"ஜேசிபி உடன் மோது.. ஆர்சிபி உடன் மோதாதே" அலப்பறையை கூட்டிய ஆர்சிபி ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் உருவாக்கிய மெர்சலான மீம்ஸை பார்க்கலாம்.
பரிதாபங்கள் வீடியோவில் ஆசிரியராக இருக்கும் சுதாகர், கோபியிடம் "எழுது.. எழுது" என்று டென்ஷனாக சொல்லுவார். அதில் வரும் சுதாகராக ஆர்சிபி ரசிகர்களையும், கோபியாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "எழுது.. ஜேசிபி உடன் மோது.. ஆர்சிபி உடன் மோதாதேனு எழுது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் புள்ளப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவாடா கண்டேன் மொமண்ட்.

இந்தியன் 2 படத்தை ஸ்பூஃப் செய்து பரிதாபங்கள் வெளியிட்ட வீடியோவில், "தம்பி.. தாமரை பூவுல வர மாதிரி குட் மார்னிங் எடிட் செய்து கொடுப்பா" என்று கோபி சுதாகரிடம் கேட்பார். இதனை அப்படியே மாற்றி கோபியாக தோனியையும், சுதாகராக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "தல முன்னாடியே இறங்கிருந்தா ஜெயிச்சிருக்கலாம்னு தம்ப்லைன்ல போட்டு வீடியோ போடுங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எல்லாம் ஓரளவுக்கு தான் தங்கதுரை மொமண்ட்.

மருதமலை படத்தில் வடிவேலு, என்னை பற்றி புதுசா வர இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்றதுக்கு எழுதி கொடுத்தேனே.. அத சொல்லுங்க பார்ப்போம் என்பார். அதற்கு அருகில் நிற்பவர், முதலில் அவன் சொல்லட்டும் என்று திருப்பிவிடுவார். அதற்கு வடிவேலு, "
"அப்போ நீ படிக்கல" என்று உண்மையை அறிவார். இதில் வரும் போலீஸாக மம்பட்டி தோனியை மாற்றி, "முதலில் ரூ.10 கோடி கொடுத்து வாங்கின சொந்த ஊர் வீரர் அஸ்வின் அண்ணா ஆடுறதை பார்க்கட்டும்" என்று கோர்த்துவிடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகர்களின் மனசாட்சி.

டீ விற்க செல்லும் வடிவேலு சீட்டு விளையாடுபவர்களிடம் சைக்கிள், டீ எல்லாவற்றையும் பந்தயம் கட்டுவார். அப்போது முதல் ஆட்டத்தில் சிங்கமுத்து தோற்க, உடனவே வடிவேலு, யோவ்.. என்னயா இது என்பார். அதற்கு சிங்கமுத்து, "அது ஒன்னும் இல்லப்பா.. அண்ணே ஒரு தடவ தோத்து பாத்தேன்" என்பார். இதில் வரும் வடிவேலுவாக சிஎஸ்கே ரசிகர்களையும், சிங்கமுத்துவாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "அது ஒன்னும் இல்லப்பா.. அண்ணே ஒரு தடவை தோத்து பார்த்தேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலியை முடிச்ச ரகம்.

வடசென்னை படத்தில் செந்திலை பார்த்து குணாவான சமுத்திரகனி, "நீதான் பெயில் போடுறேனு சொல்லிருக்க.. நீதான் பெயில்ல எடுக்கணும்" என்று மிரட்டுவார். இதில் வரும் சமுத்திரகனியாக சிஎஸ்கே ரசிகர்களை மாற்றி தீபக் ஹூடாவை பார்த்து, "ஈஸி கேட்ச் விட்டது நீ.. நீதான் அடிச்சி கொடுக்கணும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகர்களின் டென்ஷன் மொமண்ட்.













Click it and Unblock the Notifications