இப்பச் சொல்லுங்கய்யா.. அந்தப் பொண்ணுங்க ஹெலிகாப்டர் கேட்டது சரியா?? தவறா??
சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்டு வரும் திடீர் திடீர் பள்ளங்களை வைத்து நெட்டிசன்கள் இன்டர்நெட்டில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்டு வரும் திடீர் திடீர் பள்ளங்களை வைத்து நெட்டிசன்கள் இன்டர்நெட்டில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். எப்போது என்ன ஆம்னே தெரியல என்றும் அவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் பல ரோட்டுக்கு கீழே வாகனங்கள் செல்வத் நம்ம ஊரு நவீன தொழில் நுட்பம் என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றன. மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதோடு சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்டு வரும் பள்ளங்களை ஒப்பிட்டு கிண்டலடித்துள்ள நெட்டிசன்கள் சாலையை சரியா போடுங்கள் என்றும் தங்கள் ஸ்டைலில் வலியுறுத்தியுள்ளனர்.
அண்ணா சாலை பள்ளத்தை வைத்து கலாய்துத்து ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
அண்ணா பள்ளத்தாக்குனு..
அண்ணாசாலைனு ஒரு ஏரியா இருக்கவே இருக்காது. எல்லாம் பூமிக்குள்ள போயிரும்.. அப்பறம் அண்ணாசலைங்கற பேர எடுத்துட்டு அண்ணா பள்ளத்தாக்குனு வைக்க வேண்டிதேன்...
என்னங்க சார் உங்க சட்டம்!!
ரோடு ஒழுங்கா போடுங்க சார்.. என்னங்க சார் உங்க சட்டம்!! மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அண்ணாசாலை பள்ளத்துடன் ஒப்பிட்டு ஒழுங்கா ரோடு போட சொல்கிறது இந்த மீம்..
அடி பூராம் இடுப்புக்கு கீழதான்..
மண்டைல அடி பட்டா ஹெல்மெட் போடலாம், வண்டில போற போக்குல ரோடு பொத்துக்கிட்டு உள்ள போகுது அடி பூராம் இடுப்புக்கு கீழதான்டா விழுகுது... என சாலையில் ஏற்படும் திடீர் பள்ளங்களை கலாய்க்கிறது இந்த மீம்..
ஹெலிக்கப்டர் கேட்டது சரியா?? தவறா??
சென்னை அண்ணாசாலையில் மீண்டும் பள்ளம்- இப்ப சொல்லுங்க பொண்ணுங்க ஹெலிக்கப்டர் கேட்டது சரியா?? தவறா??
மிகவும் ஆபத்தான சாலை
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சென்னையில் மிகவும் ஆபத்தான சாலை.. வாருங்கள் இந்த புதைக்குழியில் சிக்காமல் கடந்து செல்லும் யுக்தியை நானும் எனது குழுவும் கற்று தருகிறோம்...
எப்போ என்ன ஆகும்னே தெரியலயே!!
யப்பா... இனி அந்த வழியா போகும்போது ஒரு பயத்தோடய போகனும் போல... எப்போ என்ன ஆகும்னே தெரியலயே!! என்கிறது இந்த மீம்...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications