிறார் என ஆர்வமாய் கேட்டான். நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்க, இளவரசனோ எளிமையாக நான் சொல்லும் மரத்தின் அடியில் பண்ணலாம் என்றால் சரி என்றான். இளவரசியும் ஒப்புக்கொண்டாள்.
ஆமாம், அவனுக்கு மறுவாழ்வை கொடுத்த அந்த செர்ரி மரத்தின் அடியில் திருமணம் மக்கள் சூழ நடந்தது. அவனது வாழ்க்கையில் தேவையான ஒன்று கிடைத்ததால் அந்த மரம் குலுங்கி பூக்களை தூவி வாழ்த்தியது. இளவரசனும் மக்களுடன் தனது வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்தான்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications