நமக்கே இப்டி குளிருதே.. அப்போ நைட்டு புல்லா பனில இருக்க நிலாவுக்கு எப்டிக் குளிரும்!
இரவில் வாட்டி எடுக்கும் குளிருக்கு இதமாக கதகதப்பான, இல்லையில்லை கலகலப்பான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பகலில் வெயில், இரவில் பனி என இரண்டும்கெட்டான் வானிலைதான் இப்போது தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. இதில் வெயிலை வைத்து செய்வதற்கு ஏப்ரல், மே மாதங்கள் இருக்கிறது என்பதால், இப்போது பனியோடு மீம்ஸ் போட்டு விளையாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற மாதங்களில் இருந்து நாள் கணக்கில் மட்டுமல்ல.. காலநிலையிலும் வேறுபட்டதுதான் இந்த பிப்ரவரி மாதம். 'நைட்ல குளிர் தாங்க முடியல.. பகல்ல வெயில் தாங்க முடியல.. இந்த பிப்ரவரி மாதம் ரெண்டுங்கெட்டான் மாதமா இருக்கே..' என மக்கள் வாய்விட்டே புலம்பி வருகின்றனர். அந்தளவிற்கு பகலில் வெயில் சுட்டெரிக்கிறது, இரவில் குளிர் நடுநடுங்க வைக்கிறது.
மழை, வெயில், பனி என எந்தவொரு காலநிலையையும் நம் மீமர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் இல்லையா.. அதன்படி, எப்படியும் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் நம்மை வைத்து செய்யும், அப்போது நாம் அதனை மீம்ஸ் போட்டு பழி வாங்கிக் கொள்ளலாம் என்பதால், இப்போது குளுகுளு பனியை வைத்து மீம்ஸ் போட்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பனி பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications