இருக்க பிரச்சினைல இது வேறயா.. அடுத்த வாரம் ஸ்கூல் ஓப்பன் பண்றாங்களாம் ப்ரோ!
சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இன்று திறந்திருக்க வேண்டிய பள்ளிகள் அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றே மீண்டும் பள்ளிகள் திறக்கும் அன்று மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இந்தாண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போயுள்ளது. முன்னதாக 6ம் தேதியான இன்றுதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமானதால் பள்ளிகள் திறப்பு வரும் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட்டு விட்டது.
இதனால், இந்த ஆண்டு ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலமாக அமைந்து விட்டது. ஆனாலும் இந்த விடுமுறை பத்தாமல், அதற்குள் பள்ளிகள் திறக்கப்படப் போகிறதா என ஒரு குரூப் பீல் செய்து கொண்டிருக்க, மற்றொரு குரூப்போ, 'முன்பு அறிவித்தபடி இன்றே பள்ளிகளைத் திறந்திருக்கலாம்' என வேற லெவலில் பீல் செய்து வருவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஸ்கூல் ரீஓப்பனிங் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications