எல்லா இலையையும் விட "இரட்டை இலை விலைதான் அதிகம்" கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளியான செய்தியை வைத்து மரண கலாயில் இறங்கியுள்ளன சமூகவலைதளங்கள்.

டெல்லி தெற்கு பகுதியில் நடந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சுமார் ரூ. 1 கோடியே 30 லட்சம் அளவிற்கு வைத்திருந்த சுகேஷ் சந்தரை சுற்றி வளைத்தது போலீஸ். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் 60 கோடி ரூபாய் பேரம் பேசி, அதற்கு முன்பணமாக இந்த புதிய ரூபாய் நோட்டு கட்டுகளை அளித்ததாக கூறினார்.

 Do you Know the cost of two leaves is much higher than other leaves: Social media creating memes regarding this

இதன் அடிப்படையில் டிடிவி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. டிடிவி தன்னுடைய ஆள்பணம், பண பலத்தை வைத்து தேர்தல் ஆணையத்தை வளைப்பது அம்பலமாகியுள்ளதாகவும், யாரோ சம்பாதித்த பணம் தானே என கருப்பு பணத்தை அவிழ்த்து விடுகிறார் தினகரன் என்றும் முகநூல் பக்கத்தில் வசைபாடுகள் வந்த விழுகின்றன.

இரட்டை இலை என்ன விலை?

இது ஒருபுறம் என்றால் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இரட்டை இலையின் விலையை பட்டியலிட்டுள்ளனர்.

இன்றைய இலை விலைப்பட்டியல் என்று வாழைஇலை, வெற்றிலை, கருவேப்பிலையோடு, இரட்டை இலையை ஒப்பிட்டு புகைப்படத்தை நெட்டில் தட்டி விட்டுள்ளனர்.

வாழை இலை 4 ரூபாய், வெற்றிலை 1 ரூபாய், கறிவேப்பிலை 5 ரூபாய்

ஆனால் இரட்டை இலை மட்டும் 60 கோடி ரூபாய் என விலைப்பட்டியலை தயாரித்துள்ளனர் நெட்டிசன்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Comparing to banana leaf, betle and curry leaf, two leaves symbol is costlier: netizens creating humourous list
Please Wait while comments are loading...