என்னடி பவுலிங் இது? "க்ளவுன்" ராகுல்.. இந்திய அணியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்! டிரெண்டிங் மீம்ஸ்
சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து உள்ளது.
இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடியது. கடைசியில் பாண்டியாவின் 63 ரன்கள் அதிரடியால் இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அதிரடியாக ஆடி வெறும் 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வென்றது. இந்தியாவின் இந்த தோல்வியை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

நாக் அவுட்
இந்திய அணி தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது. 2019 உலகக் கோப்பை 50 ஓவர் போட்டியிலும் இப்படித்தான் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த முறையும் மோசமாக ஆடி தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணிக்கு சாபம் போல இப்படி நாக் அவுட் போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வி அடைகிறது.

பவுலிங்
இந்திய அணியின் பவுலிங் இன்று மிக மோசமாக இருந்தது. இங்கிலாந்து அணி ஸ்லோ பந்துகளை போட்டு இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் இந்திய அணியின் பலம் ஸ்விங்தான். அதை பின்பற்றாமல் இந்திய அணியும் ஸ்லோ பால் போட முயன்றது. ஆனால் இங்கிலாந்து அணியிடம் இந்த பவுலிங் எடுபடவில்லை.

பவர் பிளே
இந்திய அணி பவர் பிளேவில் மிக மோசமாக திணறியது. இந்தியா பவர்பிளேவில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இங்கிலாந்து 66 ரன்கள் எடுத்து அசத்தியது. பவர் பிளேவில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ரன்களை வாரி வழங்கியது. இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

பைனல்
இந்தியா மீண்டும் ஒருமுறை பைனல் செல்லும் வாய்ப்பை இழந்து உள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்தியா மிக சிறப்பாக ஆடி வந்தது. ஆனால் செமி பைனலில் சொதப்பி தோல்வி அடைந்தது. இந்த முறையும் குழு போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. கடைசியில் செமி பைனலில் இப்போது சொதப்பி உள்ளது.

பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தான் இடையில் பைனல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பைனலில் மோதும். இதை வைத்து நெட்டிசன்கள் பலர் இந்திய அணியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

கேப்டன்
இன்று ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும் மோசமாக இருந்தது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றதும் சரியாக பவுலர்களை ரொட்டேட் செய்து இருக்க வேண்டும். அதேபோல் அவரின் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாக இருந்தது. இதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

கே எல் ராகுல்
வங்கதேசம் போன்ற சிறிய அணிகளுடன் சிறப்பாக ஆடிய கே. எல் ராகுல் இன்று வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடர் முழுக்கவே பெரிய அணிகளுடன் அவர் மோசமாக சொதப்பினார். ஓப்பனர் என்று கூறி அவர் எல்லோரையும் ஏமாற்றி வருகிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications