சத்திய சோதனை... இந்த ஆப் எல்லாம் தடை பண்ணினா.. எங்க நிஜ முகம் உலகுக்கு தெரிஞ்சிடுமே!

புகைப்படங்கள் எடிட் செய்யும் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்களை வைத்து தங்கள் புகைப்படங்களை எல்லாம் மெருகேற்றி, உலகை ஏமாற்றி வந்தவர்களுக்கு, மத்திய அரசு விதித்துள்ள தடை நிஜமாகவே ஆப்பு வைத்து விட்டதாக ஜாலியாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Funny memes collection on App ban

பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட செல்போனில், இப்போது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு வசதிகள் வந்துவிட்டன. அவற்றில் முக்கியமானதுதான் புகைப்படங்களை மெருகேற்றும் சில ஆப்கள். ஏற்கனவே எடுத்த புகைப்படங்களை எடிட் செய்வதற்கு சில ஆப்கள் உதவுகிறதென்றால், சில அவற்றிற்கும் ஒரு படி மேலே போய், புகைப்படம் எடுக்கும் போதே நமக்குத் தேவையான மாதிரி அவற்றை மாற்றித் தந்து விடுகின்றன. இதனால் தங்கள் புகைப்படங்களைப் பிடித்த மாதிரி எடிட் செய்து சமூகவலைதளங்களில் பயன்படுத்தி வந்தனர் பெரும்பான்மையான மக்கள்.

Funny memes collection on App ban

இந்த சூழ்நிலையில்தான், 54 சீன ஆப்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதில் மேற்கூரிய போட்டோ ஆப்களும் அடக்கம். அரசின் இந்த அறிவிப்பைக் கேட்டு, அந்த ஆப் பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு நாள் பிடித்தமாதிரி புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டோமே, இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

Funny memes collection on App ban

இப்படி ஒரு அல்வா மாதிரி கண்டெண்ட் கிடைத்தால் விடுவார்களா நமது மீமர்கள். விதவிதமாக இது பற்றி மீம்ஸ் போட்டு, ஏற்கனவே சோகத்தில் இருக்கும் அந்த ஆப் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றி வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+