
ரெட் அலர்ட்னு சொல்லவும், நீ ஏதோ பெரிய மழைனு நினைச்சு பயந்துட்டேன்.. ஒரே வெயில்ல காணாம போய்ட்டியே!
சென்னை: ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டும் பல இடங்களில் இன்று வெயில் பல்லைக் காட்டியதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
நவம்பர் பிறந்து விட்டாலே தமிழகத்தில் மழை பற்றிய பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கும். வானிலை ஆய்வு மையத்தில் சமயத்தில் மழை வரும் என்பார்கள், ஆனால் வராது. வராது எனச் சொல்வார்கள், ஆனால் திடீரென மழை கொட்டித் தீர்க்கும். சில சமயங்கள் அவர்கள் சொன்னபடியே மழை பெய்யும்.
அந்தவகையில் இன்று தமிழகத்தின் பல இடங்களில் கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உட்பட பல இடங்களில் சர்ப்பிரைஸ் விசிட் கொடுத்தது சூரியன். இன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த மகிழ்ச்சியும் மாணவர்கள் மத்தியில் அதிகம் இல்லை.
எனவே, இந்த ரெட் அலர்ட்டையும், சூரியனின் விசிட்டையும் சேர்த்து வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தில் குளிர் காய்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






