“பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாது”... கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றி வருகிறது மத்திய அரசு. நேற்று ரேஷன் பொருட்கள் யார் யாருக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாகவே கேஸ் மானியம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் மக்களுக்குத் தலைவலியாய் இருக்கும் என்று மத்திய அரசுக்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கிண்டல் அடித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். அதில் சில உங்களுக்காக..

கடைசி தலைமுறை

"ரேஷன் பொருட்கள் வாங்கிய கடைசி தலைமுறையும் நாம தான் போல" என வருத்தமாய் ஆலடிபட்டி மகேஸ்வரன் பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக் கணக்கு வைத்திருந்தால் ரேஷன் கிடையாது

"பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாது. -மோடி அதிரடி இப்படியும் நடக்கலாம்!" என இடும்பாவனம் கார்த்தி கிண்டல்

ரேஷனும் போச்சு.. சிலிண்டரும் போச்சு

"ரேஷன் பொருட்கள் போச்சு.. ரேஷன் கார்டு போச்சு.. சிலிண்டர் மானியம் போச்சு.. பட் பிக்பாஸ்ம் ஓவியா ஆர்மியும் செம ஃபாம்ல போகுது.. தமிழன்டா.." என புன்னகை மன்னன் பிக்பாஸோடு சேர்ந்து கலாய்த்துள்ளார்.

பங்களாவுல இருந்தா முதல்வர் பதவி கிடையாது

"செய்தி : மூன்று அறைகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் ரத்து.. அப்படியே பங்களாவுல இருந்தா முதலைச்சர் பதவி கிடையாதுனு...." கயவன் தனது ஆசையை பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens comment on social media about cancellation of LPG subsidy.
Please Wait while comments are loading...