பிரதமர் மோடி சொல்லும் Work from Home.. "யாருக்கு கிடைக்கும்.. யாருக்கு கிடைக்காது?" முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பொதுமக்கள் அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் மோடி, நிறுவனங்கள் கொரோனா காலம் போல ஒர்க் ஃபர்ம் ஹோமிற்கு மாற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி ஒர்க் ஃபர்ம் ஹோமிற்கு மாறினால் முதலில் எந்த வேலைகள் ஒர்க் ஃபர்ம் ஹோமிற்கு மாறும்.. அது மாறாது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

வளைகுடா போர் இன்னும் முடியவில்லை. அமெரிக்கா ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் சூழலில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

PM Narendra Modi Urges Work From Home

ஒர்க் பர்ம் ஹோம்

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும் பிரதமர் மோடி விடுத்துள்ள முக்கியமான அழைப்பை விடுத்துள்ளார். அதாவது கொரோனா காலகட்டம் போல ஒர்க் பர்ம் ஹோம் செய்ய வேண்டும் என்றும் அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது இந்திய கார்ப்பரேட் உலகில் மீண்டும் ஒரு பழைய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கொரோனா காலத்தில் தவிர்க்க முடியாத தேவையாக இருந்த இந்த முறை, தற்போது எரிபொருள் சிக்கனத்திற்காகவும், தேவையற்ற பயணங்களைக் குறைப்பதற்காகவும் மீண்டும் ஒரு பொருளாதார ஆயுதமாக முன்வைக்கப்படுகிறது. பெங்களூர், ஐதராபாத், சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் அலுவலகம் செல்வதற்காகச் செலவிடும் பெட்ரோல் மற்றும் டீசலைச் சேமிக்க இது ஒரு சிறந்த வழியாக அரசு தரப்பு கருதுகிறது.

முதலில் ஐடி

இந்தத் திடீர் மாற்றத்திற்கு எந்தெந்தத் துறைகள் தயாராக உள்ளன என்பதைப் பார்த்தால்.. ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை முதலிடத்தில் இருக்கிறது. ஏற்கனவே சாப்ட்வேர் நிறுவனங்கள் ஹைபிரிட் முறையைப் பின்பற்றி வருவதாலும், டிஜிட்டல் கட்டமைப்புகள் வலுவாக இருப்பதாலும், இத்துறை மிக விரைவாக முழுமையான வொர்க் ஃபிரம் ஹோம் முறைக்கு மாற முடியும்.

யாருக்கு கிடைக்கும்

அதேபோல், ஊடகத் துறை, டிஜிட்டல் ஜர்னலிசம் மற்றும் கன்டென்ட் ரைட்டிங் போன்ற துறைகளும் பெரும்பாலும் கிளவுட் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இயங்குவதால், செய்திகளைத் தொகுப்பதில் இருந்து வீடியோ எடிட்டிங் வரை அனைத்தையும் வீட்டிலிருந்தே செய்ய முடியும். இது தவிர, வங்கி மற்றும் நிதிச் சேவைகளின் பேக் எண்ட் பணிகள், எட்டெக் மற்றும் கன்சல்டிங் நிறுவனங்களும் இந்த மாற்றத்திற்குத் தங்களை எளிதில் தகவமைத்துக் கொள்ளும் நிலையில் உள்ளன.

யாருக்கு கிடைக்காது

இருப்பினும், அனைத்துத் துறைகளிலும் இந்த முறையை அமல்படுத்துவது சாத்தியமில்லை. குறிப்பாக உற்பத்தி கட்டுமானம், போக்குவரத்து, விமானத் துறை மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் பணியாளர்கள் களத்தில் இருந்தே ஆக வேண்டும். ஆனால், அரசு அலுவலகங்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் சில பிரிவுகளில் பகுதி நேரமாகவோ அல்லது நிர்வாகப் பணிகளுக்காகவோ வொர்க் ஃபிரம் ஹோம் முறையைச் செயல்படுத்த முடியும்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறத் தயார் நிலையில் இருந்தாலும், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் இணைய வசதி போன்ற காரணங்களால் இது இன்னும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

சிக்கல் குறைவு

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கொரோனா வந்தபோது ஒர்க் பஃர்ம் ஹோம் நமக்குப் புதிது! அதுபோல புதிய தொழில்நுட்பங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான நிறுவனங்களிடம் ஏற்கனவே இதற்குத் தயாராக உள்ளன. கச்சா எண்ணெய் விலை மற்றும் வளைகுடா நாடுகளின் போர் பதற்றம் குறையாத வரை, எரிபொருளைச் சேமிக்க ஒர்க் ஃப்ர்ம் ஹோம், ஹைரிபிட் ஒர்க் என்பதே இந்திய கார்ப்பரேட் உலகின் நியூ நார்மலாக மாறும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+