குழந்தை நீதி கதைகள்: இந்த குருவியா அது? இதுக்கு இப்படி ஒரு கதை இருக்குதா என்ன!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ் எப்படி இருக்கீங்க? உங்க ஊரில் அல்லது தெருவில் இந்த குருவியை பார்த்து இருக்கீங்களா? அது கத்துற சத்தத்தை கூர்ந்து கேட்ருக்கீங்களா, இனிமேல் கண்டிப்பா கேட்டு பாருங்க.. இந்த கதையை படிச்சா ஏன்னு உங்களுக்கே தெரியும்.

காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு நகரமானது. அந்த நகரத்துல ஒரு குருவி மட்டும் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்துல இருக்கும். அது மட்டுமில்ல அந்த குருவி எங்க சீஸ்ஸை பார்த்தாலும் அதை திருடி தின்றுவிடும். அதனால் தான் அது மஞ்சள் நிறத்தில் இருந்தது.

Short story for kids in Tamil : The yellow hammerbird

அந்த குருவி எப்படி சீஸ்களை சாப்பிட பழகியது என யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த நகரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் சீஸ்களை நைசாக திருடிவிடும். அந்த நகரத்தில் யார் வீட்டில் சீஸ் இருந்தாலும் அது மூக்கை துளைத்துவிடும். உடனடியாக அந்த இடத்திற்கு பறந்து சென்று எடுத்து விடும். அந்த நகரத்தில் இருந்த வயதான தாத்தா வீட்டில் எலியை பிடிக்க வைத்திருந்த சீஸை கூட லாவகமாக தூக்கி செல்வதை வழக்கமாக வைத்திருந்தது.

இதனுடைய தொல்லையை தாங்க முடியாமல் நகரத்தில் யாருமே சீஸ் உபயோகபடுத்துவதில்லை. பட்டர் மஞ்சள் நிறம்தானே ஆனால் அந்த குருவிக்கு அது பிடிக்காது, சீஸ் என்றால் அப்படி ஒரு இஷ்டம். மக்கள் ப்ரெட்டில் சீஸிற்கு பதிலாக ஜாம் பட்டர் என மாறி விட்டார்கள்

Short story for kids in Tamil : The yellow hammerbird

குருவிக்கு சீஸ் இல்லாமல் வேற ஏதும் திங்க மனமில்லை. கொஞ்சமாக சாப்பிட்டு இருந்தால் யாருமே அதை தொல்லையாக நினைந்திருக்கமாட்டார்கள். ஆனால் அந்த குருவி கொஞ்சம் பேராசைபட்டதால் தான் மக்களுக்கு அதன் மேல் வெறுப்பு வந்தது. அதுவும் வீட்டில் எங்கு வைத்தாலும் திருடி திங்க ஆரம்பித்ததால் அந்த நகர மக்கள் சீஸ் இல்லாமல் வாழ ஆரம்பித்தார்கள்.

நகரத்தில் கார்னிவல் தொடங்கியது. குருவி எல்லா இடங்களிலும் தேடி அலைந்தது. எங்கு பார்த்தாலும் பிரட், ஜாம், குக்கீஸ் என குருவிக்கு எது வேண்டுமோ அது மட்டும் இல்லை. குருவி பாட்டு பாட ஆரம்பித்தது. எல்லாம் இருக்கு சீஸ் மட்டுமில்லை. பிரட் இருக்கு சீஸ் இல்ல, பிரட் இருக்கு சீஸ் இல்ல என பாட குருவியை எல்லாரும் பார்த்தார்கள். குருவி அவர்களை பார்த்து நீங்க தரலைனா என்ன இந்த உலகத்தில் மற்ற ஊர்கள் இருக்கும் இல்லையா எனக்கு அங்க கிடைக்கும் என இதை பாடி கொண்டே பறந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+