செந்தில் பாலாஜி - எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு.. எதிரும் புதிருமாக இருந்தவர்கள் 30 நிமிடம் பேச்சு
சென்னை: எதிரும் புதிருமாக இருந்து வந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இன்று சட்டசபை வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் தவெக முதலிடத்திற்கும், திமுக இரண்டாம் இடத்திற்கும் சென்றது. அதிமுக மூன்றாம் இடத்திற்குச் சென்றது. நாம் தமிழர் கட்சி 4வது இடத்திற்குச் சென்றது. அக்கட்சி எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

அதிமுகவின் பொதுச்செயலாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபின் அந்த கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதுவும் இந்த முறை எதிர்க்கட்சியாக கூட அதிமுக அமர முடியாத நிலை. இதனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் தனியாக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக அவர்கள் அதிமுக எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி வேலுமணியை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் சட்டமன்றத்தில் பழனிசாமியின் பதவியை பறித்துவிட்டு அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முக்கிய பதவிக்கு அவர்கள் வருவதற்கும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அதிமுகவினர் டீம் டீமாக பிரிந்து வந்து தங்களுக்கிடையேயான பிளவை வெளிப்படையாக காட்டினர். அதிமுகவில் பிளவு என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர்களின் எம்.எல்.ஏக்கள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து அவைக்கு வந்திருந்தனர்.
அதிமுக பிளவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்தபோது சிலர் மட்டுமே மேஜையை தட்டிய நிலையில், எஸ்.பி வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது பலர் மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் முடிந்தபிறகு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி - செந்தில் பாலாஜி சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளனர். அதிமுகவில் தலைமையை மாற்றுவதற்கு கலகக் குரல் எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் மாற்றம், சட்டமன்ற அதிமுக கட்சி தலைவர் பதவி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் பரபரக்கின்றன.
அதிமுகவில் பூகம்பம் வெடித்து வரும் நிலையில், சட்டசபை வளாகத்தில் எதிரும் புதிருமாக இருந்து வந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications