என்னடா பேசவே மாட்ற.. ஒரு நாளைக்கு 50 ரீல்ஸ் அனுப்புறடா!
சமூக வலைத்தளங்கள் இன்று நம்ம வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. வேலைக்கோ, பொழுதுபோக்குக்கோ, தகவல் அறியவோ பயன்படுத்துவது நல்லதே. ஆனாலும், பலர் எந்தத் தேவையுமின்றி அதில் மூழ்கி கிடப்பது தான் அதிகம்.
உதாரணமாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ். "இன்னொரு வீடியோ மட்டும் பாத்துட்டு போகலாம்"ன்னு நினைச்சா, மணி நேரங்கள் போயிடும். அதில் இருக்கும் சின்ன சின்ன காமெடி, டிரெண்ட், மியூசிக் எல்லாம் நம்மை ஈர்க்கும். ஆனா அதே சமயம் நேரத்தை சாப்பிட்டு விடும். இது காலையில் ஆரம்பித்து சில நேரங்களில் விடிய விடிய போகிறது.

க்ரியேட்டர்கள் ஒரு பக்கம் நம்மை கவரும் வகையில் நல்ல கான்டென்ட் உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு அது ஒரு தொழிலாகவும், வருமானமாகவும் இருக்கிறது. ஆனால் பார்ப்பவர்கள் பெரும்பாலும் சும்மா நேரத்தை கடத்திக்கிட்டு இருப்பதால தான் அதுவே பிரச்சனையா மாறுகிறது.
சில நேரங்களில் ரீல்ஸ், மீம்ஸ் பார்த்து மனசு சிரிச்சு ரிலாக்ஸ் ஆகலாம். ஆனா அதில் கட்டுப்பாடு இல்லாம மூழ்கி கிடந்தா, தினசரி வேலை, படிப்பு, தூக்கம் எல்லாத்தையும் பாதிக்க ஆரம்பிச்சிடும். இது நமக்கே தெரியும் ஆனாலும் இவை அந்த அளவுக்கு ஆட்டி படைக்கின்றன.
அதனால சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்தறோம், எவ்வளவு நேரம் அதற்கு ஒதுக்குறோம் என்பதுதான் முக்கியம். இல்லன்னா நம்ம வாழ்க்கையை நாமே கையில் விட்டு, அந்த ஆப்ஸ்களுக்கு அடிமையா ஆகிடுறோம்.











Click it and Unblock the Notifications
