ரொம்ப நேரமா மெசேஜ் பண்ணினேன்.. ரிப்ளை வரல.. டிபியும் காட்டல.. அதான் ஜிபேல வந்துட்டேன்!
சென்னை : மாதக் கடைசி என்றாலே மாதச் சம்பளக்காரர்கள் கையில் பணமிருக்காது. அதனால் வழக்கம், 'கஜானாலே காசில்லே..' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
'ஆயிரம் பேர் அட்வைஸ்பண்ணினாலும் கொடுக்க முடியாத நம்பிக்கையை.. பாக்கெட்டில் இருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து விடும்' என யதார்த்தமான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் தத்துவ மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மாதத்தின் துவக்கம் என்றில்லை.. எப்போது யாரைக் கேட்டாலும் கையில் காசில்லை என்பதுதான் அவர்களது மாபெரும் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் மாதச்சம்பளக்காரர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மாதக்கடைசி வந்து விட்டால் அவர்களது நிலைமை மிகவும் பாவம்தான். அன்றாடச் செலவுகளுக்கே பணம் இல்லாமல், அடுத்தவர்களிடம் கேட்க வேண்டியதாகி விடுகிறது.
சமயங்களில் மீம்ஸ் போட்டு நாசூக்காக மற்றவர்களிடம் கடன் கேட்பதையும் வழக்கமாக்கி இருக்கின்றனர் நம் மக்கள். இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளப் பக்கங்களில், 'கையில் காசில்லை.. வீட்டுக் கஜானாவிலும் காசில்லை' என பணம் பற்றிய மீம்ஸ்களைப் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications