இது இந்திய பட்ஜெட்டா.. மோடியின் ஆட்சியை காக்க பீகார் & ஆந்திராவுக்கான பட்ஜெட்டா ? மீம்ஸ்களை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது இந்தியாவிற்கான பட்ஜெட்டா, மோடியின் ஆட்சியை காக்க பீகார் & ஆந்திராவுக்கான பட்ஜெட்டா ? என்று கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பான மீம்ஸ்கள் வேகமாக பரவி வருகின்றன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை.. தமிழ், தமிழர், தமிழ்நாடு என ஒருவார்த்தை கூட இடம் பெறவில்லை.. அதேநேரம் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள பீகார், ஆந்திராவிற்கு அதிகப்படியான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Budget 2024 memes union budget 2024 Nirmala Sitharaman

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல் விசாகப்பட்டினம் - சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில்முனையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பீகாரில் பிஹாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் பீகாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் பீகாரில் 2400 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் அமைக்க 21400 கோடி ஒதுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பட்ஜெட்டில் அஸ்ஸாம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு நிதி உதவி அறிவித்த மத்திய அரசு, சென்னை வெள்ளத்திற்கும், தூத்துக்குடி, திருநெல்வேலி வெள்ளத்திற்கும் ஒரு ரூபாய் கூட தரவில்லை என்று திமுக குற்றம்சாட்டி உள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் திமுகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதனிடையே பாஜகவினர் இதுபற்றி கூறும் போது, இவர்களுடைய அரசியல் லாபத்திற்காக மத்திய அரசிடம் சண்டை போட்டதால் பாதிப்பு இவர்களுக்கு அல்ல... மக்களுக்கு தான்... தேவை இல்லாமல், ஒன்றிய அரசு என்று ஒப்பாரி வைப்பது , பின்பு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று அழுவது. பீகார், ஆந்திரா போன்று இணக்கமாக இருந்து நிதி பெற்று வர வக்கு இல்லை என்று விமர்சித்துள்ளார்கள்.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை. குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்று கூறியுள்ளார். இன்றைய பட்ஜெட் குறித்து வெளியான மீம்ஸ்கள் சிலவற்றை பார்ப்போம்.

Budget 2024 memes union budget 2024 Nirmala Sitharaman
Budget 2024 memes union budget 2024 Nirmala Sitharaman
Budget 2024 memes union budget 2024 Nirmala Sitharaman
Budget 2024 memes union budget 2024 Nirmala Sitharaman
Budget 2024 memes union budget 2024 Nirmala Sitharaman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+