வச்சி செய்றாங்களே.. இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டியை விளக்க இந்த ஒரு படம் போதும்!
Recommended Video

நாக்பூர்: இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியில் இப்போது என்ன நடந்து கொண்டுள்ளது என்பதை விளக்க இந்த ஒரு மீம் போதும்.
இந்தியாவில் 3 டெஸ்ட் போட்டிகள் விளையாட வந்துள்ளது இலங்கை அணி. கொல்கத்தா டெஸ்ட் போட்டி, மழை குறுக்கீடு காரணமாக டிரா ஆனது. ஆனால் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியாவின் கைதான் ஓங்கியிருந்தது.

பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இலங்கையின் வாயை அடைத்து, கழுத்தை நெரித்து கிட்டத்தட்ட சித்ரவதை செய்தது இந்திய அணி.
வெகு நாட்கள் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரோகித் ஷர்மா சதம் விளாசினார். கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். முரளி விஜய், புஜாரா தங்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு சதம் விளாசினார். விழிபிதுங்கியது இலங்கை.
HAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAAHAHAHAHAHAHAHAHA! THIS IS EASILY THE BEST MEME I HAVE SEEN IN AGES! Total Savage! Hats off to the creator! Mind blowing reference!!!!! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/hUZtwMnPIl
— Srini Mama 💲 (@SriniMama16) November 26, 2017
ரோகித் ஷர்மாவை மெர்சல் திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யாவின் அசிஸ்டெண்ட் மருத்துவர் கதாப்பாத்திரத்தில் வருபவருடன் ஒப்பிட்டு ஒரு மீம் உலவுகிறது. நித்யா மேனன் கதாப்பாத்திரத்திற்கு ஆப்பரேஷன் மூலம் குழந்தையை டெலிவரி பார்ப்பார் அந்த அசிஸ்டென்ட் மருத்துவர்.
ஆனால் அவர் முன்பு அப்படி ஒரு அறுவை சிகிச்சை செய்து பழக்கம் இல்லாதவர். இப்போது மீமை பாருங்கள், வயிறு வலிக்க சிரிப்பீர்கள்.












Click it and Unblock the Notifications