ஆகஸ்ட் 2 வந்துட்டா போதும்.. சுயம்புலிங்கத்தைக் கையிலேயே பிடிக்க முடியாது!
சென்னை: ஆகஸ்ட் 2ம் தேதி என்றதும் வழக்கம் போல், மறக்காமல் பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கம் தென்காசிக்கு சென்ற நாள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

காதலர் தினம், நண்பர்கள் தினம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என முக்கியமான நாட்களைத் தான் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள் என்றால், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 2ம் தேதியையும் நம் நெட்டிசன்கள் மறக்க மாட்டேன் என்கிறார்கள். அவரவர்கள் வீட்டில் கல்யாண நாளையும், மனைவியின் பிறந்தநாளையும் மறந்து திட்டு வாங்கிக் கொண்டிருக்க, நெட்டிசன்களோ மறக்காமல் ஆகஸ்ட் 2ம் தேதி, சுயம்புலிங்கம் தென்காசி போனதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

கமலின் நடிப்புக்கு இந்த மீம்ஸ்களே மிகப்பெரிய சாட்சி. அப்படத்தில் தன் குடும்பம் செய்த கொலையை மறைக்க, அனைவர் மனதிலும் கொலை நடந்த தினமான ஆகஸ்ட் 2ம் தேதி, தானும் தனது குடும்பத்தினரும் தென்காசி சென்றதாக பதிய வைக்க சாதுர்யமாக சில வேலைகளைச் செய்வார் கமல், அதாவது சுயம்புலிங்கம்.

படத்தில் வரும் கதாபாத்திரங்களும் அவர் எதிர்பார்த்ததைப் போலவே, ஆகஸ்ட் 2ம் தேதி அவர் தென்காசியில்தான் இருந்தார் என சத்தியம் செய்தாத குறையாக ஒப்புவிப்பார்கள். சரி, படத்தில் வரும் கதாபாத்திரங்கள்தான் அப்படி என்றால், படத்தைப் பார்த்த நம்மவர்கள் மனதில் அது பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது போல.

அதனால்தான், எதை மறந்தாலும் மறக்காவிட்டாலும், மறக்காமல் ஆகஸ்ட் 2ம் தேதி சுயம்புலிங்கம் குடும்பத்தோடு தென்காசிக்குச் சென்றதை மீம்ஸ் போட்டு அனைவருக்கும் கூறி வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சுயம்புலிங்கம் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications