"ரூ.25 கோடி கொடுக்க வேண்டாம்.. நீ ஊருக்கு கிளம்பு" கேகேஆர் அணியை குஜிலி மஸ்த் செய்த சிஎஸ்கே மீம்ஸ்!
சென்னை: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே அணி, ஐபிஎல் தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதனை கொண்டாடும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா முன் விமானத்தில் சரக்கு வாங்கும் தனுஷ், "அய்யயோ.. எப்படிதான் இதெல்லாம் குடிக்கிறாங்களா.. எல்லாம் இந்த மேனேஜர்க்காக.. ஐ ஃபீல் வெரி ஷய்" என்று சொல்வார். அதில் வரும் சிஎஸ்கே அணியாக தனுஷையும், மும்பை அணியாக நயன்தாராவையும் மாற்றி, "எப்படி தான் 9வது இடத்தில் எல்லாம் இருக்காங்களோ.. ஓ காய் தீஸ் பல்தான்ஸ்.. ஐ ஃபீல் வெரி ஷய் டூ கால் யூ பங்காளி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

கடந்த ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் 61 டாட் பால்கள் வீசி கேகேஆர் அணி, "Eco Friendly Knights" என்று போஸ்ட் போட்டு சிஎஸ்கே ரசிகர்களை சீண்டியது. இந்த முறை அதே சேப்பாக்கம் மண்ணில் கேகேஆர் அணியை சிஎஸ்கே வீழ்த்தி இருக்கிறது. இதனை வீரம் படத்தில் வரும் அஜித்தாக சிஎஸ்கே அணியையும், வில்லனாக கேகேஆர் அணியையும் மாற்றி, "என்ன தங்கம் செளக்கியமா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிகிட்டாரு ஒருத்தரு ரகம்.

கில்லி படத்தில் விஜய்யின் அப்பாவிடம் மாட்டிக் கொள்ளும் தாமு, சொக்காவை விட்டா தான் லீடர் எங்க இருக்கானு சொல்லுவேன் என்பார். அதில் வரும் விஜய்யின் அப்பாவாக சிஎஸ்கே அணியையும், தாமுவாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, அதெல்லாம் தெரியாது.. ஹாட்ரிக் வின் பண்ணா தான் ஓஜி சிஎஸ்கே என்று நம்புவேன் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இன்னும் உங்களிடம் இருந்து அதிக எதிர்பார்க்கிறோம் மொமெண்ட்.

சில்லுனு ஒரு காதல் படத்தில், தனி ரூம் கேட்டு வடிவேலு பிரச்சனை செய்வார். அவரை சூர்யா, நீ ஊருக்கு கெளம்பு.. எந்த பிரச்சனையும் இல்லை என்று பதில் அளிப்பார். அதில் வரும் சூர்யாவாக கேகேஆர் அணி ரசிகர்களையும், வடிவேலுவாக கேமரூன் க்ரீனையும் மாற்றி, நீ "ரூ.25 கோடி கூட திருப்பி கொடுக்க வேண்டாம்.. நீ ஆஸ்திரேலியாவுக்கே கெளம்பு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுடா சாமி ரகம்.

தாய்க்கிழவி படத்தில் அம்மாவின் உயிரை காப்பாற்ற ஒரு நபரை வேலைக்கு வைத்து விளக்கு போடுவார் பால சரவணன். அப்போது வந்து, அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.. வேலைக்கு ஆள் போட்டுட்டேன் என்பார். அதில் வரும் பால சரவணனாக அம்பானியையும், அந்த குடிகார நபராக கேகேஆர் அணியையும் மாற்றி, "எவ்வளவு தோற்றாலும் இந்த சீசன் 10வது இடத்திற்கு போவ மாட்டோம்.. சம்பளத்திற்கு ஆள் போட்டுட்டேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குஜிலி மஸ்த் ரகம்.













Click it and Unblock the Notifications