பெய்யுற மழைய பார்த்தா.. இந்த பெங்கல் புயல் நமக்கு பொங்கல் வைக்காம போகாது போலயே!
சென்னை : பெங்கல் புயலையும் தங்கள் ஸ்டைலில் பொங்கல், பெண்கள் என மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற உள்ளது.
இந்த புயலுக்கு பெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலில் இந்தப் புயல் எங்கு கரையைக் கடக்கும் என கணிக்க முடியவில்லை என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது எங்கு, எப்படிக் கரையைக் கடக்கும் என அறிவித்துள்ளனர். இந்தப் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் மழைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பெங்கல் புயல், கடந்த மாதம் வந்த புயல் மாதிரி சத்தமில்லாமல் தமிழகத்தைக் கடந்து விடுமா அல்லது நமக்கு பொங்கல் வைத்து விட்டுச் செல்லுமா என மக்கள் செய்தி ஊடகங்களின் அப்டேட்டுகளைக் கவனித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் இந்தப் புயலையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பெரும்பாலும் புயல்களுக்கு வெவ்வேறு நாட்டினரே பெயர் வைப்பதால், அவை வாயில் நுழைய முடியாதவைகளாகத்தான் உள்ளன. அப்படித்தான் இந்த பெங்களும். எனவே இதனையும் பெண்கள், பொங்கல் என மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில பெங்கல் புயல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications