இப்படி அவசரப்பட்டு கொண்டாடிட்டீங்களே பாஜக பாய்ஸ்.. வைத்து செய்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பாஜகவினரை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். கடைசியில் பாஜகவிற்கு வெற்றி கிடைக்காமல் போனதை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 76 ; ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

கோவா மணிப்பூர்

கோவா, மணிப்பூரில் பெரும்பான்மை பெறாமலே ஆட்சி அமைத்த பாஜக கட்சியை இவர் கலாய்த்துள்ளார்.

மங்காத்தாடா!

கடைசில மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸும் கூட்டு, மாட்டிக்கொண்டது பாஜகதான் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொம்ப அவசரம் பாய்ஸ்

பாஜகவின் வெற்றியை அவசரப்பட்டு வேகமாக கொண்டாடியா பாஜகவினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

போச்சே

நேற்று வைரலான அஸ்வினின் இந்த ரியாக்சனை வைத்து பாஜக கட்சியினரை இவர் கிண்டல் செய்துள்ளார்.

மாறிட்டு

கடைசில எல்லாம் இப்படி மாறிட்டே என்று இவர் மீம் போட்டுள்ளார்.

பாஜகவின் நுழைவு வாயில்

இவர் எங்கடா இங்க இருந்த நுழைவு வாயிலை காணும் என்றுள்ளார்.

அவசர அவசரமா கொண்டாட்டம்

கொண்டாட்டத்தை நிறுத்திய பாஜகவினரை இவர் கிண்டல் செய்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Funny memes on last minute twist in Karnataka election result.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற