ஆ.ராசாவின் கொள்கை பிடிப்பு எங்கே? செந்தில் பாலாஜி தலைமறைவு ஏன்? கரூரில் விஜய் சொன்னது 100% சரி: மணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியை கவிழ்க்க ஏதோ ஒரு முயற்சி நடந்திருக்கலாம், இல்லாவிட்டால் இத்தனை பேரை காவல்துறை கைது செய்யாது. சிங்கப்பூரில் யாரோ சிலருக்கு கோர்ட் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் உட்கார்ந்து பேசிய ஃபுட்டேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளன. தவறு செய்யவில்லை என்றால் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்? என்று மூத்த பத்திரிகையாளர் மணி தன்னுடைய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.

aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள மணி, "கரூர் விவகாரம் தொடர்பாக விஜய் ஓடு ஓடு என்று பேசியது, அவருடைய ஆதரவாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் எந்த தவறும் கிடையாது.. இவர்கள் எல்லாம் என்ன யோக்கியமா?

Raja

கரூர் என்றாலே செந்தில் பாலாஜி குறித்த பழைய நினைவுகளே வருகின்றன. கடந்த காலத்தில் செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்படிப்பட்டவரை அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்தது ஸ்டாலினின் முரண்பாடாகும்.

ஆ.ராசா இப்படி ஓடுவாரா?

லுக்அவுட் நோட்டீஸ் என்பது கொடுங்குற்றவாளிகளுக்கு எதிராகவே விடுக்கப்படும். திமுக வரலாற்றில் எந்த முன்னாள் அமைச்சருக்கும் இதுபோன்று கொடுக்கப்பட்டதில்லை. உண்மையான திமுக தொண்டன் சட்டத்திற்குப் பயந்து ஓடமாட்டான்.

ஆ.ராசா மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்.. என்றைக்காவது இப்படி ஓடியிருக்காரா? எப்போது கூப்பிட்டாலும் போய் நிப்பார்.. காரணம் ஒரிஜினல் கட்சிக்காரர். எதற்கும் பயப்பட மாட்டார்.

செந்தில் பாலாஜி ஏன் தலைமறைவாகணும்

ஆனால் செந்தில் பாலாஜி ஏன் தலைமறைவாக உள்ளார் என்பது புரியவில்லை.. செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் அட்வைஸ் வழங்கியிருக்க வேண்டும். அதனால் செந்தில் பாலாஜி ஓடி ஒளிகிறார் என்று விஜய் கரூரில் சொன்னது நூறு சதவீதம் சரியானதாகும்.

ஆட்சியை கவிழ்க்க ஏதோ ஒரு முயற்சி நடந்திருக்கலாம், இல்லையென்றால் இத்தனை பேரை காவல்துறை கைது செய்யாது. சிங்கப்பூரில் யாரோ சிலருக்கு கோர்ட் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் உட்கார்ந்து பேசிய ஃபுட்டேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளன. தவறு செய்யவில்லை என்றால் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்?

2 முன்னாள் மந்திரிகள் தலைமறைவு

ஏதோ ஒன்று நடந்திருக்கிறது, அதனால்தான் அண்ணனும் தம்பியும் ஓடுகிறார்கள். அதைப் பற்றி விஜய் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? அவர் கூறுவது நூறு சதவீதம் சரியானதே. அந்த அரசியலை அவர் பேசத்தான் செய்வார். மாறி மாறி கொள்ளையடித்தீர்கள், சிண்டிகேட் போட்டீர்கள், இல்லையென்று சொல்ல முடியுமா?

திடீரென்று ஏன் பயந்து ஓடுகிறீர்கள்? எ.வ. வேலுவுக்கு ஏன் உடல்நலப் பிரச்சனை? இன்னொருவர் ஏன் வெளிநாட்டிற்குச் சென்றார்? சிங்கப்பூருக்கு எதுக்காக செல்கிறார்? இதைப் பற்றி ஊடகங்கள் ஏன் பேசுவதில்லை? திமுகவின் இரண்டு முன்னாள் மந்திரிகள் தலைமறைவாக இருக்கிறார்கள், அதை ஊடகங்கள் ஏன் பேசுவதில்லை? ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகவே இருக்கின்றன.

சோஷியல் மீடியா மட்டும் போதும்

அதேபோல, செய்திகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் முதலமைச்சரையோ அல்லது அரசியல் தலைவர்களையோ ஒருமையில் பேசுவது பத்திரிகையாளர்களின் தர்மம் அல்ல. அந்த இருக்கைக்குரிய மரியாதையை எப்போதும் வழங்க வேண்டும்.

அரசாங்கத்தை எதிர்க்க துணிவில்லாத ஊடகங்கள், ஆட்சி மாறிய பிறகு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகின்றன. விஜய் அரசாங்கம் ஊடகங்களைக் கையாளும் விதம் தவறு என்றாலும், தங்களுக்குச் சாதகமாக இல்லாதவர்களை கையாளுவதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். சோஷியல் மீடியா தங்களுக்கு போதும் என்கிறார்கள்.

சவக்குழியை தோண்டி

களத்தில் செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்கள் வெளியேற்றப்படும்போது, ஊடக உரிமையாளர்கள் அமைதி காக்கிறார்கள். தங்கள் வணிகம் மற்றும் அரசாங்கத்துடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை."

பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் வேறு வணிகங்களையும் நடத்துவதால், அவை மாநில அரசைச் சார்ந்தே உள்ளன. அரசுக்கு எதிராகச் செயல்பட்டால் வணிகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தினால், பாய்காட் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஊடகங்களால் முடிவதில்லை. ஒட்டுமொத்தத்தில், ஊடகங்கள் செய்த தவறுகளால் தங்கள் நற்பெயரை தாங்களே சிதைத்துக்கொண்டு, ஊடக நிறுவனங்களின் சவக்குழியைத் தாங்களே தோண்டிக்கொண்டன" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+