பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முதலமைச்சர் விஜய் மிகப்பெரிய நிதி நிவாரணம் அளித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளுக்கு கடன் தொகையில் பெரும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தாலும், இதில் ஒரு முக்கிய செக் உள்ளது.
இந்த கடன் தள்ளுபடி திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கிடையாது, ஆனால் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் பலன் கொடுத்தது ஸ்மார்ட் மூவ், அதேபோல் கடன் தள்ளுபடி மூலம் அரசின் செலவுகளை குறைக்க எடுத்த ஸ்ட்ராடஜி-யும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கால அளவில் செக்
இந்த மெகா பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தில் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை, அதாவது 10 மாத காலத்தில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த குறிப்பிட்ட காலத்தில் கடன் வாங்காதவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது என்பது மிக முக்கியமான விஷயம்.
பெரும்பாலான பயிர்க்கடன்கள் 15 முதல் 18 மாத கால வரையறைக்குள் வழங்கப்படும் என்பதால், இந்த 10 மாத காலத்தில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் இந்த தள்ளுபடி பொருந்தும். இது ஒரு கட்டுப்பாடாக இருந்தாலும், இந்த காலத்தில் கடன் வாங்கிய குறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.
முந்தைய கடன் தள்ளுபடிகள்
தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் பல முறை பெரிய அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சூறாவளி நிவர் மற்றும் புரெவி காரணமாக பாதிக்கப்பட்ட 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்தது.
2016-ஆம் ஆண்டில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் அரசாணை எண் 50-ஐ வெளியிட்டது. இதன் மூலம் 5780 கோடி ரூபாய் செலவில் சுமார் 16.9 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்தனர்.
2006-ஆம் ஆண்டில் திமுக அரசு, அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.7,000 கோடியாக இருந்தது.
இந்த முந்தைய தள்ளுபடிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டவை. ஆனால் தற்போதைய 2026 அறிவிப்பு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து, குறிப்பிட்ட காலத்தில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் குறிவைத்து வழங்கப்படும் உள்ளது.
அனைத்து தரப்பு விவசாயிகளை சேர்த்த ஸ்ட்ராடஜி
குறு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி: ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழு 100% தள்ளுபடி செய்யப்படும். அதாவது, அவர்கள் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி ஆகிவிடும். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். ஏனெனில், பல குறு விவசாயிகள் சிறிய அளவிலான நிலத்தில் விவசாயம் செய்து, கடன் சுமையில் தவிக்கின்றனர். இந்தத் தள்ளுபடி அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்.
சிறு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி: சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை கடன் இருந்தால் 50% தள்ளுபடி வழங்கப்படும். அதாவது, அவர்கள் வாங்கிய கடனில் பாதி தொகை மட்டும் தள்ளுபடி ஆகும். இதுவும் அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் அளிக்கும்.
பெரு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி: இதர பெரு விவசாயிகள் அனைவருக்கும் தலா ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும். இது அவர்களுக்கு சிறிய அளவிலான உதவியாக இருந்தாலும், இந்தத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சிறிய அளவு பயனடையும் வகையில் தள்ளுபடி திட்டத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது விஜய் தலைமையிலான அரசின் ஸ்மார்ட்மூவ்.
குறுவிவசாயிகளுக்கு ஜாக்பாட்
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். பெரு விவசாயிகள் முதல் அனைத்து தரப்பு, அனைத்து கடன் அளவு கொண்ட விவசாயிகளை சேர்த்து மூலம் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
இதற்காக அரசு ரூ.2,044.46 கோடி செலவிட உள்ளது. இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணமாகும். குறிப்பாக குறு விவசாயிகள், தங்கள் கடன் சுமையில் இருந்து முழுமையாக விடுபட்டு, அடுத்த பயிர் சாகுபடிக்கு தயாராக முடியும்.
இந்த அறிவிப்பு, முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும். இருப்பினும், இந்தத் திட்டம் 10 மாத கட்டுப்பாடு வைக்கப்பட்ட காரணத்தால் அனைவருக்கும் கடன் தள்ளுபடி அளிக்கப்படவில்லை.
சிலர் இதை ஒரு கட்டுப்பாடாக பார்க்கலாம். ஆனால், இது இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, அரசின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடைமுறை முடிவு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்?












Click it and Unblock the Notifications