உண்டியல் சத்தம் கேக்குதே.. டெஸ்ட் மேட்ச் வந்தது ஒரு குத்தமாடா!
சென்னை: லண்டன் ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் , கிரிக்கெட் ரசிகர்களை மூச்சுத்திணற வைத்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித், அஷ்வின், ஷமி போன்ற அனுபவசாலிகள் இல்லாத சூழ்நிலையிலும், இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த வெற்றியின் நாயகன் முகம்மது சிராஜ் தான் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். காயம் இருந்தும் முழு மன உறுதியுடன் பந்துவீசி 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் தூணாக இருந்துள்ளார் சிராஜ்.

அதேபோல், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் கையில் அடிபட்ட நிலையிலும் ஒற்றைக் கையுடன் களமிறங்கி தனது அணிக்காக போராடினார். கிட்டத்தட்ட இந்த டெஸ்ட் தொடர் ஒரு படம் பார்த்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. கடைசி வரை ரசிகர்களை பதட்டத்தில் வைத்து, ஒரு விறு விறுப்பான படத்தின் கிளைமாக்ஸிற்காக காத்திருப்பது போல உணர வைத்துள்ளார்கள்.
இந்தியாவின் இந்த வெற்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக உள்ளது. கிரிக்கெட் வீரர்களை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பலர் பதிவுகள், மீம்ஸ்களை வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.





















Click it and Unblock the Notifications