போனவருசம் அட்சய திரிதியைக்கு நகை வாங்கி கோடீஸ்வரர் ஆனவங்க.. ப்ளீஸ் மேடைக்கு வரவும்!
சென்னை : அட்சய திரிதியைக்கு நகை வாங்கினால், தங்கம் பன்மடங்கு பெருகும் என இன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் தங்கள் ஸ்டைலில் அதனைக் கலாய்த்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், அட்சய திரிதியைக்கு நகைதான் வாங்க வேண்டும் என்ற மக்களின் மனோபாவமும் மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் தங்களது பொருளாதார சக்திக்கு ஏற்ப ஒருபுறம் நகை வாங்கிக் கொண்டிருக்க, நகை வாங்கும் அளவிற்கெல்லாம் பணம் இல்லை என்பவர்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
சமீபகாலமாக அட்சய திரிதியைக்கு இதுபோன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை விளம்பரமும் அதிகமாக ஊடகங்களில் பகிரப்படுகிறது. தங்கம் வாங்கினால் மேலும் மேலும் தங்கம் சேரும் என்ற நம்பிக்கையைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.. ஆனால் வீட்டிற்கு பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி போன்ற பொருட்களை அட்சய திரிதியைக்கு வாங்கினால், அது மேலும் மேலும் வாங்கும் நிலை வருமா, எந்த லாஜிக்கில் அதை இப்படி விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.
எது எப்படியோ வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் இந்த அட்சய திரிதியையும் விட்டு வைக்கவில்லை. தங்கள் ஸ்டைலில், "நகை நட்டா.. நமக்கு இருக்க செலவுக்கு நகையெல்லாம் வாங்க முடியாது.. வேணும்னா நட்டு வாங்கித் தர்றேன்!" என்றும், "போனவருசம், அதுக்கு முந்தின வருசம், அதுக்கும் முந்தின வருசம்.. அட்சய திரிதியைக்கு நகை வாங்கி கோடீஸ்வரர் ஆனவங்க.. ப்ளீஸ் மேடைக்கு வரவும்!" என்றும் மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications